இடுகைகள்

துளிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிக்கு செய்யும் நன்றிக்கடன்! - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி

படம்
கடிதங்கள்  வினோத் பாலுச்சாமி அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் மழை வருவது போலவே சூழல் உள்ளது. நாள் தங்கியுள்ள அறை முழுவதும் மழை ஈரத்தால் நனைந்துவிட்டது. இதனால், அறையின் சுவர்களில் பூஞ்சைகள் கரும்பச்சை நிற பூக்களாய் பூக்கத் தொடங்கிவிட்டது. அருகர்களின் பாதை - ஜெயமோகன் இன்றுதான் படித்து முடித்தேன். சமணர்களின் வாழ்க்கை , வரலாறு, உணவு, தர்மச்சாலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஆரியர், பாஜக, தேசியவாதம் தவிர்த்த பிற விஷயங்கள் நன்றாக உள்ளன.  எங்கள் இதழின் தயாரிப்பு இன்னும் தொடங்கவில்லை. பல்வேறு சூழல்களால் வேலை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. வேலையை செய்வதற்குள் எனக்கு இன்னொரு வயது கூடிவிடுமோ என்று பயமாக உள்ளது. நான் தங்களுக்கு அனுப்பி வைத்த ஜென் கதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன். நான் பரிசாக முதல்முறையாக உங்களுக்குத்தான்  நூலை அனுப்பி வைத்திருக்கிறேன். இப்படி அனுப்புவது பற்றி முதலில் நம்பிக்கை வரவேயில்லை.  குளங்களை தூர்வாரிய செல்ல பெருமாள் பற்றிய செய்தியை ஆனந்த விகடனில் படித்தேன். நல்லவேளை, அவர் தனது பணிக்கு ஊக்கம் தந்தது குக்கூ அமைப்புத

அறிவியலை மாணவர்களுக்கு விளக்கும் 50 கட்டுரைகள்!- துளிர் அறிவியல் கட்டுரைகள்

படம்
            துளிர்  அறிவியல் கட்டுரைகள் ப. 152 விலை ரூ. 150 இந்த நூலில் துளிர் இதழில் வெளியான 50 முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துமே பொதுமுடக்கம் காரணமாக பிடிஎப் வடிவில் வெளியான துளிர் இதழ்களி்ல் வெளியானவை.  படிக்க ஏதுவான கட்டுரைகள் என்பதை விட நிறைய விஷயங்களைக் கொண்டுள்ள கட்டுரைகள் என்ற நோக்கில் படித்தால் ஏமாற்றங்களை சந்திக்காமல் இருக்கலாம்.  சோப்புகளை எப்படி வீட்டில் தயாரிப்பது என்ற கட்டுரை சிறப்பாக இருந்தது. எலும்புன்னா எனக்கு பிடிக்குமே என்ற கழுகு பற்றிய கட்டுரை, நோபல் பரிசு 2020, மணற்குளி நண்டுகள் ஆகியவற்றை படிக்க சிறப்பாக இருந்தன.   இந்த நூலில் இயற்பியல் வானியல், உயிரியல், வேதியியல், இயற்பியல் என பல்வேறு பிரிவுகள் பேசப்படுகின்றன. கட்டுரைகள் வழியாக அறிவியல் சார்ந்த அணுகுமுறையை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் படிக்கத் தெரிந்த குழந்தைகள் இந்நூலை படிக்க நினைத்தால் இதிலுள்ள தகவல்கள் அவர்களை ஆச்சரியப்படுத்தும் என்பது உறுதி.  கோமாளிமேடை டீம் நன்றி  பாலபாரதி பிரபாகர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்