இடுகைகள்

தூங்கும் நிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆளுமையை மாற்றும் தூங்கும் நிலைகள்!

படம்
giphy.com மிஸ்டர் ரோனி தூங்கும் பொசிஷன்கள், நமது ஆளுமையை மாற்றுமா? தூங்குவது, சாப்பிடுவது தவிர்த்து நாம் என்ன செய்கிறோமோ அதை வைத்துதான் இவர் இப்படி, அவர் இப்படி என அனுமானம் செய்கிறார்கள். வரையறுக்கிறார்கள். இந்த விஷயத்தை 2012ஆம் ஆண்டு வெஸ்ட் செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இதனால் ஆளுமைக்கும் தூங்குவதற்கும் பெரிய தொடர்பில்லை என நினைக்கலாம். ஆனால் 2014ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, பேரா.ரிச்சர்ட் வைஸ்மன் தூங்கும் நிலைகளுக்கும் ஒருவரின் ஆளுமைக்கும் தொடர்புண்டு என சொல்லியிருக்கிறார். இடதுபக்கம் சாய்ந்து படுப்பவர்கள் கிரியேட்டிவிட்டி பொங்கும் ஆட்கள் எனவும், அருகில் உள்ள மனைவிக்கு நெருக்கமாக படுத்து தூங்கும் ஆட்கள் ஜோவியலான ஆட்கள் என்றும் ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டு உள்ளார். குப்புறப்படுத்து தூங்கும் என்னைப்போன்றவர்களை சுயநம்பிக்கை இல்லாதவர்கள் என்று வேறு கூறியிருக்கிறார். உண்மையா இல்லையா என நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். நன்றி - பிபிசி