இடுகைகள்

ஃபோர்ப்ஸ் 30/30 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஃபோர்ப்ஸ் 30 / 30

படம்
ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெறுவது என்பது பலரின் கனவு.  இதில் ஆசியாவைச்சேர்ந்த முப்பது முன்னோடி தொழில்முனைவோர் இடம்பெற்றுள்ளனர். 23 நாடுகளிலிருந்து வந்த 2000 விண்ணப்பங்களிலிருந்து 300 பேர்களைத்தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் சிலரைப் பார்ப்போம். லியு லியுவான்(29), லியாவோ வென்லாங் (29)(கவாரோபாட், சீனா) தானியங்கி தொழில்நுட்பம்தான் லியு, லியாவோவின் ஐக்யூ சொத்து. 2015 ஆம் ஆண்டு கார்களை தானியங்கி முறையில் உருவாக்க முயற்சித்தவர்களுக்கு கைகூடியது சூட்கேஸ்தான். ஆம் சூட்கேஸை நீங்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இழுத்து வருகிறீர்கள் அல்லவா? இனி அது தேவையில்லை. அதுவே உங்களை ஃபாலோ செய்யும். தொந்தி அங்கிள் இடிக்கிறா, மயிலாப்பூர் மாமி தடுக்கிறாரா அத்தனையையும் ரோவர் சூட்கேஸ் சமாளித்து உங்களை பின்பற்றும். சீனாவில் 800 டாலர்களுக்கு விற்கும் இந்த சூட்கேஸ் வெளிநாடுகளில் 66 டாலர்கள் அதிகமாக சேல்ஸ் ஆகிறது. 12 ஆயிரம் சூட்கேஸ்களை விற்று சாதனை செய்தவர்கள் அதோடு நிற்கவில்லை. அடுத்து ட்ரக்குகளை தானியங்கி முறையில் செயல்படுத்தி விற்கத் தொடங்கிவிட்டனர். 50 ட்ரக்குகளை விற்றவர்கள், தானியங்கி பயணிகள் கா