இடுகைகள்

ஒட்டுண்ணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா வைரஸ் - கேள்வி பதில்கள்!

படம்
படம்: jPharmaceutical Technology மிஸ்டர் ரோனி ஃப்ளூவுக்கான தடுப்பூசியை கொரோனாவுக்குப் பயன்படுத்தலாமா? குறிப்பிட்ட வைரசுக்கான ஊசி, அந்த வைரசை மட்டுமே தடுக்கும். கொரோனாவுக்கான மருந்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே நீங்கள் ஃப்ளூவுக்கான மருந்தை பயன்படுத்தினால் கொரோனா கட்டுப்படாது. அதற்கு தனி மருந்துகள் சிகிச்சை தேவை. யாரை எல்லாம் தாக்கும்? இப்போதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தோராய வயது 65. இதுதான் வயது என்றில்லை. நமக்கு இப்போது கிடைத்த தகவல்படி இந்த வயது என புரிந்துகொள்ளலாம். ஃப்ளூ காய்ச்சலைப் பொறுத்தவரை இரண்டு வயதிலிருந்து பாதிப்பு தொடங்குகிறது. இதை என்ன சொல்லுவீர்கள்? கர்ப்பிணி பெண்களையும் ஃப்ளூ பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை பல்வேறு நுண்ணுயிரிகளும் பாதிக்கும். எந்த விலங்குகளிலிருந்து வைரஸ் பரவுகிறது? பாம்பு என நண்பர் கொரோனா வைரஸைக்குறிப்பிட்டு அதிரடியாக சொன்னார். ஆனால் உண்மையில் வௌவால்கள், பன்றிகள், கொசு, ஈக்கள் ஆகியவற்றிலிருந்தே அதிகளவு வைரஸ் தொடர்பான நோய்கள் மனிதர்களுக்கு பரவுகின்றன. வைரஸ்களுக்கு உயிருண்டா? செல்களை சுயமாக பெரு

குணத்தை மாற்றும் மூளை ஒட்டுண்ணி!

படம்
பூனைகளிடமிருந்து பரவும் டோக்ஸோபிளாஸ்மா ஒட்டுண்ணி எலிகள், பிற விலங்குகளிடமிருந்து பரவி மனிதர்களையும் தாக்கியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் டோக்ஸோபிளாஸ்மா ஒட்டுண்ணி பாதிப்பு கொண்டவர்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஒட்டுண்ணி பாதிப்பால்  சிசோபெரெனியா, குணமாறுபாடு, தற்கொலை எண்ணம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது நேரடியான பாதிப்பை ஒருவருக்கு உடலில் ஏற்படுத்துவதில்லை. டோக்ஸோபிளாஸ்மா ஒட்டுண்ணி ஒரு செல்லைக் கொண்டது. பறவைகள் முதல் பெலுகா திமிங்கலங்கள் வரை பாதிக்கிறது. பெரும்பாலும் பூனைகளிடமிருந்து பிற விலங்குகளுக்கு பரவுகிறது. முக்கியமாக பரவும் வழி, பாலுறவு. பூனைகளின் மலம் மூலமாக பிற விலங்களுக்கு பரவுகிறது. காற்று ஊடகமும் இதற்கு ஒத்துழைக்கிறது. மூளை, இதயம், கபாலத் தசை ஆகியவற்றை இந்த ஒட்டுண்ணி பாதிக்கிறது. டோக்ஸோபிளாஸ்மா, பாதித்த எலி பூனையைக்கண்டு பயப்படாமலிருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதிர்ந்தனர். இந்த ஒட்டுண்ணியின் பாதிப்பு மறைமுகமாக ஏடிஹெச்டி பாதிப்பு ஏற்படவும் காரணம் என மற்றொரு வகையில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. நன்றி : தி கன்ச