விடுமுறையில் கேம்ப் அடித்து உற்சாகம் கொள்ளும் சீனர்கள்!
விடுமுறையைக் கொண்டாட கேம்ப் அடிப்போம்! காட்டுக்குள், மலைப்பகுதிக்குள், பாலைவனத்திற்குள் வேலையாக செல்பவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு டெண்ட் கொட்டாய்களை அமைப்பார்கள். இதை அனைவரும் பார்த்திருப்போம். சில இடங்களில் கேம்ப்புகளில் தங்கியும் இருப்பீர்கள். சீனாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டால், மக்கள் உடனே மலைப்பகுதி, காடுகளின் அருகில் சென்று கேம்புகளை அமைத்து தங்கி ஓய்வெடுக்கிறார்கள். இதற்காகவே சீனாவில் கேம்புகளை அமைத்துக்கொடுக்க ஏராளமான தனியார் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிறுவனங்கள், டெண்ட்கொட்டாய் துணிகளை மட்டும் வழங்குவதில்லை. பிறந்தநாள் விருந்து, காதலைச் சொல்லப் போகும் தம்பதிகளுக்கான முன் ஏற்பாடுகள் என காலத்திற்கேற்ப மாறியிருக்கிறார்கள். கேம்பில் தங்குபவர்களுக்கான உணவுகளையும், அந்த இடத்திலேயே புதுமையாக அமைத்துக் கொடுத்து காசு வாங்கி கல்லா கட்டி வருகிறார்கள். கேம்புகளை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் போட்டியும் கூடி வருகிறது. குடும்பங்களாக சென்றால் குழந்தைகளை சமாளிக்கவேண்டுமே அவர்களுக்கென மண்பானை செய்வது, தோல் பொருட்களை செய்வது என பல...