இடுகைகள்

சுரண்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயநலமான மனிதர்கள், சமூகம், அரசியல்வாதிகளால் சுரண்டப்படும் உள்நாட்டு அகதியின் வாழ்க்கை!

படம்
        மனோரஞ்சன் பியாபாரி, எழுத்தாளர்     இன்ட்ரோகேட்டிங் மை சந்தால் லைஃப் மனோரஞ்சன் பியாபாரி சிறுவயதில் தான் பிறந்தவுடனே தனது நாக்கில் வைக்க வீட்டில் தேன் இல்லை என்று மனோரஞ்சன் கூறுகிறார் . அப்படி இனிப்பு வைக்கப்படும் குழந்தைக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை . நூலில் இந்த பகுதியை படிப்பவர்களுக்கு இது பெரிதானதாக தோன்றாது . ஆனால் மனோரஞ்சனின் வாழ்க்கை மோசமாகவே அமைகிறது . இனிப்பு என்ற சுவையே உண்ணாதவன் , அறியாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும் ? இவரது வாழ்க்கையும் அப்படித்தான் . இந்த சுயசரிதை பலரையும் அச்சப்படுத்தக்கூடியது . பீதியூட்டக்கூடியது . அந்தளவு சாதியால் , துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர் . மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மனோரஞ்சன் . இன்று அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார் . ஆனால் அவரது தொடக்க , மத்தியகால கட்ட வாழ்க்கை என்பது புழுத்த நாய் குறுக்கே போகாது என வசைபாடுவதைப் பற்றி தி . ஜா கூறுவார் . அதைப்போலத்தான் உள்ளது . அந்தளவு நெருக்கடிகள் . வறுமை , வேலை செய்து சம்பளம் கிடைக்காதது , ரயில்வே ஸ்டேஷனில் தூங்குவது , ரயிலில் டிக்கெ

இந்தியாவை பிரிட்டிஷார் சுரண்டிய வரலாறு! - இந்தியாவின் இருண்டகாலம் - சசி தரூர்

படம்
  இந்தியாவின் இருண்டகாலம் சசிதரூர் தமிழில் ஜே கே ராஜசேகரன் கிழக்கு பதிப்பகம் நூலை தொடங்கும்போது, சசிதரூர் தான் இங்கிலாந்து அரசுக்கு வைத்த கோரிக்கை ஒன்றை முன்வைத்து தொடங்குகிறார். 200 ஆண்டுகளாக காலனி நாடாக இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். இந்த ஆட்சியில் இந்தியாவை சுரண்டியதற்கு அடையாளமாக நஷ்ட ஈடு தரவேண்டும். குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பேசுகிறார். பின்னாளில் இப்பேச்சுக்கு ஆதரவாக எதிர்ப்பாக நிறைய கருத்துகள் எழுகின்றன.  இவற்றை முன்வைத்து நூல் மெல்ல பல்வேறு தகவல்களை பேசத் தொடங்குகிறது. அட்டையில் பிரிட்டிஷார் இந்தியாவை கொள்ளையடித்த கதை என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தான் நூலில் சொல்லுகிறார். வித்தியாசம் என்னவென்றால், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நிறைய வசதிகளைக் கொடுத்ததாக பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தது என்பதற்கு இந்தியா நிறைய விலை கொடுத்திருக்கிறது என்பதை சசிதரூர் பல்வேறு ஆதாரங்கள் வழியாக விளக்குகிறார்.  ரயில்வே, சட்டம், நிர்வாக முறைகள் ஆகியவற்றை பிரிட்டிஷாரின் கொடை என்பார்க்ள். இன்று நூலை நன்கொடை என பெரிய விலை போட்டு விற்கிறார்க

பிரிட்டிஷாரை பிற நாட்டு மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்! - எழுத்தாளர் வில்லியம் டால்ரைம்பிள்

படம்
            வில்லியம் டால்ரைம்பிள் இவர் company quartet என்ற பெயரில் நான்கு நூல்களை பாக்ஸ் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார் . அடுத்தும் பெட்டி பெட்டியாக நூல்களை எழுதும் ஆராய்ச்சி செய்து வருகிறார் . அவரிடம் பேசினோம் .    ஜேஎல்எப் பார்முலா வேலைகளை எதற்காக ஒப்புக்கொண்டீர்கள் . மக்கள் இப்போது படிப்பதை விட பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதாலா ? எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளைப் பற்றி பேசவேண்டுமென இந்தியர்கள் விரும்புகிறார்கள் . மேலும் நாங்கள் எழுதும் நூல்கள் பத்து லட்சம் பேரில் ஒரு பகுதிப்பேர் மட்டுமே படிக்கவேண்டுமென உருவாக்குவதில்லை . நீங்கள் கூறுவதும் சரிதான் . நிறையப் பேர் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு குளிர் கண்ணாடிகளை அணிந்துகொண்டுதான் வாசிப்பு விழாக்களுக்கு வருகிறார் . ஆனால் இதிலும் கூட இளைஞர்கள் ஜெய்ப்பூர் இலக்கிய விழாக்களில் பங்கெடுத்து கேள்விகளை கேட்கத் தொடங்கியுள்ளனர் .    காலனித்துவ காலத்தை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம் இங்கிலாந்தில் அமைக்கப்பட வேண்டுமென கூறுகிறார்கள் . ஆனால் தங்களது மூதாதையர்கள் செய்த பாவங்களை மக்கள் மறக்க விரும்பி அத

குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்தும் டெக் நிறுவனம்!

படம்
அமேசானின் அலெக்சா ரக டெக் ஐட்டங்களை உருவாக்க சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பயன்படுத்தி வருவது வெளியாகி உள்ளது. சீனாவில் 1500 சிறுவர்கள் இம்முறையில் பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை இன்டர்ன்ஷிப் என்ற பெயரில் ஆசிரியர்கள் சகிதமாக வந்து வேலை செய்து அப்பணத்தைப் பெறுகின்றனர். இது சீன தொழிலாளர்துறை விதிகளை மீறிய செயல் என தி கார்டியன் செய்தித்தாள் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றி சீனாவின் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பு, அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்படும் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பும் ஆதாரங்களை திரட்டியுள்ளது. இச்செய்தி பற்றி ஃபாக்ஸ்கான், நாங்கள் பள்ளி மாணவர்களை ஓவர்டைம் மற்றும் இரவுகளில் வேலைபார்க்க வைப்பதை தவிர்ப்போம் என்று கூறியுள்ளது. ”முதலில் எட்டுமணிநேரம் என்றுதான் ஆசிரியர் கூறினார். ஆனால் பின்னர் பத்து மணிநேரம் வேலை என்று ஃபாக்ஸ்கான் மேலாளர்கள் மிரட்டுகின்றனர். வேலை செய்யாவிட்டால் உதவித்தொகை கிடைக்காது என அச்சுறுத்தலும் உள்ளது” என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவர் ஒருவர். இதனையும் சீனாவைச்சேர்ந்த தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.