இடுகைகள்

கொல்கத்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தி சினிமாக்களில் விலைமாதுக்களின் நிலை!

படம்
  பாலியல் தொழிலாளிகளையும் மதிக்கவேண்டும். அவர்கள் செய்வதும் தொழில்தான். விலைமாதுக்களையும் கௌரவமாக நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கௌரவம் நிஜமாக கிடைக்குமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் திரைப்படங்களில் விலைமாதுக்களை காட்டிய சினிமாக்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். இது இந்தி சினிமாக்கள் மட்டுமே.  பேகம் ஜான்  பீரியட் படம்தான். முகேஷ் பட் தயாரிக்க 2017இல் வெளியான படம். சுதந்திரத்திற்கு பிறகான விலைமாதுக்களின் நிலையைப் பேசிய படம் இது. வித்யாபாலன் தான் விலைமாதுக்களின் தலைவி. வங்காளப் படமான ராஜ்கஹினி என்ற படத்தின் இந்தி ரீமேக் இது.  மண்டி  1983ஆம் ஆண்டு ஷியாம் பெனகல் உருவாக்கிய படம்தான் மண்டி. படத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா படேல், நஸ்ரூதின் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதன் மூலம் உருது சிறுகதை. ஆனந்தி என்ற சிறுகதையை எழுதியவர் குலாம் அப்பாஸ். விபச்சாரத்தை நடத்துபவராக தலைவியா ஷபனா ஆஸ்மி நடித்திருந்தார். இவரது கட்டுப்பாட்டில் உள்ளவருக்கு உருவாகும்  இன்னொரு உறவால் ஏற்படும் பாதிப்புகள்தான் கதை. காமம், உடல்ரீதியான மகிழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிய பேசிய வகையில் முக்கியமான படம். 1984ஆம் ஆண்டு மண்டி ப

ஆனந்த பஜார் பத்திரிகையின் பயணம்- நூற்றாண்டு கொண்டாடும் பத்திரிகை -2

படம்
அவீக் சர்க்கார், ஏபிபி குழுமம்,கொல்கத்தா  அசோக்குமாரின் மூத்தமகன் அவீக். இவர் இங்கிலாந்தில் புகழ்பெற்ற  பத்திரிகையாளர் ஹெரால்ட் ஈவன்ஸிடம் வேலை செய்தார். ஹெரால்ட் ஈவன்ஸ், தி டைம்ஸ், சண்டே டைம்ஸ் நாளிதழ்களில் ஆசிரியராக சாதித்தவர். இவர் காலத்தில்தான் அந்த நாளிதழ்களில் பல்வேறு புலனாய்வு செய்திக்கட்டுரைகள் வெளியாயின. பத்திரிகையும் மெல்ல வளர்ச்சி பெற்றது. பிறகு ரூபர்ட் முர்டோக் நிறுவனத்தை வாங்கியவுடன் ஈவன்ஸ் வெளியேற்றப்பட்டார். அவரிடம் பத்திரிக்கை வேலைகளைக் கற்றவர் அவீக் சர்க்கார்.  1983ஆம் ஆ ண்டு அசோக் குமார் திடீரென காலமானார்.  அவீக் சர்கார் தனது சகோதரர் அனுப்புடன் சேர்ந்து ஆனந்தபஜார் பத்திரிகையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். ஆனந்தபஜார் பத்திரிகை பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரத்திற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டது. பின்னாளில், இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு நேருவின் கொள்கைகளை பின்பற்றியது. வங்கப்பிரிவினை சம்பவம் நடைபெற்றபோது, விடுதலைக்கு ஆதரவாக ஆனந்தபஜார் செயல்பட்டது.  அப்போது வங்காளத்தில் தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கை முதலிடத்தில் இருந்தது. கல்வி கற்றவர்கள் இந்த பத்திரிக்கையைத்தான் வாங்கி படி

உடன்கட்டை ஏறும் கொடூரத்தை ஒழித்த ராஜாராம் மோகன் ராய்!

படம்
  சதி - உடன்கட்டை ஏறும் பழக்கம் ராஜாராம் மோகன்ராய் இந்திய வரலாற்றில் ராஜாராம் அளவுக்கு எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தெரியவில்லை. அண்மையில் தெலுங்கில் வெளியாகி பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்ட ஷியாம் சிங்கா ராய் படம் கூட ராஜாராம் மோகன் ராயின் சீர்திருத்த தன்மையை தழுவி எடுக்கப்பட்டிருந்த படம்தான். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் பிரிட்டிஷாரோடு சேர்ந்து முயன்றார் ராஜா.  கணவர் இறந்தபிறகு மனைவியை நெருப்பிட்டு கணவரின் தகனமேடையில் உயிரோடு எரிப்பதுதான் சதி எனும் பழக்கம். இந்த கொடூரத்தால் நிறைய பெண்கள் வாழ நினைத்தும் வேறுவழியின்றி படுகொலை செய்யப்பட்டனர். அப்போது குழந்தை திருமணமும், சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் சமூகத்தில் புழக்கத்தில் இருந்தது. இதனை ராஜாராம் மாற்ற நினைத்து போராடினார்.  வங்காள மாகாணத்தில் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பிறந்தவர், ராம் மோகன் ராய். இவர், ஹூக்ளியில் உள்ள ரத்னாகர் நகரில் பிறந்தார். இந்து குடும்பத்தில் பிறந்த ராய், சமஸ்கிருதம், பெர்சியன், ஆங்கிலம், அரபி,

சூழலுக்கு உதவும் மீன்பிடிபூனை! - சூழலியலாளர் தியாசா ஆத்யா

படம்
தியாசா ஆத்யா கோல்கட்டாவைப் பூர்வீகமாக கொண்டவர், தியாசா ஆத்யா.  கல்லூரியில் உயிரியலாளராக  பயிற்சி பெற்றார். தனது 22 வயதில் இயற்கைப் பாதுகாப்பு பணிகளைச் செய்யத் தொடங்கினார். முதல்பணியாக, சுந்தரவனக்காடுகளில் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாக்கும் பணியை செய்தார்.  காட்டுயிர் பாதுகாப்பு சங்கத்தின் இயக்குநரான வித்யா ஆத்ரேயாவை, தனது வழிகாட்டியாக தியாசாக கருதுகிறார். அமெரிக்க சிறுபூனை பாதுகாப்பாளரான ஜிம் சாண்டர்சன் (Jim sanderson), மூலம் பூனை இனங்களைப் பற்றிய ஆராய்ச்சியை தியாசா தொடங்கினார். மீன்பிடி பூனைக்கு மீன்தான் முக்கியமான உணவு. இதன் உரோமங்கள், நீர் உடலை நனைக்காதவாறு பாதுகாக்கிறது. இப்பூனையின் கால்கள், வலை போன்ற அமைப்பிலானவை. கால்களிலுள்ள நகங்கள், மீன்களைப் பற்றிப் பிடிக்க உதவுகிறது.  மேற்குவங்கத்தில் சதுப்புநிலங்களைக் காக்க க்ரௌட் ஃபண்டிங் முறையில் நிதி சேகரிக்கப்படுவதில் தியாசா முக்கியமான பங்காற்றியுள்ளார். பப்ளிக், ஹீல் ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 2010ஆம் ஆண்டு தி ஃபிஷ்ஷிங் கேட் ப்ராஜெக்ட் (TFCP)என்ற திட்டத்தை தொடங்கினார். இதன்மூலம் சதுப்புநிலத்தையும் அதில் வாழு

சிறிய விஷயங்களை பேரன்போடு செய்யமுடியுமா? - அன்னை தெரசா

படம்
  அன்னை தெரசா அன்னை தெரசா  ஊக்கமூட்டும் வாழ்க்கைப் பயணம் அல்பேனியக் குடும்பத்தின் வாரிசு. 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்ற பிறந்தார். மாசிடோனியாவில் பிறந்தவரின் இயற்பெயர் ஆக்னஸ் கான்க்ஸா போஜாக்ஸ்ஹியூ. பனிரெண்டு வயதிலேயே மிஷனரி அமைப்பில் சேர்ந்து வேலை செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டார்.  பதினெட்டு வயதில் அயர்லாந்திலுள்ள லாரெட்டோ அமைப்பில் சேர்ந்து ஆங்கிலத்தை கசடற கற்றுக்கொண்டார். பிறகு தெரசா என பெயர் மாற்றப்பட்டது. 1929ஆம் ஆண்டு முதல் தனது குடும்பத்தை துறந்தார்.  பதினேழு ஆண்டுகள் கன்னியாஸத்ரீயாக பணியாற்றினார். அப்போது அவரை சுற்றி வாழ்ந்த மக்களின் வறுமை அவரது மனத்தை வருத்தியது. எனவே இந்த காலத்தில்தான் அவரது மனதில் கேட்ட குரலுக்கு செவி சாய்த்தார். வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி தேடுபவர்களுக்கு உதவ நாம் தெருவில் இருக்கவேண்டும் என முடிவெடுத்தார். எனவே வாடிகனில் அனுமதி பெற்று தி மிஷனரிஸ் ஆப் சாரிட்டி  என்ற அமைப்பைத் தொடங்கினார். செயல்பாடு 1950ஆம் ஆண்டு முதலே தொடங்கியது.  இந்த அமைப்பின் நோக்கமே யாரும் கவனிக்காத மக்களை கவனித்துக்கொள்வதுதான். அன்பும், பராமரிப்பும்தான் முக்கியமான அம்சங்கள். த

வாழவே வழியில்லாதபோது இலக்கிய விருதை வைத்து என்ன செய்வது? - மனோரஞ்சன் பியாபாரி

படம்
  எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி மனோரஞ்சன் பியாபாரி மேற்கு வங்க எழுத்தாளர் உங்கள் எழுத்து பல லட்சம் வாசகர்களை ஈர்க்கும் என நினைத்தீர்களா? உங்கள் நூல்களுக்கு விருதுகளும் கூட கிடைத்துள்ளனவே? இல்லை. நான் என்னுடைய முதல் நூலை எழுதியபோது, குறைந்தபட்சம் ரிக்சா ஓட்டுபவனும் மனிதன்தான் என்பதை மக்கள் உணர்ந்தாலே போதும் என்று நினைத்தேன். நான் எழுதிய நூல்கள் வெளியாகத் தொடங்கியபிறகு மக்கள் என்னைப் பார்த்த கோணம் மாறியதை உணர்ந்தேன். ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் என்னை சந்தித்து உரையாடினர். சிலர் தங்களுடைய பத்திரிகையில் எழுதுவதற்காக அழைத்தனர். இதுபோன்ற மரியாதை எனக்கு இப்போதுதான் கிடைக்கிறது. நான் எழுதிய புத்தகங்கள், படித்தவர்களோடு பழகுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.  ரிக்சா ஓட்டுபவர்களை யாரும் மனிதர்களாகவே பார்ப்பதில்லை என்று சொன்னீர்கள். நாட்டிலுள்ள ஏழை மக்கள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்களா? நான் என்னுடைய வாழ்க்கையில் சமையல்காரனாக, பாத்திரங்களை கழுவும் வீட்டு வேலைக்காரனாக, ரிக்சா ஓட்டுபவனாக இருந்திருக்கிறேன். இந்த வேலைகளில் நிறைய கஷ்டங்களையும் வசைகளையும் அனுபவித்திருக்கிறேன். மெல்லத்தான் இப்படி வசைகளை

ரத்ததானம் செய்து கிடைத்த பணத்தில் எழுத தொடங்கிய எழுத்தாளர்! - மனோரஞ்சன் பியாபாரி

படம்
  மனோரஞ்சன் பியாபாரி எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியை எங்கு சந்தித்தீர்கள்? நான் அந்த சமயத்தில் வாழ்க்கைப் பிரச்னைகளை சமாளிக்க ரிக்ஷா வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். தெற்கு கொல்கத்தாவின் ஜாதவ்பூரில் தேவி அவர்களைச் சந்தித்தேன். வண்டி ஓட்டிக்கொண்டே அவரிடம் நான் ஜிஜூபிஷா என்றால் என்ன என்று கேட்டேன். ரிக்சா ஓட்டுபவர் இப்படியொரு வார்த்தைக்கு அர்த்தம் கேட்பார் என்று தேவி எதிர்பார்க்கவில்லை. நான் இதை எங்கு படித்தேன் என்று அவர் கேட்டார். நான் நிறைய புத்தகங்களைப் படிப்பேன் என்றும் பள்ளிக்கு போனதில்லை என்றும் கூறினேன். உடனே அவர் என்னுடைய பத்திரிகையில் கட்டுரை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.  அதற்கு அவர் ஏதாவது பணம் கொடுத்தாரா? பணமா? அதெல்லாம் இல்லை. நான் எழுதியது பர்திகா என்ற இதழில் வெளியானது. அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  இமானைப் படித்தபோது நீங்கள் எழுதவும் படிக்கவும் சிறையில் இருந்தபோது கற்றதாக கூறியிருந்தீர்கள். கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.  நான் சிறையில் இருந்தபோது பேனாவும் காகிதமும் கிடைக்கவில்லை. கிடைத்த விஷயங்களை வைத்து கிறுக்கிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த கைதிகளில் ஒருவர் எனக்கு ஆறுமாதம

சினிமா, நாடகம், குறும்படம், ஓடிடி தளம் என எதில் நடித்தாலும் கதைதான் முக்கியம்! -ராதிகா ஆப்தே, நாடக, சினிமா நடிகை

படம்
           ராதிகா ஆப்தே நாடக, சினிமா நடிகை ஓடிடி தளம்தான் உங்களுக்கு பெரிய பிளாட்பாரமாக அமைந்தது . படத்தை விட ஓடிடி பெரியதாக உள்ளதாக நினைக்கிறீர்களா ? சினிமாவிலிருந்து ஓடிடி பக்கள் வெட்கப்ப்டாமல் சென்ற நடிகர்களில் நானும் ஒருத்தி . சேகர்டு கேம்ஸ் , ராட் அகேலி ஹை என்ற படங்கள் கொடுத்த பிரபலம் சினிமாவை விட அதிகம் என்பேன் . நான் நாடகம் , ஓடிடி , படம் , குறும்படம் என எதையும் தீர்மானித்து இயங்குவதில்லை . அதிலுள்ள கதைதான் முக்கியம் . ஓடிடி தளங்கள் நாம் படம் பார்க்கும் முறையை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா ?     பெரிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் . ஆனால் சிறிய படங்களுக்கு அப்படி கிடைக்க அதிக வாய்ப்புகள் இல்லை . தியேட்டருக்கு சென்று பார்க்குமுடியாத மக்களுக்கு ஓடிடி தளங்கள் உதவுகின்றன . நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதற்கு பணம் கொடுத்தால் போதும் . எப்போது படம் பார்க்கவேண்டுமோ அப்போது பார்த்துக்கொள்ளலாம் . இதெல்லாம் உங்களுடைய தேவையைச் சார்ந்ததுதான் . அசாக்தா கலாமன்ச் மூலம் நடத்தப்பட்ட நாடகங்களில் உங்களை பார்த்தோம் . நாடக மேடை நடிப்பை இப்போது எப்படி பார்

பெலுடா கதைகள் - பம்பாய் கொள்ளையர் மற்றும் தங்கக்கோட்டை!

படம்
புத்தக விமர்சனம் பம்பாய் கொள்ளையர்கள் - தங்க கோட்டை சத்ய ஜித்ரே பெலுடா தொடர்கதை வரிசை தமிழில்: வீ.பா. கணேசன் பாரதி புத்தகாலயம் இரண்டு நாவல்களும் சந்தேஷ் என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்த துப்பறியும் கதைகள்தான்.  பெலுடா, தபேஷ் என்ற இருவர்தான் இதில் நாயகர்கள். பெலுடா  எனும் பிரதேஷ் மித்தர் புகழ்பெற்ற உண்மை ஆய்வாளர். இவரின் உறவினர், சிறுவன் தபேஷ். பம்பாய் கொள்ளையர்கள் கதையில் எழுத்தாளர் லால்மோகன், ஒரு கதை எழுதுகிறார். அதில் மும்பையிலுள்ள சிவாஜி கோட்டை பற்றி பெலுடா தகவல் கொடுக்க, கடத்தல் கும்பல் தங்கியிருப்பதாக எழுதிவிடுகிறார். இதனைப் படிக்கும் கடத்தல்காரர், அவரைப் பின்தொடர்கிறார். அப்போது, அதிர்ஷ்டவசமாக அவரது கதையை படமாக தயாரிக்க மும்பையைச்சேர்ந்த கோரே என்ற தயாரிப்பாளர் இசைகிறார். அதற்கு மும்பைக்குச் செல்லும்போது, அவரின் கையில் சன்யால் எனும் மற்றொரு படத்தயாரிப்பாளர் பார்சல் ஒன்றை கொடுக்கிறார். அதனை மும்பையில் சிவப்பு சட்டைக்கார ரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் இப்பணியை பெலுடா விரும்பவில்லை. எழுத்தாளர் லால்மோகன் சின்ன உதவிதானே, அடுத்த கதையை சன்யால் வாங்கிக்கொள்கிறார் என

இளைஞர்களின் குரல் 2

படம்
better india செல்லக்குழந்தைகளுக்காக பொம்மைகள் வங்கி தொடங்கினேன் ஆர்யமான் லோகோட்டியா(17, கொல்கத்தா) என்னுடைய பதினாறு வயது சகோதரி மூலமாகவே பொம்மை வங்கி தொடங்குவதற்கான ஐடியாவைப் பெற்றேன். இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளாலும் பொம்மைகளை வாங்கி விளையாட முடியாது. பொருளாதார நிலைதான் இதற்கு காரணம். இதற்காகவே பொம்மைகளை தானம் பெற்று குழந்தைகளுக்கு வழங்க முயற்சித்தோம். Betterindia முதலில் பொம்மைகளை பெறுவதற்கான மையம் ஒன்றை அமைக்க சிரமப்பட்டோம். ஆனால் இன்று, இந்தியாவில் ஏழு நகரங்களில் எங்களுக்கு மையங்கள் உண்டு. உள்ளூர் என்ஜிஓக்கள் மற்றும் பல்வேறு குழந்தைகள் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு பணியாற்றி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக 1,500 பொம்மைகளை தானம் பெற்று வழங்கியுள்ளோம். இதில் எங்களுடைய வயதும் முக்கியக் காரணமாக செயலாற்றியுள்ளது. காரணம், இப்பணியில் எங்களுடைய லாபம் என்று ஒன்றும் கிடையாது. எனவே வயது சிறியதோ நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் செயற்பாட்டாளர்  சம்பா குமாரி (14, ஜார்க்கண்ட்) TOI நான் சிறுவயதில் மைக்கா சுரங