சிறிய விஷயங்களை பேரன்போடு செய்யமுடியுமா? - அன்னை தெரசா

 







அன்னை தெரசா


அன்னை தெரசா 

ஊக்கமூட்டும் வாழ்க்கைப் பயணம்

அல்பேனியக் குடும்பத்தின் வாரிசு. 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்ற பிறந்தார். மாசிடோனியாவில் பிறந்தவரின் இயற்பெயர் ஆக்னஸ் கான்க்ஸா போஜாக்ஸ்ஹியூ. பனிரெண்டு வயதிலேயே மிஷனரி அமைப்பில் சேர்ந்து வேலை செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டார். 

பதினெட்டு வயதில் அயர்லாந்திலுள்ள லாரெட்டோ அமைப்பில் சேர்ந்து ஆங்கிலத்தை கசடற கற்றுக்கொண்டார். பிறகு தெரசா என பெயர் மாற்றப்பட்டது. 1929ஆம் ஆண்டு முதல் தனது குடும்பத்தை துறந்தார். 

பதினேழு ஆண்டுகள் கன்னியாஸத்ரீயாக பணியாற்றினார். அப்போது அவரை சுற்றி வாழ்ந்த மக்களின் வறுமை அவரது மனத்தை வருத்தியது. எனவே இந்த காலத்தில்தான் அவரது மனதில் கேட்ட குரலுக்கு செவி சாய்த்தார். வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி தேடுபவர்களுக்கு உதவ நாம் தெருவில் இருக்கவேண்டும் என முடிவெடுத்தார். எனவே வாடிகனில் அனுமதி பெற்று தி மிஷனரிஸ் ஆப் சாரிட்டி  என்ற அமைப்பைத் தொடங்கினார். செயல்பாடு 1950ஆம் ஆண்டு முதலே தொடங்கியது. 

இந்த அமைப்பின் நோக்கமே யாரும் கவனிக்காத மக்களை கவனித்துக்கொள்வதுதான். அன்பும், பராமரிப்பும்தான் முக்கியமான அம்சங்கள். தெரசாவும் அவரது குழுவினரும் கொல்கத்தாவில் உள்ள ஏழைகள், தெருவில் உணவின்றி இறக்கும் நிலையில் உள்ளவர்கள், கொடுமையான நோய்க்கு ஆளானவர்களை கவனித்துக்கொள்ள தொடங்கினர். சிறிய அளவில் தொடங்கிய அமைப்பு இன்று 133 நாடுகளில் 4500 கன்னியாஸ்த்ரீகளோடு பரவலாகி இருக்கிறது. 1980ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கி தன்னை கௌரவித்துக்கொண்டது. 1979 ஆம் ஆண்டு நோபல் பரிசில் அமைதி பிரிவில் தெரசாவுக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் விருதுக்கான தொகை 1,92,000 டாலர்களை ஏழைகளுக்கு கொடுத்தால் உதவியாக இருக்கும் என்பதால் தெரசா விழாவில் பங்கேற்கவில்லை. 

1997ஆம் ஆண்டு செப்.5 தேதி தெரசா காலமானார். ஏழைகளை நாம் பராமரிக்க வேண்டுமென்றால் மனதளவிலும் உடல் அளவிலும் நாமும் அவர்களைப் போலாகவேண்டும். ஏழைகளிலும் ஏழையாக என்றார் தெரசா. அன்னை தெரசா முத்துகள் நூறு என்று புத்தகம் போடுமளவு நிறைய பொன்மொழிகளை அவர் பேசவில்லை. ஆனால் அவரின் செயல்பாடு மகத்தானது. இன்று வெள்ளத்தில் உதவுகிறோம், பட்டினியில் கிடப்போருக்கு உதவுகிறோம் என்று பேசும் இந்துத்துவ அமைப்புகள் அன்று ஏழை மக்களை புறக்கணித்தன. குறிப்பாக தொழுநோயாளிகள் பராமரிக்க யாருமின்றி தெருவில் கிடந்து சீரழிந்து இறந்தனர். அவர்களை கவனித்து சிகிச்சை அளித்த அமைப்பு தெரசா அம்மையாருடையதுதான். 

சிறிய விஷயங்களை பேரன்போடு செய்யுங்கள் என்ற வரிகளைச் சொன்னவருக்கு புனிதர் பட்டத்தை போப் ஜான்பால் 2 , 2003 ஆம் ஆண்டு வழங்கினார். 

வளரும் நாடுகளில் உள்ள வறுமை என்பதை உணவு, உடை ஆகியவற்றைக் கொடுத்து எளிதாக கடந்துவிடலாம். ஆனால் மனதில் ஆன்மிக உணர்ச்சியும் காதலும் இல்லாத தன்மை ஆபத்தானது. இதனை கடந்துவருவது கடினம் என்று சொன்னார். மக்களை பிளவுபடுத்தும் கூட்டம் வளர்ந்து வருவதை அன்றே மனதில் உணர்ந்து தீர்க்கமாக சொல்லியிருக்கிறார் தெரசா அம்மையார். 

டெல் மீ வொய் இதழ் 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்