கலாசார பிரதிநிதித்துவம் தேவை!
கலாசார பிரதிநிதித்துவம் தேவை!
அசாமில் இடம்பெயர்ந்து வாழும் மியா முஸ்லீம்களுக்கான கலாசார அருங்காட்சியம் அமைப்பது தொடர்பாக பல்வேறுபட்டன கருத்துகள் உருவாகிவருகின்றன.
அசாமைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஷெர்மன் அலி, குவகாத்தியில் உள்ள ஶ்ரீமந்தா சங்கரதேவா கலாஷேத்ரா மையத்தில் சார் சப்போரிஸ் பகுதியில் வாழும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்று குரல் எழுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக கட்சி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாமின் கலாசாரத்தில் இப்படி தனி அடையாளங்களை உருவாக்க வேண்டியதில்லை. இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் அசாமை பாஜக பிளவுக்குட்படுத்துவதாக புகார் எழுப்பின.
பிரம்மபுத்திரா நதிக்கரையோரமாக வசிக்கும் மக்களின் கலாசாரத்தை பிரதிநிதிப்படுத்துவதா வேண்டாமா என்றுதான் பிரச்னை உருவாகியுள்ளது. இப்பகுதியை சார் சாப்போரிஸ் என்று அழைக்கின்றன. 2002-03படி இங்கு 24.80 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 80 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள். தகவல்தொடர்பு போதாமை, குழந்தை திருமணம், தொடக்க கல்விக்கடுத்த பள்ளி வசதிகள் பற்றாக்குறை, கல்வி அறிவின்மை ஆகிய பிரச்னைகள் உள்ளன.
பெரும்பான்மையாக வங்கதேசத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்த மியா எனும் முஸ்லீம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தவிர, மைசிங், டியோரிஸ், கோச்சாரிஸ், நேபாளி ஆகிய இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மியா முஸ்லீம்கள், ஆங்கிலேயர்களின் காலமான 1826ஆம் ஆண்டு தொடங்கி அசாமிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார். அசாமில் சட்டவிரோத அகதிகள் என்ற கூக்குரல் 1979ஆம் ஆண்டுதான் ஒலிக்கத் தொடங்கியது. ‘’இன்றுவரை இவர்களை அசாமியர்கள் என்று ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மியா இனக்குழுவினர் தங்களை அசாமியர் என்று கூறிக்கொள்வதோடு, 1951ஆம் ஆண்டு அசாம் மொழியைக் கற்று்க்கொண்டு, தங்கள் பிள்ளைகளையும் இவ்வழியில் கல்வி பயிற்றுவித்து வருகின்றனர் '’என்கிறார் அரசியல் ஆய்வாளரான சஞ்சீவ் பருவா.
இம்மக்களை அசாமிய சமூகம் ஏற்றுக்கொள்ள உழைத்ததில் மனித உரிமை செயல்பாட்டாளர் பாரக் குமார் தாஸ் உழைத்துள்ளார். 1899ஆம் ஆண்டு தொடங்கி இம்மக்களுக்கான அசாமிய பள்ளி இயங்கி வந்திருக்கிறது. அனைத்து இனக்குழுக்களுக்கும் உள்ள கலாசாரம், பாடல்கள், தற்காப்புக்கலைகள் ஆகியவற்றை மியா மக்களும் கொண்டாட நினைக்கின்றனர். இந்த வகையில் யூடியூபில் மி சாங்க்ஸ் என்ற பெயரில் மிர்சா லுட்பர் ரஹ்மான் என்பவர், இச்சமூக பாடல்களை பதிவு செய்துள்ளார். மியா மக்களின் கலசாரத்தை எதிர்ப்பவர்கள், இக்கலாசாரம் அரசியல் ஆயுதமாக,மேலாதிக்கம் செய்ய பயன்படுமோ என்று பயப்படுகிறன்றனர். ‘’’அசாமிய கலாசாரத்தில் புதிய விஷயங்களை சேர்ப்பது அதனை அழகுபடுத்தும். இதனை பயத்ததுடன் பார்க்கவேண்டியதில்லை’’ என்கிறார் சஞ்சீப் பருவா.
தகவல்
Indian express
Miyas of assam why is there a fuzz over showcasing their culture?
Tora agarwala
கருத்துகள்
கருத்துரையிடுக