பில், மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பு - முக்கியத்துவம் பெறும் தன்னார்வ அமைப்பு!

 








பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்


மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, கோவிட் -19 நோயாளிகளுக்கான பல்வேறு உதவிகளை செய்து வருகிறது., 

2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பவுண்டேஷன் மூலம் பல்வேறு நன்கொடையாளிகளை ஒன்றாக இணைத்து உலக நாடுகளில் பல்வேறு மனிதநேய செயல்பாடுகளை செய்து வருகின்றனர். 

வறுமை மற்றும் சுகாதாரச் செயல்பாடுகளை அதிகம் செய்கிற தொண்டு அமைப்பு இது. மெலிண்டா கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கணினி பொறியாளராக இருந்தவர். பின்னர் அங்கு மேலாளராக பணியாற்றினார். 

மெலிண்டா 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் ரேமண்ட் ஜோசப் ஜூனியர், எலைன் ஆக்னஸ் அமெர்லாண்ட். 

புனித மோனிகா கத்தோலிக்க பள்ளியில் பயின்றார். வகுப்பில் முதலிடம் பெற்றவர், கணினி அறிவியலில் ஆர்வம் காட்டினார். தனது பதினான்கு வயதில் டியூக் பல்கலையில் கணினி அறிவியல் பட்டம் பெற்றார். பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு விற்பனை மேலாளராக சேர்ந்து 1987இல் அதன் நிறுவனராக பில் கேட்ஸை சந்தித்தார். 

1994ஆம் ஆண்டு திருமணம் செய்தவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. ஜெனிபர், ரோரி, போபி. 


கேட்ஸ் பவுண்டேஷனின் நோக்கங்களை முழுக்க வடிவமைத்தவர் மெலிண்டாதான். கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி செயல்பட்டு வருகின்றனர். பில்லும் மெலிண்டாவும் தங்களது தனிப்பட்ட சொத்தில் 28 பில்லியன் டாலர்களை வழங்கி பவுண்டேஷனின் செயல்பாடுகளை விரிவாக்கியுள்ளனர். 

கோவிட் காலத்தில் பல்வேறு முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களோடு சேர்ந்து தடுப்பூசிகளை தயாரிக்க நிதியுதவியை பவுண்டேஷன் செய்தது. போர்ப்ஸ் இதழில் மெலிண்டா எப்போதும் ஆற்றல் வாய்ந்த பெண்களில் முதலிடத்தை பிடித்துக்கொண்டிருக்கிறார். அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். மனிதநேய பணிகளுக்காக பிரெஞ்ச் லீஜியன் ஆப் ஹானர் என்ற விருதும் பெற்றுள்ளார். 

டெல் மீ வொய் இதழ் 


 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்