வலிமையான சீர்திருத்தங்களை முன்னெடுத்த இந்திரா காந்தி! - பதில் சொல்லுங்க ப்ரோ?

 


இந்திராகாந்தி








பதில் சொல்லுங்க ப்ரோ?


இந்திராகாந்தியை ஏன் வலிமையான தலைவர் என்று சொல்லுகிறார்கள்?

இந்திரா பிரியதர்ஷின் காந்தியின் குடும்பமே, அரசியலில் ஈடுபட்டவர்கள்தான். அவரது தாத்தா மோதிலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர். மனைவி கமலா மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து வெளிவரலாம் என்ற வாய்ப்பையும் மறுத்தவர். தனது மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. அதில் உலக வரலாறையே கூறியிருப்பார். 

1917ஆம் ஆண்டு நவ.19 அன்று இந்திரா பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்தியாவில் நடைபெறும் விஷயங்களை அவர் கவனித்து வந்தார். தனது ஐந்தாவது வயதில் மேட் இன் இங்கிலாந்து தயாரிப்பு பொம்மையை நெருப்பிட்டு எரித்தார். 1921ஆம் ஆண்டான அன்று, சுதேசி இயக்கம் தீவிரமாக இருந்தது. தனது பனிரெண்டாவது வயதில் வானர சேனை ஒன்றைத் தொடங்கி, அதில் மாணவர்களை இணைத்தார். இவர்களின் வேலை, சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு ரகசிய செய்திகளை கொண்டுபோய் கொடுப்பது, நோட்டீஸ்களை சுவரில் ஒட்டுவது, தேசியக்கொடிகளை தயாரித்து கொடுப்பது ஆகியவற்றை செய்து வந்தனர். 

1966ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார். தனது பதவிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்தார். 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் மீது போர் அறிவித்தார். அதன் வழியாக வங்கதேசத்தை தனி நாடாக்க  உதவினார். வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை எடுத்தவர், பசுமை முயற்சி செயல்பாடுகளை நாடெங்கும் பரவலாக்கினார். 1975ஆம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார். இது பெரும் சர்ச்சையானது. நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. இதனால் மக்கள் ஆதரவை குறிப்பிட்ட காலம் இழந்தார் இந்திரா. 1980ஆம் ஆண்டு தேர்தலில் வென்றார். பஞ்சாப்பில் அமிர்தசரஸ் கோவிலில் காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி கொன்றார். இதன் விளைவாக சீக்கியர்கள் இந்திரா மீது வன்மம் கொண்டனர். 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் புவனேஸ்வரில் பேசினார். அதில் நான் எனது முழு வாழ்க்கையையும் மக்களின் நலனுக்காகவே செலவிட்டேன். எனது கடைசி மூச்சுவரைக்கும் இதனை  தொடர்வேன். எனது உடலிலுள்ள ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் என்று சொல்லி பேசினார். அவர் இறந்தபிறகு சீக்கியர்களின் மீது கடுமையான தாக்குதலை காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டனர். தலைநகரான டெல்லி கூட இதற்கு தப்பவில்லை. இந்த கலவரங்களை காங்கிரஸ் தலைவர்கள் நியாயப்படுத்தி பேசியதுதான் வேதனையான ஒன்று. 



டெல்மிவொய்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்