மசூதியை மாற்றிய மழைநீர் சேகரிப்பு!
தண்ணீர் பஞ்சம் என்பது இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு இல்லை. ஆனாலும் கூட நீராதாரங்களை காப்பாற்றி வைப்பது எதிர்காலத்திற்கான முக்கியமான தேவை. அப்படியில்லாதபோது மழைப்பொழிவு குறைந்தகாலத்தில் பஞ்ச பருவத்தில் படாதபாடு படும் நிலை ஏற்படும். கோவையில் உள்ள முஸ்லீம்கள் அதனை உணர்ந்து நீரை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
கோவையில் உள்ள 135க்கும் மேற்பட்ட மசூதிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளன. இப்போது அங்கு உருவாக்கப்பட்டுள்ளன ஆழ்துளை கிணறுகளில் நீர் வரத்து கூடியுள்ளது.
தொழுகைக்கு முன்னர் முஸ்லீம்கள் தங்கள் முகம், கை, கால்களை கழுவிக்கொள்வது வழக்கம். இதனை வுசு என்கின்றனர். இதற்காக செலவிடும் நீரையும் நிலத்திற்கு திருப்பிவிட்டிருக்கின்றனர். கூடவே மழைநீர் சேகரிப்பையும் செய்து வருகிறார்கள்.
இப்படி செய்வதற்கு காரணமான சம்பவம், 2016-17இல் நடைபெற்றது. அப்போது மசூதிகளில் இருந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டுபோய்விட்டன. நீருக்காக லாரி டேங்கர்களை நாடினர். இதற்கு தினசரி 8 ஆயிரம் ரூபாய் செலவானது. பிறகுதான் வுசு ஐடியா அத்தர் ஜமாத் தலைவர் ஷா நாவாஸூக்கு வந்திருக்கிறது.
சிறுதுளி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கரும்புக்கடை மசூதியில் மழைநீர் சேகரிப்பை அமைத்திருக்கிறார்கள். இதற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. கூடவே இப்படி நீரின்றி தவிக்கும் மசூதிகளுக்கும் இவர்களே வழிகாட்டியாக இருக்கிறார்கள்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
தீபக் சதிஷ்
கருத்துகள்
கருத்துரையிடுக