இந்தியாவின் ராக்கெட் பெண்மணி! - ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா

 






டாக்டர் ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா


மங்கல்யான் படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அதில், செவ்வாய் கோளுக்கு செல்லும் விண்கலத்தை பெண் விஞ்ஞானிகள் குழுதான் ஊக்கமுடன் வேலை செய்து குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தும். 

இந்த குழுவில் முக்கியமான விஞ்ஞானிதான், ரிது கரிதாய் ஸ்ரீவஸ்தவா.

விண்வெளி பொறியியல் படித்தவரான ரிது, 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று லக்னோவில் பிறந்தவர். எந்த மாநிலம் முன்னேறினால் நாடு முன்னேறும் என பிரதமர் மோடி சொல்கிறாரோ அந்த மாநிலத்தில் பிறந்தவர் ரிது. 

சிறுவயதில் வானத்தைப் பார்த்தபடியும் நட்சத்திரங்களை எண்ணியபடியும் தனது நேரத்தை செலவழித்தவர் ரிது. லக்னோ பல்கலையில் எம் எஸ்சி இயற்பியல் படிப்பை நிறைவு செய்தார். இயற்பியலில் மேற்கொண்டு படித்து முனைவர் படிப்பையும் முடித்தார். பிறகு கேட் தேர்வு எழுதி பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சில் இணைந்தார். அங்குதான் விண்வெளி பொறியியல் படிப்பை படித்தார். பிறகு 1997ஆம் ஆண்டு இஸ்ரோவில் வேலைக்கு சேர்ந்தார்.  2012 ஆம் ஆண்டு மங்கல்யான் -1 திட்டத்தில் துணை செயல் இயக்குநராக பணி செய்தார். 

திட்டத்தை முழுமையாக மேற்பார்வை செய்வதோடு அதன் செலுத்துதலையும் இவரே பார்வையிடவேண்டும். ஏறத்தாழ செயற்கைக்கோளின் மூளை என்று ரிதுவைக் கூறவேண்டும். செயற்கைக்கோள் விண்வெளியில் தானியங்கி முறையில் செயல்படுவதோடு பிரச்னைகளை ஏற்பட்டாலும் களையவேண்டும். இந்த பொறுப்பையும் மகிழ்ச்சியோடு ஏற்று செயல்பட்டார். 

மங்கல்யான் திட்டம் மகத்தான வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ரிது பேசப்பட்டார். செவ்வாயை எட்டிய நான்காவது நாடு என்ற வரலாற்றுப் பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. பதினெட்டு மாதங்கள் இயங்கிய செயற்கைக்கோளுக்கான செயல்பாட்டு செலவும் பிற நாடுகளை விட குறைவு. 2007ஆம் ஆண்டு ரிதுவுக்கு இளம் விஞ்ஞானி விருதும் கிடைத்தது. 

டெல் மீ வொய் இதழ் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்