இந்தியாவை முன்னிலை பெற செய்த பெண் அதிகாரிகள்! - ஈனம் காம்பிர், ஸ்னேகா துபே, விதிஷா மைத்ரா, பௌலோமி திரிபாதி

 






ஸ்னேகா துபே


அதிகாரம் வாய்ந்த பெண்கள் 

கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்கு இந்திய பெண்கள் இந்தியா சார்பாக ஐ.நாவில் பேசியுள்ளனர். ஸ்னேகா துபே, ஈனம் காம்பிர், விதிஷா மைத்ரா,  பௌலோமி திரிபாதி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இவர்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நாவில் வெளிப்படையாக தெரிவித்து நாளிதழ் செய்திகளில் இடம்பெற்றனர். அவர்களைப் பற்றிய சின்ன அறிமுகம். 

ஈனம் காம்பிர்

நியூயார்க்கில் உள்ள ஐ.நாவின் இந்தியாவிற்கான நிரந்தர திட்ட கமிஷன் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஐ.நாவின் கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதி பிரிவில் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். கணிதப் பாடத்தில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். உலகநாடுகளில் பாதுகாப்பு பற்றியும் படித்துள்ளார். 2005இல் குடிமைத்துறை தேர்வு எழுதி வெளியுறவுத்துறைக்கு தேர்வான சாதனையாளர். 


ஸ்னேகா துபே


கோவாவில் பிறந்து வளர்ந்த ஸ்னேகாவின் கனவே வெளியுறவுத்துறை அதிகாரி ஆவதுதான். தனது 12 ஆவது வயதிலேயே இதற்கான கனவு கண்டார் என்பதுதான் இவரைப் பற்றி நாம் இங்கே எழுத காரணம். 2011ஆம் ஆண்டு குடிமைத்தேர்வை முதல் முயற்சியிலேயே எழுதி வென்றார். வெளியுறவுத்துறைக்கு தேர்வானவரை வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐ.நாவில் பேசுவதற்காக தேர்ந்தெடுத்தது. இவர் ஐ.நாவின் பாகிஸ்தானை குற்றம்சாட்டி இந்திய அரசுக்கு ஆதரவாக பேசியது நாளிதழ்களில் செய்தியானதைப் படித்திருப்பீர்கள். இதற்கு மேல் சொல்ல வேறென்ன இருக்கிறது?

விதிஷா மைத்ரா

2008ஆம் ஆண்டு குடிமைத்தேர்வு எழுதி அதிகாரி ஆனவர்.  வெளியுறவுத்துறையில் முதல் செயலாளராக பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் விதிஷா. 2009ஆம் ஆண்டு சிறந்த பயிற்சியாளர் என்பதற்காக அம்பாசிடர் பிமல் சன்யால் மெமோரியல் பிரைஸ் எனும் விருதை வென்றார். இவரும் ஸ்னேகா போல வெடிக்கும் பட்டாசுதான். பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 

பௌலோமி திரிபாதி

ஐ.நாவின் நிரந்தர திட்ட அமைப்பின் இந்தியாவிற்கான அதிகாரி. 2007ஆம் ஆண்டு குடிமைத்தேர்வு எழுதி அதிகாரி ஆனவர்தான் பௌலோமி. பர்சனல் மற்றும் கேடர் பிரிவின் துணை செயலாளர் ஆக பணிபுரிந்தார். இவர் ஐ.நாவின் இந்தி நிரந்தர திட்ட இயக்கத்தின் ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார். 

டெல் மீ வொய்




கருத்துகள்