தனது தவறுகளுக்கான விளைவை எதிர்கொள்ளும் பாப் பிஸ்வாஸ்! - பாப் பிஸ்வாஸ் - இந்தி
பாப் பிஸ்வாஸ்
சுஜய் கோஸ்
ஜீ5
பாப் பிஸ்வாஸ், என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கோமாவிலிருந்து எழுகிறார். அவருக்கு தனக்கு மனைவி இருக்கிறார். டீனேஜ் பெண் ஒருவர், பள்ளி செல்லும் சிறுவன் என இருவர் பிள்ளைகள் என்பதே அவருக்கு நினைவில் இல்லை. உண்மையில் அவர் யார், எதனால் அவருக்கு பழைய விஷயங்கள் மறந்து போயின் என்ற விஷயங்களை ரத்தம் தெறிக்க நாம் தெரிந்துகொள்வதுதான் பாப் பிஸ்வாஸின் முக்கியமான கதை.
2012 இல் வெளியான கஹானி படத்தில் வரும் பாத்திரம்தான் பாப் பிஸ்வாஸ். அவரைப் பற்றிய ஸ்பின் ஆப் படம்தான் பாப் பிஸ்வாஸ். இவர் எப்படி காவல்துறைக்கு ஆதரவாக கொலைகாரராக மாறினார் என்பதை படம் பேசுகிறது.
அப்பாவியாக இருக்கும் அபிஷேக் எப்படி கொலை செய்யும் ஆளாக மாறுகிறார் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை யாருக்கும் எந்த பிரச்னையும் தராத மனிதர். ஆனால் அவர்களுக்கு தெரியாத வாழ்க்கையில் அவர் கூலிக்கொலைகாரர். அதுவும் போதைமருந்தான ப்ளூ மாத்திரையை விற்கும் கும்பலுக்கும் காவல்துறைக்குமான சம்பந்தம் தெரியாதவர். அந்த விவகாரம் தெரிந்தபிறகு அவரது வாழ்க்கையில் இழப்புகள்தான் கூடுகின்றன.
அவருக்கு பின்னாளைய நினைவுகள் மெல்ல தெரியவருகிறது. அதில் அதிர்ச்சியான நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இதனை அறிந்துகொண்டு அவர், தனது குடும்ப வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறார் என்பதுதான் கதை. அபிஷேக் பச்சன், படத்தில் தனது பாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார். சித்ரங்கதா சிங் மேரி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது கணவர் இறந்தபிறகு, அவர் பாப்பை அவர் திருமணம் செய்துகொள்கிறார். மேரிக்கு டேவிட் மூலம் மினி, பாப் மூலம் பென்னி என்ற சிறுவனும் இருக்கிறார்கள். பாப்பை கோமாவில் இருந்து கொண்டு வர செலவுகளை செய்கிறார் மேரி. அலுவலகத்தில் வேலை செய்துவரும் மேரிக்கு அலுவலக உயரதிகாரி மூலம் செக்ஸ் தொந்தரவுகள் இருக்கின்றன.
அதனையும் அவர் பல்லைக் கடித்தபடி வேலை செய்கிறார். அவருக்கு தனது கணவர் பாப் திரும்பி வந்தது நிம்மதியாக இருக்கிறது. பாப்பிற்கு தனது குடும்பத்தை மெல்ல பிடிக்கத் தொடங்குகிறது. தான் செய்யும் கொலைகள் சரியானவை அல்ல என்று தெரியும்போதுதான் படம் வேகம்பிடிக்கிறது.
கொல்கத்தாவில் நடக்கும் கதை, அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. சுஜய் கோஷின் கதை, வசனத்தை தியா அன்னப்பூர்ணா கோஷ் படமாக்கியிருக்கிறார்.
அமைதியான கொலையாளி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக