செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?


Two young women look down, horrified, at mobile phone
kissrichmond.com




பிரமிக்க வைக்கும் செக்ஸ் ரோபோ தொழில் நுட்பம்!

விண்வெளிக்கு செல்வது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது உண்மைதான். ஆனால் இன்று பலரின் கவனமும் செக்ஸ் பாட், செக்ஸ் பொம்மைகள் மீதுதான் உள்ளது. சும்மாயில்லை. இந்த தொழிற்துறையின் வணிக மதிப்பு 23.5 பில்லியனாக அடுத்த ஆண்டு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இணையத்தில் செக்ஸ் பாட், பொம்மைகளைப் பற்றி ஆராய்வது அதிகரித்துள்ளது. இதற்கான உளவியல் பக்கம் பற்றி தனியாக நாம் எழுதுவோம். இப்போது டெக் பக்கம் மட்டும் பார்ப்போம்.


Image result for sexbot harmony
The Sun

பார்ன்ஹப் வலைத்தளத்தில் மட்டும் செக்ஸ் ரோபட் என்ற வார்த்தையைத் தட்டினால் 1500 வீடியோக்கள் சிக்குகின்றன. ஏன் இந்த ஆர்வம், கொலவெறி? காதல் எல்லாம் கிடையாது. காவியக் காதல் எனும் மேலாடையை விலக்கினால் கிடைப்பது பரிசுத்தமான காமம்தான். 

இன்று கீதகோவிந்தம், கொக்கோகம் படிக்கவெல்லாம் மில்லினிய கிட்ஸ்களுக்கு டைமில்லை. நேரடியாக பார்ன்ஹப்.காம் அல்லது பார்ன்ட்ராய்ட்ஸ், எக்என்எக்ஸ்எக்ஸ் போனால் அனைத்தும் வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. வாமுகோமுவின் இனி ஒண்ணையும் மறைக்க முடியாது என்பதே உண்மை. 

செக்ஸ் பொம்மைகளின் வரலாறு பதினேழாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. டச்சு கடற்படை வீரர்கள் சுய இன்பம் அனுபவிக்க முதல் பொம்பைகளை உருவாக்குகிறார்கள். ஜெர்மனியின் தலைமகனான ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின்போது, வீரர்களுக்காக செக்ஸ் பொம்மைகளை உருவாக்க உத்தரவிடுகிறார். 

எதற்கு இது? ஆரிய ரத்தத்தில் பிற இனங்கள் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக. இருபதாம் நூற்றாண்டில் வினைல், லேடக்ஸ் சிலிகான் பொம்மைகள் சந்தைக்கு வருகின்றன. அதற்குப்பிறகு எல்லாம் திரும்பிக் பார்க்க கூட நேரமில்லை. சந்தை விறுவிறுவென முன்னேறியது. சூப்பர் சேல்ஸ்.

இன்று செக்ஸ் பொம்மைகளின் மீது குரூப் செக்ஸ் வைத்துக்கொள்ளும் வரை மனிதர்கள் முன்னேறியுள்ளனர். செக்ஸ் பாட் கண்டுபிடிப்பாளர்களும் சும்மா இல்லை. செக்ஸ் தாண்டி பொம்மையை மனைவியாக்க முயற்சித்து வருகிறார்கள். யெஸ். நம் உணர்வுகளை புரிந்துகொள்ள சமந்தா, ஹார்மோனி ஆகியோர் இனி முயற்சிப்பார்கள். ஏன் இந்த முயற்சி? எவ்வளவுக்கு எவ்வளவு கனவை நிஜம் செய்கிறோமோ அந்தளவு காசு கிடைக்கும்.? 

செக்ஸ் பாட்களை செக்ஸிற்காக வாடகைக்கு விடும் திட்டமும் நிறைய இடங்களில் பரிசோதனையில்(7000 பவுண்டுகள்) உள்ளது. ஹாங்காங்கில் ஸ்கார்லெட் ஜோகன்சனை(30 ஆயிரம் பவுண்டுகள்) ஏறத்தாழ செக்ஸ் பொம்மையை உருவாக்கிவிட்டார்கள். கனவுக்கன்னி என்று சொல்லுவது, ஹீரோயின்களுக்கு பெருமைதான். ஆனால் அந்த ஹீரோயின்களை பாத்ரூமில் பயன்படுத்துவார்கள் என்ற உண்மை கனவுக்கன்னிகளுக்கு தெரியும் என்பதால் அதனை ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுவார்கள். 

அமெரிக்காவின் ஜார்ஜியாவை சேர்ந்த ஜேம்ஸ் முதலில் செக்ஸ் பாட்டை வாங்கியது தன் அம்மாவைப் பார்த்துக்கொள்ளதான். இன்று அவரின் மனைவியின் அனுமதியுடன் செக்ஸ் பாட்டுடன்தான் இரவு உறங்குகிறார்.  இதுபற்றி மேலும் அறிய கீழேயுள்ள லிங்கை சொடுக்குங்கள். 

https://www.bastillepost.com/global/article/2351382-married-man-received-his-wifes-blessing-to-sleep-with-a-sex-robot

Related image
twitter.com

இதில் பெண்களை மட்டும் பேசியதால் அந்த செக்ஸ் பாட் மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள். பெண்களுக்கும் கட்டுடல் காளையான ஆண்கள் தேவை இல்லையா? உலகில் 90 சதவீதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பது வெட்ட வெளிச்சமான உண்மை. நகரில் கிடைக்கும் வாய்ப்பு கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதால் இரு பாலினத்தவரும் பொறுமையாக உள்ளனர். நிஜம் வாய்ப்புகளை வழங்கும்போது தெரிய வந்துவிடும்.
ஆண் செக்ஸ்பாட்டின் பெயர் ஹென்றி. ரியல் பாட்டிக்ஸ் என்ற கம்பெனி இதனை தயாரித்துள்ளது. காமம் என்பது ஆண்களுக்கு மட்டுமா என்ன பெண்களுக்கும் உண்டு. எனவே, தனியாக வாழும் பெண்களுக்கு ஹென்றி ஆதரவாக இருப்பார் என நம்புவோம்.

நன்றி: டெக்கன் கிரானிக்கிள்(ஏஐ கேள்விகள், செக்ஸ்பாட்) - நவீனா கனடே











பிரபலமான இடுகைகள்