செயற்கை நுண்ணறிவு கேள்விகள்! - பதில் சொல்லுங்க பார்ப்போம்



Topless Woman Wearing Black Headband
Pexels.com



ரோபோ குறித்து மூன்று விதிகளை உருவாக்கி புகழ்பெற்றவர் இவர். இன்றுவரை இவரின் விதிகளை அடிப்படையாக வைத்து ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவரின் லையர் என்ற சிறுகதையில்(மே 1941) இந்த விதிகள் எழுதப்பட்டன. யார் இந்த ஆளுமை?

2012 ஆம் ஆண்டு அக்டோபரில் மனிதர்களுக்கு எதிராக ரோபோக்களை பயன்படுத்தக்கூடாது என்று 200 க்கும் மேற்பட்ட டெக் கம்பெனிகள் போராடினர். இந்த போராட்ட அமைப்பின் பெயர் என்ன?

ஐபிஎம் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது. இதன் சிறப்பு, நாம் கேட்கும் கேள்விக்கு உடனே டி.ஆர் போல பதில் சொல்லி அசத்தும். மனிதர்களுக்கு சமையல் சொல்லித் தருவதில் கூட திறன் காட்டி அசத்தியது. இந்த கம்ப்யூட்டரின் பெயர் தெரியுமா?

சோனி தயாரித்த ரோபோ என்பதுதான் க்ளூ. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் இதன் ஸ்பெஷாலிட்டி. தன் எஜமானருக்கு ஏற்படும் பதினான்கு நோய்களைக் கண்டறிந்து உதவும் தன்மை கொண்டது இந்த ரோபோ. இப்போது நீங்கள் பெயரைக் கண்டுபிடித்திருப்பீர்களே?

ரஷ்ய பணக்காரர் 2045 இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தை உருவாக்கினார். மனிதர்களின் மூளையை ரோபோக்கள் கட்டுப்படுத்தும் திட்டம் இது என்று கூறப்பட்டது. உண்மையில் இத்திட்டத்தின் கான்செஃப்ட் என்ன என்று கூற முடியுமா?


இந்த அல்காரிதம், தானியங்கியாக அலாரம் வைப்பது, வானிலைத் தகவல்களை சொல்வது ஆகியவற்றைச் செய்யும். இதனை என்ன சொல்லுவீர்கள்?





விடைகள்: 1.ஐசக் அஸிமோ, 2. கம்பைன் டு ஸ்டாப் கில்லர் ரோபோட்ஸ் 3. ஐபிஎம் வாட்சன் 4. ஐபோ 5. சாகாவரம்- மனிதர்களின் மூளையை அதன் நினைவை கணினிகளுக்கு வழங்குவது.  6. பாட்ஸ்



பிரபலமான இடுகைகள்