வெப்பமயமாதலின் விளைவுகள் என்ன?
புத்தக அறிமுகம்
உலகில் ஏற்பட்டுள்ள வெப்பமயமாதலால் அமெரிக்காவில் காட்டுத்தீ பற்றுகிறது. அல்லது மேக உடைப்பு ஏற்பட்டு வெள்ளம், அல்லது புயல் என ஏதேனும் மிதமிஞ்சி தாக்குகிறது. வெப்பமயமாதலுக்குப் பிறகு உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம், அரசியல் மாற்றங்களைக் குறித்து ஆசிரியர் டேவிட் பேசுகிறார்.
நீர் எப்படி நமக்கு முக்கியமோ அதேபோலத்தான ஒயின் மற்றும் காபி கூட. லண்டன் டூ சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானப் பயணத்தில் பல்வேறு நீர்ம பொருட்களைப் பற்றி மார்க் விவரிப்பதே நூலின் சுவாரசியம். லேபில் உள்ள பொருட்களோடு அலையடிக்கும் கடலும் உண்டு.
பாலினம் பொறுத்து ஆண், பெண் மூளைகளின் திறன்கள் மாறுவது உண்மையா என்பது பற்றி தீர்க்காமாக ஜினா ரிப்பன் ஆராய்ந்து எழுதியுள்ள நூல் இது.
அமெரிக்காவை கதிகலக்கிய ஏலியன் என்ற கம்ப்யூட்டர் ஹேக்கரின் கதை இது. தற்போது பல்வேறு வங்கிகள் நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உதவி வருகிறார் என்றாலும் முன்னர் இவரது வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது. அது குறித்த அறிமுகம் அருமை.
நன்றி: குட்ரீட்ஸ்