அதிகரிக்கும் உடல்பருமன் ஆபத்து!







A Weight-Loss Plan for Morbidly Obese Women
cheryl masterson/pinterest


 உடல்பருமன் ஆபத்து!


உடல் உழைப்பு சாராத பணியாளர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருவதாக எகனாமிக்ஸ் அண்ட் ஹியூமன் பயாலஜி இதழின் (Economics and Human Biology) ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியர்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணிதவியலாளர்கள், அறிவியலாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது. இது விவசாயிகள், மீனவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் ஆகியோருக்கு  ஏற்படும் உடல் பருமனை விட அதிகமாக உள்ளது.

பாடி மாஸ் இன்டக்ஸ்(BMI) எனும் கணக்கீடு மூலம் மனிதர்களின் எடை, உயரம் ஆகியவை அளவிடப்படுகின்றன.  இதில் பொறியாளர் பிரிவினரின் பிஎம்ஐ 1.17 கி.கி. ஆக உள்ளது. இருபிரிவினருக்கான பிஎம்ஐ வேறுபாடு 1.51 கி.கி. ஆக உள்ளது. 18.5 கி.கி.( ஊட்டச்சத்துக் குறைபாடு), 18.5 கி.கி. - 25 கி.கி(இயல்பான உடல் எடை), 25 கி.கி. - 30 கி.கி.(உடல் பருமன் ) என கணக்கிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்(WHO). 

உடல் உழைப்பு குறைவு, தனிநபர் வருமானம் உயர்வு ஆகிய காரணங்களால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியர்கள் உடல்பருமன் பிரச்னையில் சிக்கியுள்ளனர். பிஎம்ஐ அளவு மாறுபடுவது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். வயது வந்தோருக்கு 50 கிராம் புரதம், 30 கிராம் கொழுப்பு ஆகியவை உள்ள உணவு மூலம் 2500 கலோரிகள் தேவை என்கிறது இந்த ஆய்வறிக்கை.

வளர்ந்த நாடான அமெரிக்காவில் உடல் பருமன் அளவு குறைந்த வருமானம் கொண்ட இனக்குழுக்களில் அதிகரித்து வருகிறது. என்ன காரணம், துரித உணவுகள் மிக குறைவான விலையில் கிடைப்பதுதான். அதேசமயம் உயர்வருமானப் பிரிவுகளில் உடல்பருமன் பெருமளவு அதிகரிக்கவில்லை. ”இந்தியாவிலும் இதே நிலைமைதான். துரித உணவுகளை சாப்பிடுவது இங்கு சமூக அந்தஸ்தாக பார்க்கிறார்கள். பிஎம்ஐ அளவு  30-31 என்று அதிகரிப்பதை விட 20 -21 என அதிகரிப்பதுதான் ஆபத்து” என்கிறார் புனேவைச் சேர்ந்த மருத்துவர் உதய் பத்கே. 

நன்றி: இந்தியா ஸ்பெண்ட்

வெளியீட்டு அனுசரனை: தினமலர் பட்டம்

பிரபலமான இடுகைகள்