ஓடினால் மழை குறைவாக நனைக்குமா?
Erika Lidberg\pinterest |
ஏன்?எதற்கு?எப்படி?
மிஸ்டர். ரோனி
மழை பெய்கிறது. அப்போது நடந்து சென்றால் அதிகம் நனையுமா? அல்லது ஓடினால் அதிகம் நனையுமா?
முட்டை, கோழி கேள்வி அல்ல. அறிவியல்பூர்வமான விளக்கம் உள்ளது. ஹார்வர்டு கணித வல்லுநரான டேவிட் பெல், இதற்கான விளக்கம் தேடி அலைந்த ஆண்டு 1976. தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். நூறு மீட்டர் தொலைவில் நீங்கள் அடைய வேண்டிய இடம். சட்டென மழை பிடித்துக்கொண்டு அடித்துப் பெய்கிறது. செங்குத்தான் மழைத்துளிகளில் ஓடுகிறீர்கள். முகத்தில் அறைகிறது மழை. இப்போது நீங்கள் குறைவாகவே நனைவீர்கள் என்கிறது டேவிட்டின் ஆய்வு. The Mathematical Gazette இதழில் வெளியானது இவரின் விரிவான ஆய்வு. மழை பெய்யும்போது நடந்து போவது, ஓடுவது என்பதில் பெரியளவு வித்தியாசம் இல்லை. ஏன் என்றால் கீழே தேங்கும் தண்ணீரால் பாதி, பெய்யும் மழையால் பாதி என நனைவீர்கள்.
உசேன் போல்டு கணக்காக ஓடினால் மழைநீர் உங்களை குறைவாகவே நனைக்கும். இதன் அளவு 10 சதவீதம்.
நன்றி: பிபிசி