மவுசு கூடுகிறது கேசட்டுக்கு! ரீஎன்ட்ரிக்கு ரெடி!
மீண்டும் பிரபலமாகும் கேசட்ஸ்!
தற்போது ஜஸ்டின் பைபர், அரியானா கிராண்டே ஆகியோர் தங்களுடைய ஆல்பங்களை கேசட்டாக வெளியிடத் தொடங்கிவிட்டனர்.
ஊரில் பஸ்ஸில் ஏ,பி என எழுதப்பட்ட இருபுறங்களிலும் பதியப்பட்ட பாடல்களை கேட்டிருப்பீர்கள். அதற்குப்பிறகு சிடி,டிவிடி அந்த இடத்தை எடுத்துக்கொண்டது. இன்று அந்த இடத்தை பென்ட்ரைவ் கைப்பற்றி உள்ளது.
இது இனிமேல் புதிய வணிகத்திட்டமாக மாறலாம் என்கிறார் நேஷனல் ஆடியோ கம்பெனி நிறுவனரான ஸ்டீவ் ஸ்டெப். இவர் 50 ஆண்டுகளாக ஆடியோ கம்பெனியை நடத்தி வருகிறார். கடந்த 2000 ஆம் ஆண்டில் பியர்ல் ஜாம் அண்ட் தி ஸ்மாசிங் பம்கின்ஸ் என்ற பேண்டிற்காக, ஆடியோ டேப்களை வெளியிட்டனர்.
பிரெஞ்சு நிறுவனமான முலன், கேசட்களை வெளியிட முடிவு செய்து வருகிறது. தி மாஸ்டர்ஸ் என்ற பிராண்டின் கீழ் ஆடியோ டேப்களை வெளியிட திட்டம் தீட்டி வருகிறது.
நன்றி: தி இந்து ஆங்கிலம்.