இந்தியாவை உருக்குலைக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு!







Image result for malnutrition
healthline



ஊட்டச்சத்து பற்றாக்குறையால் தடுமாறும் இந்தியா!


தேர்தல் வந்தவுடன் இந்தியர்களை வேலையின்மை , பசி ,பட்டினி அனைத்தையும் மறக்கடிக்க பணத்தை வாரிறைக்க தொடங்குகின்றனர். இதெல்லாம் ஆட்சியைப் பெறும்வரையில்தான். அப்புறம்... இதுவரை நீங்கள் என்ன பார்த்தீர்களோ அதுவேதான் தொடரும். வீடு, உணவு, உடை என அடிப்படை ஆதாரங்களுக்கே நாம் இன்னும் அரசை நம்பியுள்ள நிலையில், தற்சார்பை அதிகரிக்கும் திட்டங்கள் கண்ணுக்கு எட்டியுள்ள தூரம் வரை  காணோம்.

தற்போது குழந்தைகளை பாதுக்கும் ஊட்டச்சத்துக்குறைவு எனும் பாதிப்பு மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் செய்த ஆய்வுகளில் 20 சதவீத அளவுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை மேலோங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. ரத்தசோகை, குறைந்த எடை, வளர்ச்சிக் குறைவு ஆகியவை இதன் முக்கிய பாதிப்புகள்.

ஜார்க்கண்டில் பத்து தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 19 தொகுதிகள், கர்நாடகத்தில் பத்து தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் பத்து தொகுதிகள், ராஜஸ்தானில் ஆறு தொகுதிகள் இவ்வகையில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆதார அறிக்கை எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் வீக்லி இதழில் வெளியாகியுள்ளது. 

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 2030 ஆம் ஆண்டில் 46 பில்லியன் டாலர்கள் இழப்பாகும் வாய்ப்புள்ளது. இதனால் 46.6 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படவிருக்கின்றனர்.  

நாடாளுமன்ற தொகுதிகளிலுள்ள குழந்தைகளின் நிலைமை பற்றிய சரியான தகவல்களை சேகரிப்பது அவசியம். குறிப்பிட்ட இடைவெளிகளில் இத்தகவல்களை சேகரித்தால் மட்டுமே உண்மை நிலையை அறியலாம் என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்வி சுப்ரமணியன்.

குறைந்த உயரம் 35.9%, குறைந்த எடை 33.5%, குறைந்த எடை மற்றும் உயரம்   20.7%, ரத்தசோகையின் அளவு 56.8%  என்றளவு ஊட்டச்சத்துக் குறைவு பாதிப்பு உள்ளது. இவ்வகையில் ஐந்தில் மூன்று குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்குறைபாடு பிரச்னை உள்ளது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம். இவையிரண்டும் ஐந்தாவது மற்றும் ஆறாவது வறிய மாநிலங்கள். 

மோடியின் தொகுதியான வாரணாசியும் இதில் பாதிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு இங்கு மோடி ஜெயித்தாலும், 2009 ஆம் ஆண்டிலிருந்தே இங்கு பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய தொகுதிகளிலிருந்து எட்டு அமைச்சர்கள் நாடாளுமன்றம் சென்றும் மக்களுக்கு அணுவளவு பயன்களும் கிடைக்கவில்லை. 


ராகுல்காந்தி வென்ற உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி, மத்தியப் பிரதேசத்தின் குனா தொகுதி(ஜோதிராதித்யா சிந்தியா) ஆகிய தொகுதிகளும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் சிக்கியுள்ளன. இதோடு கேரளத்தின் திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகியவையும் வளர்ச்சிக்குறைபாட்டு பிரச்னையில் சிக்கியுள்ளன.  

நன்றி: இந்தியா ஸ்பெண்ட்