சைக்கோ கொலைகாரர்கள் அசுரர்களா?






aoukee:“blood”
dahmeraesthetics\pinterest






குழந்தைகளை கற்பழித்துக் கொன்று, உடலையும் எரித்துவிட்டு எந்த குற்றவுணர்வும் இல்லாமல் ஒருவரால் இருக்க முடிகிறது. பின்னர் போலீஸ் அவரை கைது செய்துவிட, பெயிலில் வந்தவர் அவர் செய்த குற்றத்தைப் பற்றி பேச கோபம் வருகிறது. அம்மாவையும் அடித்தே கொல்கிறார். இந்த செய்தியை நாளிதழில் படித்திருப்பீர்கள்.

இப்போது உங்கள்மனதுக்குள் என்ன விஷயம் ஓடுகிறது? இவன் மனிதனே அல்ல, மிருகம். என்பதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சைக்கோ கொலைகாரர்களின் சிக்னேச்சர் கொலைமுறைகள் கூட மனதில் ஓடலாம்.

ஆனால் இவர்களின் மூளை எப்படி செயல்படுகிறது என யோசித்தால்,  உங்கள் ஐக்யூவிற்கு வாழ்த்துகள் சொல்லலாம்.

49 சைக்கோ கைதிகளின் மூளை செயல்படும் விதத்தை அறிய மருத்துவர், ஜோஸ்வா பக்ஹோல்ட்ஸ் முயற்சித்தார். நாம் சைக்கோ கொலைகாரர்கள், உடலிலும் உள்ளத்திலும் உணர்ச்சிகளே அதிர்வுகளே இல்லாதவர்கள் என நினைக்கிறோம் . அது தவறு என்று தில்லாக அறிவித்தே ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

டெமோ இதுதான். கைதிகளுக்கு, சிறியளவு பணத்தைக் கொடுத்து  அதை எப்படி செலவு செய்ய முடிவெடுக்கிறார்கள் என்பதுதான் சோதனை.

இதில் மூளையின் வென்ட்ரல் ஸ்ட்ரியட்டம் எனும் பகுதியில் அதிகளவு இயக்கம் காணப்பட்டதை ஜோஸ்வா குழு கண்டுபிடித்தது. மூளையின் பிற பகுதிகளுக்கும் இப்பகுதிக்கும் மிக அரிதான தொடர்பே இருந்தது. இதன்பொருள், செய்யும் செயல்பாடுகளின் பின்விளைவுகளை இக்கைதிகள் அறியமாட்டார்கள் என்பதே.

ஏறத்தாழ சைக்கோ கொலைகாரர்களும் மனிதர்கள்தான் என்பதில் நம்பிக்கை கொண்டவர் ஜோஸ்வா, ஏறத்தாழ அம்முடிவில் வெற்றி கண்டுள்ளார். மூளையில் ஏற்படும் செயல்பாடு மாற்றத்தால் கோரமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். ஒழிய, அவர்கள் அசுரர்கள் என்று எண்ணத் தேவையில்லை என்று கூறினார்.


நன்றி: க்யூரியாசிட்டி