மாறவேண்டிய கல்விப் பார்வை!






Is top-quality schooling the only route to success? Photo: Shutterstock




கல்வி ஊழல்கள்!


புகழ்பெற்ற பெருமை வாய்ந்த கல்லூரிகளில் படிப்பது யாருக்குத்தான் பிடிக்காது. இதுவே அமெரிக்காவில் 25 மில்லியன் டாலர்கள் ஊழல் செய்யத் தூண்டியுள்ளது.


இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் கல்வி என்பது செல்வந்தர்களுக்கு கட்டுப்பட்டதாகவே, அவர்களால் வாங்க கூடியதாகவே உள்ளது. இதில் அமெரிக்க  உதாரணம் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.


உலகிலேயே ஹாங்காங்தான் கல்விக்கு அதிகம் செலவழித்து வருகிறது. ஒரு குழந்தைக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 400 ரூபாய் (தோராய அளவு)செலவிடுகின்றனர் ஹாங்காங் பெற்றோர். இந்த ஆய்வை பதினைந்து நகரங்களில் உள்ள 8, 481 பெற்றோர்களிடம் செய்துள்ளனர்.  இது உலகளவில் கல்விக்கு செலவிடும் அளவை விட மூன்று மடங்கு அதிகம்.  ஹாங்காங்கை அடுத்து அரபு அமீரகம் கல்விக்காக அதிகம் செலவழிக்கிறது.


வெற்றிக்கான வழி படிப்பு என்று எண்ணிவிடக்கூடாது. இன்று பார்ச்சூன் இதழில் இடம்பெறும் 500பேர்களில் 30 பேர் மட்டுமே குறிப்பிட்ட பல்கலையில் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். இன்று செயற்கை  நுண்ணறிவு நம் வேலைவாய்ப்புகளை விரைவில் பறித்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இன்னும் பழைய முறையில் படித்து பட்டம் பெற்று வேலை தேடும் மரபு இனி தேவையில்லை. அப்படி தேடினாலும் நினைத்த வேலை கிடைக்காது.

நன்றி: சீனா மார்னிங் போஸ்ட்(லூய்ஸா டாம்)

பிரபலமான இடுகைகள்