அரசு அருங்காட்சியகத்தை புனரமைக்கும் அரசு!
எழும்பூரிலுள்ள பழமையான கட்டிடம் எது? அரசின் கலை கண்காட்சியகம்தானே? ஏறத்தாழ 110 ஆண்டு பழமையான கட்டிடத்தை விரைவில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை பதினொரு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவிருக்கிறது.
இதற்கான பணிகள் 2015 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. உடைந்த கற்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய கற்களைப் பதித்து அஸ்திவாரத்தை பலமாக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன.
பனிரெண்டு மீட்டர் சுவர், லைம் பிளாஸ்டரிங் முறையில் புதுப்பிக்கப்படுகிறது. இது விரிசல் பிரச்னைகளிலிருந்து கட்டிடத்தை பாதுகாக்கிறது. நீரால் கட்டிடம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்வகையில் வடிகால் வசதிகள் அமைக்கப்படவிருக்கின்றன.
நன்றி: டைம்ஸ்