இடுகைகள்

பாம்பே அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாம்பே அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ்!

படம்
Verve Magazine பாம்பே அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ் ஹிமான்சு குழந்தைகளுடன் ஓவியர் பாலமுருகன் வெளிநாடுகளில் அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ் உண்டு என்று கூறினார. காமிக்ஸ் என்றால் டிஸ்கவரி புக்பேலஸ் மாதிரி கடை போட்டு விற்பதுதானே என்று நான் நினைத்தேன். ஆனால் இந்த காமிக்ஸ் வேறு வகையானது. நாம் பெரும்பாலும் டெக்ஸ்வில்லர், லக்கிலுக் வகையறாக்களையே முழுதாக படித்திருக்க மாட்டோம். அவற்றையே சூப்பர், சுமார் என விமர்சனம் செய்துகொண்டிருப்போம்.  ஆனால் இந்த அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ், தனிப்பட்டவர்களின் வாழ்க்கை, சுகம், துக்கம், அரசியல், செக்ஸ் , வன்முறை என எதுவாகவும் இருக்கலாம். அழகான பேப்பரில் காமிக்ஸ் ஸ்ட்ரிப்புகளை வரைந்து சென்டர் பின் அடித்தால் சேல்ஸூக்கு ரெடி. காமிக்ஸ்கள் இப்படித்தான் இருக்கும் என்றால் அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ்களை படித்தால் மனதை மாற்றிக்கொள்வீர்கள். ஓவியர் பாலமுருகன் சொன்னதை நினைத்துக்கொண்டே சனிக்கிழமை மின்டைத் திறந்தால், மும்பை டெல்லியிலும் பாம்பே அண்டர்கிரவுண்ட் என்ற காமிக்ஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்களும் பல்வேறு இடங்களில் சிறுசிறு கண்காட்சிகளை நடத்தி வருக