இடுகைகள்

நீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவுப்பற்று - காரீய நச்சு ஏற்படுத்தும் ஆரோக்கிய பாதிப்புகள் என்னென்ன? - மிஸ்டர் ரோனி

படம்
                அறிவுப் பற்று மிஸ்டர் ரோனி காரீய நச்சு, உடல்நலனில் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? காரீயம், முன்னர் பெயிண்டுகளில் பயன்பட்டது. காரீயத்தை சேர்த்தால் பெயிண்டில் பளபளப்பு கூடியது. விலையும் மலினமாக இருந்தது. பெயிண்டை பூசி பயன்படுத்திய பாத்திரங்களி்ல காரீயம் அதை பயன்படுத்தியவர்களின் உடலில் மெல்ல சென்று சேர்ந்தது. குறிப்பாக தேநீர், ஒயின், பழச்சாறு, காபி ஆகிய உணவுப்பொருட்களில் காரீய நச்சு கலந்தது. பேட்டரி தொழிற்சாலை, எரிபொருள் ஆகியவற்றில் காரீய வேதிப்பொருள் உண்டு. உடலுக்குள் காரீயம் சென்று சேர்ந்தால், சிறுநீரகம், நரம்பு மண்டலம், எலும்பு மஜ்ஜை ஆகிய பலவீனமடைந்து சேதமடைகின்றன. பெரும்பாலும் இரும்பு குழாய்களில் காரீயம் இருந்து உடலுக்குள் தொடர்ச்சியாக செல்வது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவு காரீயம் உடலுக்குள் போனால் கைநடுக்கம், மனநோய்கள், மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு காரீய பாதிப்பால், நரம்புமண்டலம் பாதிக்கப்படுகிறது. கி.மு 150இல் ரோமப் பேரரசு காலத்தில் காரீயத்தை அதன் ஆபத்து தெரியாமல் சமையல் பாத்திரங்கள், உணவு, மரு...

நிலம், நீர், காடு நக்சலைட்டுகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல - விஜய் சர்மா, துணைமுதல்வர், சத்தீஸ்கர்

படம்
            நேர்காணல் விஜய் சர்மா, துணை முதல்வர், சத்தீஸ்கர் மாநிலம் பேச்சுவார்த்தை மூலம் நக்சலைட் பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று கூறியிருக்கிறீர்கள். அந்த முயற்சி எந்த நிலையில் உள்ளது? எதிர்தரப்பிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அவர்கள் நேரடியாக சந்திக்க விரும்பவில்லை என்றால் வீடியோ அல்லது போன் அழைப்பு மூலம் பிரச்னைகளை விவாதிக்க நினைக்கிறேன். கூடுதலாக, சரணடைவது, மறுவாழ்வு ஆகிய திட்டங்கள் பற்றியும் பேச விரும்புகிறேன். இணையத்தில் க்யூஆர் கோட், கூகுள் ஃபார்ம்ஸ், மின்னஞ்சல் வழியாக சில எதிர்வினைகள் கிடைத்திருக்கின்றன. இவற்றை நக்சலைட்டுகள்தான் அனுப்பினார்களா என்று முழுமையாக கண்டறியமுடியவில்லை. குடிமை அமைப்புகள், மக்களிடமும் இதுபற்றி கருத்துக்களைக் கேட்டிருக்கிறோம். நக்சலைட்டுகள் தவிர்த்து, அவர்களது செயல்பாட்டால் வீடுகளை இழந்தவர்கள், காயமுற்றவர்கள், பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னை சிக்கலானது, கவனமாக புரிந்துகொள்ள முயலவேண்டும். இதில், சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் எங்களது கடமையாக உள்ளது. கடந்த ஆண்...

குளிர்பதனப்பெட்டி கண்டுபிடிப்பு, ஹைட்ரஜன் பிணைப்பில்லாத நீர், மேட்ரிக்ஸ் உலகம், உடலின் மிகப்பெரும் மூலக்கூறு - மிஸ்டர் ரோனி

படம்
            1930ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், குறிப்பிட்ட சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். அந்த சாதனத்தின் பெயர் என்ன? குளிர்பதனப்பெட்டி (தமிழாக்க நன்றி- மனோபாலா நாயுடு). இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ ஸில்லார்ட் என இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தனர். இப்பெட்டி, தெர்மோடைனமிக்ஸ் விதிகளின்படி இயங்குகிறது. 1920ஆம் ஆண்டு குளிர்பதனப்பெட்டியின் சீல் உடைந்து நச்சு வாயு வெளியாகி, ஒரு குடும்பமே இறந்துபோனது. அந்த காலத்தில், அதில் நச்சுவாயுவின் பயன்பாடு பரவலாக இருந்தது.   குளிர்பதனப்பெட்டியில் வெப்பம் பெறப்பட்டு, மூடிய குளிர்ந்த இடத்தில் செலுத்தப்பட்டு குளிர் உருவாக்கப்படுகிறது. விபத்து ஏற்பட்ட காரணத்தால், ஆல்பர்ட், குளிர்பதனப்பெட்டியில் நகரக்கூடிய பாகமே இருக்கக்கூடாது. குளிர்ச்சி ஏற்படும் பொருள் தொடர்ச்சியான அழுத்தத்தில் இருக்கவேண்டும் என நினைத்தார்.  அவர் உருவாக்கிய வடிவமைப்பு சற்று சிக்கலானது. பரவலாக கவனம் பெறவில்லை. ஆனாலும் கூட வெப்பத்தால் இயங்கும் பல்வேறு சாதனங்கள் ஆல்பர்டின் ஆய்வால் பயன்பெற்றன. 2 வினோதமான கணினி உலகை அட...

பொதுவாழ்க்கையை மதம் கட்டுப்படுத்தும்போது, மதச்சார்பற்றவராக இருப்பதே நல்லது - எழுத்தாளர் எலிஃப் சாஃபாக்

படம்
      நேர்காணல் எலிஃப் சாஃபாக் ஆங்கில துருக்கி பூர்வீகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சாஃபாக். தனது பத்தொன்பதாவது நூலை எழுதியிருக்கிறார். அந்த நாவலின் பெயர், தேர் ஆர் ரிவர்ஸ் இன் தி ஸ்கை.  நாவலின் கதை தொன்மைக்கால மெசபடோமியா, விக்டோரியா காலகட்ட இங்கிலாந்து எனச் சுற்றி நவீன கால துருக்கியில் வந்து நிறைவு பெறுகிறது. இந்த விஷயங்களை ஒன்றாக இணைக்கும் புள்ளியாக நீர் உள்ளது. ஹெவி மெட்டல் இசை கேட்டபடியே நாவல் எழுதும் பழக்கம் கொண்டவரிடம் பேசினோம். புதிய நாவலில், வரலாறு, நிலப்பரப்பு என இரண்டுமே கலந்துள்ளது. இப்படியான அம்சங்களை தொடர்ச்சியாக எடுத்து எழுத என்ன காரணம்? எழுத்தாளராக எனக்கு கதைகள் மட்டும் பிடித்தமானதில்லை, மௌனமும் பிடிக்கும். வரலாற்றில் மக்கள் மௌனமாக்கப்பட்ட இடங்கள் உண்டு. துருக்கியில் கூறப்பட்ட கதைகள் பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் கோணத்தில் அமைந்தவைதான். நமக்கு கூறப்படும் பெரும்பான்மை கதைகள் இப்படியான பின்னணி கொண்டவைதான். அதிகாரமற்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண் ஆகியோரின் கதைகள் மறந்துபோனவையாக உள்ளன. கூறப்படாத கதைகளைக் கூறுவதில் எனக்கு ஆர்வமுண்டு. மௌனம், இட...

தெரிஞ்சுக்கோ - தவளைகள்

படம்
  alanajordan   தவளை பற்றிய தகவல்கள்- தெரிஞ்சுக்கோ   ஆஸ்திரேலியன் ஸ்ட்ரைப்டு ராக்கெட்   என்ற தவளை தனது உடல் நீளத்தை விட 50 மடங்கு தூரம் தாண்டும் இயல்புடையது. கிரேட் கிரெஸ்டட் நியூட் இன பெண் தவளை, ஒரே நேரத்தில் 600 முட்டைகளை ஈனுகிறது. ஆப்பிரிக்கன் கோலியாத் இன தவளை 3.3 கிலோ எடை கொண்டது. இதன் நீளம் 30 செ.மீ. இந்தியாவில் வாழும் பர்பிள் தவளை, 50 வாரங்கள் (ஓராண்டிற்கு 52 வாரங்கள்) நிலத்தின் கீழே பாதுகாப்பாக உறங்குகிறது.   மழை தொடங்கும் இரு வாரங்களுக்கு மட்டும் எழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகிறது.   கோல்டன் பாய்சன் டர்ட் தவளையின் உடலிலுள்ள விஷத்தின் மூலம் 10 மனிதர்களைக் கொல்ல முடியும். சிறு விலங்குகளில் எனில் 20 ஆயிரம் எலிகளைக் கொல்லலாம். நீர்நில வாழ்விகளில் மொத்தம் 8300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. -அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

கடலில் ஏற்படும் அபாய மாற்றங்களால் உலக நாடுகள் மூழ்கும் அபாயம்!

படம்
    நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் ஏராளமான பாதிப்புகளை அடைந்து வருகிறது. கடல் வெப்பமடைவதற்கு முக்கியமான காரணங்கள், சூரிய வெப்பம், மேகங்கள், நீர் ஆவியாகும் செயல்முறை, பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை கடத்தி பிறகு பூமிக்கு கடத்துவது ஆகியவையாகும். மேற்சொன்ன காரணங்கள் மூலம் வெப்ப அலை உருவாகி கடல் மட்டம் மெல்ல உயர்கிறது. கடலிலுள்ள பவளப்பாறைகள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. மீன்கள் வெப்பம் காரணமாக துருவப் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளன. கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகளவு உள்ளிழுக்கப்பட்டால், அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் கடல் உயிரினங்கள் அழியத் தொடங்குகின்றன. கடல்மட்டம் உயர்வதால் மாலத்தீவுகள் (இந்தியப் பெருங்கடல்), கிரிபதி (பசிஃபிக் கடல்) ஆகிய தீவுகள் மெல்ல மூழ்கத் தொடங்கியுள்ளன. 2100க்குள் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்தால் தீவுகளில் உள்ள கடற்கரையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் ஈர்த்துக்கொள்கிறது. இதன் விளைவாக, கடலின் பிஹெச் அளவு மாறி, அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதன் காரணமாக சில க...

மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு!

படம்
  மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகள் உலோகங்கள், வேதிப்பொருட்கள், சிமெண்ட் ஆகிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்கள் கரிம எரிபொருட்களை சார்ந்தே இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையில் பெருமளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 0.98 டன்   ஸ்டீலை உற்பத்தி செய்யும்போது 1.87 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இப்படி வெளியாகும் வாயுவை குறைக்க முடியாது. ஏனெனில் ஸ்டீல், சிமெண்ட் என இரண்டுமே நகரங்களைக் கட்டமைப்பதில் முக்கியமானவை. இவற்றுக்கு மாற்று இன்றுவரை வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, காற்றில் வெளியாகும் கார்பன் என்பது மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.   கனரக தொழில்துறைக்கு இப்போதைக்கு கையில் உள்ள மாற்று முறை ஸ்டீம் மீத்தேன் ரீஃபார்மிங் எனும் முறைதான். இதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் கனரகத் தொழில்துறை 22 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டிற்கு காரணமாக உள்ளது. இதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஜவுளித்துறையிலும் அதிக சூழல் பாதிப்பு உள்ளது. ஆடைகளைப் பற்றிப் பார்ப்போம். இங்கிலாந்தில் விற்கப்படும் எண்பது சதவீத ஆடைகள் மறுசுழற்...

நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

படம்
  தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா? நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம். இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது? உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து   கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்...

ஒரே சமயத்தில் சங்கிலித் தொடராக நடைபெறும் சூழல் பிரச்னைகள்!

படம்
இந்தியாவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் 21 விமானங்கள் எப்படி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது, அப்படியான சூழலில் விமானியை குறை சொல்லி அரசு தப்பிக்குமோ சூழல் பிரச்னையும் இதேபோலத்தான் நேருகிறது. ஏழை மக்களின் உணவு உண்ணும் பழக்கத்தை குறை சொல்கிறார்கள். தொழிற்சாலைகள் செய்யும் பித்தலாட்டங்களை மறந்துவிடுகிறார்கள். எல்லாம் வாங்கும் இனாமிற்கான விசுவாசம் வேறொன்றுமில்லை.  கடலில் வெப்பநிலை உயரத் தொடங்கினால், உடனே பவளப் பாறைகள் அழியத் தொடங்குகின்றன. ஆண்டுதோறும் பவளப்பாறைகள் அழியும் அளவு கூடி வருவதால் விரைவில் அதன் பாதிப்பை உணரத் தொடங்குவோம் என சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.சூழல் பாதிப்பிற்கு மக்கள் இறைச்சி சாப்பிடுவதை குறைக்கவேண்டுமென சில பத்திரிகைகள் எழுதி வருவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். பல நாடுகள் நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகு சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என சூளுரைத்து பேசுகின்றன. காசுக்கு மண்டியிடும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களின் பேச்சை குழப்பமின்றி வெளியிட்டு விசுவாசம் காட்டுகின்றன. முன்னேறியபிறகு மனிதர்கள் பூமியில் உயிர்வாழ இருப்பார்களா என்பதே சூழல் போராட...

காற்றில் உள்ள வேதிப்பொருட்கள்!

படம்
காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் என்ன இருக்கிறது என நினைப்போம். அதில் கார்பன் டை ஆக்சைடு எனும் முக்கியமான பசுமை இல்ல வாயு உள்ளது. இதன் காரணமாகத்தான் பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. நாம் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். கார்பன் டை ஆக்சைடை முழுக்க எதிர்மறையாகவே பார்க்கவேண்டுமென்பதில்லை. அதுவும் உயிரினங்களுக்கு உதவுகிற ஒன்றுதான். ஆனால் அதன் அளவு அபரிமிதமாக அதிகரிக்கும்போது பிரச்னைகள் தொடங்குகின்றன. வளிமண்டலத்திற்ள் ஒருமுறை கார்பன் டை ஆக்சைடு வந்துவிட்டால் முழுமையாக மறைந்துபோக நூறாண்டுகள் தேவை. காற்றில் நீர், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை சூழலை பாதிக்கும் தீவிரம் கொண்டவை. வெப்பமோ வெப்பம் வெப்பம் அதிகமாகிக்கொண்டே செல்லும் காலநிலையை எல்நினோ அறிகுறி என்கிறார்கள். இது வெப்பமான சூழ்நிலையைக் குறிக்கிறது. எரிமலை வெடிப்பு நடக்கும் சூழலை, குளிர்ச்சியான ஆண்டுகள் என குறிக்கிறார்கள். 2020ஆம் ஆண்டு உலகளவில் வெப்பநிலை 1.2 டிகிரி செல்...

வீகன் உணவுமுறையில் இருந்து தாவர உணவுமுறை மாறுபட்டது!

படம்
  தாவர உணவுமுறை இன்று தாவரங்களைச் சார்ந்த உணவு எடுத்துக்கொள்வபவர்கள் அதிகரித்துள்ளனர். தாவர உணவுகள் என்றால் தலையில் கொம்பு முளைக்குமளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதல்ல. உணவு வகைகளில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பங்கு எழுபது முதல் எண்பது சதவீதம் இருக்கும். இறைச்சியைக் கூட சிறிது சேர்த்துக்கொள்ளலாம். தாவர உணவுமுறையில் சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்டு உணவுப்பொருட்கள் சேர்க்க கூடாது. மற்றபடி ஊட்டச்சத்துகளைக் கொண்ட காய்கறிகள் பழங்களை சாப்பிடலாம். தாவரம் சார்ந்த உணவுமுறைக்கு மாற்றாக வீகன் உணவுமுறையை சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதை இதையோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் மிகவும் மாறுபட்டது. வீகனில் விலங்கிலிருந்து பெறும் இறைச்சி, முட்டை, பால் என எதையும் சேர்ப்பதில்லை. அவர்கள் தங்களது உணவு சார்ந்த தீவிர கவனம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது உடை, பயன்படுத்தும் பொருட்களில் கூட விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் இருக்காது. சைவ உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் பால், முட்டையை எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உணவுகளைப் பெற விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்பது நியாயமான காரணம...

உடலில் இருந்து நச்சுகளை நீக்க என்ன செய்வது? - டீ டாக்ஸ் உணவுகள்

படம்
    டீ டாக்ஸ் உணவுகள் உடலை, மனதை சுத்தம் செய்துகொள்ளுங்கள் என நிறைய உணவுகள் கூறிக்கொண்டு சந்தையில் விற்று வருகின்றன. உண்மையில் அவை நமக்கு நன்மை செய்கின்றனவா என்று கேட்டால் முழுமையாக ஆம் என்றும் இல்லை என்றும் கூற முடியாது. கல்லீரலை சுத்திகரிக்கும் சில உணவுப்பொருட்கள் உள்ளன. அவற்றைத்தான் டீடாக்ஸ் எனக் கூறி தனி உணவுமுறையாகவே வடிமைக்கிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால், டீ டாக்ஸ் என்பது உடலிலுள்ள நச்சுகளை நீக்கும் இயல்பான முறை. உடலில் வியர்வை சுரப்பது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது ஆகியவையும் நச்சு நீக்க செயல்கள்தான். விஷயம் என்னவென்றால், கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அதிகளவு நீரைக் குடித்து முடிந்தால், உண்ணாவிரதம் இருப்பது சிறந்த டீ டாக்ஸ் செயல் எனலாம். உண்ணாவிரதம் இருக்கும்போது வெந்நீர் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும். இதை ஒருவர் ஒருவேளை இருவேளை என தொடங்கி சில நாட்களுக்கு கடைபிடிக்கலாம். இந்த காலத்தில் உடலில் இருந்து மலம், சிறுநீர் வழியாக நச்சுகள் முழுமையாக வெளியேறும். இதன் விளைவாக உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்திய நச்சுகள் மெல்ல களையப்படும்.   மாவுச்சத...

குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா? இணையத்தில், நாளிதழில் கூறப்படும் செய்திகளை அடிப்படையாக வைத்து பலரும் இந்த கேள்வியைக் கேட்கிறார்கள். லிப்டன் டீ விளம்பரத்தில் கூட வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க டீ அருந்தினால் போதும் என கூறுகிறார்கள். ஆனால் இதற்கு அறிவியல்ரீதியாக எந்த   ஆதாரமும் இல்லை. உடலில் கொழுப்பு சேகரிக்கப்படுவது, பின்னாளில் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளத்தான். வயிறு, தொடை, மார்பு என அதை தனி மனிதர் தீர்மானிக்க முடியாது.   குறிப்பிட்ட இடத்தில் கொழுப்பைக் குறைத்து அந்த இடத்தில் தசை அழகை கூட்ட நிறையப் பேர் முயல்கிறார்கள். கொழுப்பு குறைந்து உடல் ஒல்லியாவது அல்லது குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வருவது உடல் முழுக்க நடைபெறும் ஒத்திசைவான செயல்பாடு. உடல் எடை குறைப்பு இந்த வகையில் நடைபெற்றால்தான் ஆரோக்கியமானது. எடை குறைப்பு என்பது குறிப்பிட்டளவில் நின்றுவிட்டால், ஒருவர் தான் சாப்பிடும் உணவு முறையை மாற்ற வேண்டுமா? உணவுமுறையில் காய்கறிகள், குடிக்கும் நீர் அளவைக் கூட்டவேண்டும். உடல் எடை குறையாதபோது குறிப்பிட எடையில் நிலைத்து...

முதியவர்களைக் கொல்வதே கடவுளாகும் வழி!

படம்
  ஆஸ்திரியா நாடு, அங்குள்ள வியன்னாவில் லைன்ஸ் பொது மருத்துவமனையை பலரும் மறக்கமுடியாது. மருத்துவமனையின் பிரமாண்டத்தை 2 ஆயிரம் ஊழியர்களே உங்களுக்கு சொல்லுவார்கள். அங்கு எல்லாம் நன்றாக நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் திடீரென   சிகிச்சை பெற்று வந்த எழுபது வயதிற்கும் அதிக வயதுடையவர்கள் இறந்துபோக தொடங்கினார்கள். இப்படி வயதானவர்கள் இறந்துபோனால் பலரும் என்ன   நினைப்பார்கள்? தள்ளாமைதான் காரணம் என நினைப்பார்கள். காரணம் அதுவல்ல.   1983ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரையில் 42 பேர் காலமானார்கள். ஆனால் இதெல்லாம் அதிகாரப்பூர்வ கணக்குதான். ஆனால் இறுதியாக என்ன நடந்தது என்று தெரிய வந்தபோது, பலருக்கும் பேரதிர்ச்சி.   300க்கும் மேற்பட்டோர் நோயாளிகளாக சேர்ந்து உடல் நலிவுற்று இறந்தனர். இப்படி இறந்தவர்களின் இறப்புக்கு காரணம், மரணதேவதைகள்தான். நான் இங்கு சொல்வதற்கு பின்னணியாக, பேய் எல்லாம் கிடையாது. அத்தனையும் சூழ்ச்சி நிறைந்த மனிதர்கள்தான். வேக்னர் என்ற இரவு நேர வேலைக்கு வந்த செவிலியர்தான் கொலைகளுக்கான முக்கியமான காரணம். 1983ஆம் ஆண்டு தனது   23 வயதில், முதல்கொலையைச் செய்தா...

உருளக்குடி கிராமத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்! - சூல் - சோ.தர்மன் - அடையாளம் பதிப்பகம்

படம்
    சூல் நாவல் சூல் நாவல் எழுத்தாளர் சோ.தர்மன் சூல் சோ. தர்மன் அடையாளம் பதிப்பகம்   நாவலாசிரியர் சோ.தர்மன், சூல் நாவலை நீர், நீர் பாய்வதால் பயிர் பச்சைகள் எப்படி விளைகின்றன என்பதையே சூல் என அர்த்தப்படுத்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உருளக்குடி என்ற ஊரின் தொன்மையும், சாதி கட்டுப்பாடுகளும் உடைந்து மெல்ல விவசாயம் என்ற தொழில் அழிவதை 500 பக்கங்களுக்கு விவரித்திருக்கிறார். நாவலில் நாம் ரசிக்கும்படியான விஷயம் என்றால், பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் திட்டுவது போல ஹாஸ்யமாக உரையாடிக் கொள்வதுதான். இதில் பாலியல் சார்ந்த விஷயங்கள் இருந்தாலும் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. கொஞ்சம் விஷமமான விஷயங்களை போகிற போக்கில் பேசிவிட்டு போகிறார்கள். நாவலில் வரும் குப்பாண்டி, கோவிந்தசாமி விவகாரம் முதலில் இயல்பானதாக இருந்து பிறகு மெல்ல ஆன்மிகம் நோக்கி நகர்கிறது. அதற்கு பிறகு குப்பாண்டி குப்பாண்டி சாமியாக மாறுகிறார். அதற்கு பிறகு அவர் பேசுவதெல்லாம் ஆசிரியரின் மனதில் உள்ள உபதேசக் கருத்துகளைத்தான். நீர்ப்பாய்ச்சி, ஊரில் உள்ள மனைவி இல்லாத மூவரின் வாழ்க்கை, எலியன், அவரின் நண்பரான ஆசாரி, கோ...