இடுகைகள்

மலைப்பாம்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகின் நீளமான பாம்புகள்

படம்
  உலகின் நீளமான பாம்புகள்   ரெட்டிகுலேட்டட் பைத்தான் அறிவியல் பெயர் - மலாயோபைத்தான் ரெட்டிகுலாடஸ் காணப்படும் இடம் -தெற்காசியா பத்து மீட்டர் நீளம் கொண்டது. எடை 140 கிலோவுக்கும் அதிகம். பறவை, மான், பிற பாலூட்டிகளை உடலை இறுக்கி எலும்புகளை நொறுக்கி உண்கிறது. க்ரீன் அனகோண்டா அறிவியல் பெயர் - யுனாடெக்டெஸ் முரினஸ் கா.இ - தென் அமெரிக்காவின் வடக்குப்பகுதி 8-9 மீட்டர் நீளம் கொண்டது. இவ்வகை பாம்பு முட்டையிடாமல் குட்டிகளை நேரடியாக பிரசவிக்கிறது. அமேதிஸ்டைன் பைத்தான் மோரேலியா அமேதிஸ்டியானா இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ் 8.5 மீட்டர் நீளம் கொண்டது. இதன் செதில்கள் சூரிய வெளிச்சத்தில் பார்க்கும்போது ரோஸ் நிறத்தில் மின்னும். ஆப்பிரிக்கன் ராக் பைத்தான் பைத்தான் செபே சப் சகாரா ஆப்பிரிக்கா 7 மீட்டர் நீளம் கொண்ட ஆக்ரோஷ தாக்குதல் நடத்தும் பாம்பு. பெரிய பாலூட்டிகளை வேட்டையாடுகிறது. பர்மீஸ் பைத்தான் பைத்தான் பைவிட்டாடஸ் தெற்காசியா, இந்தியா, சீனா 5.74 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மலைப்பாம்பு அதைவிட மூன்று மடங்கு பெரிய விலங்குகளைக் கூட உண்ணும்

மலைப்பாம்புக்கு கிடைக்கும் ஆக்சிஜன்! - இரையைக் கொல்லும் நேரத்தில் நுரையீரலுக்கு கிடைக்கும் பிராணவாயு!

படம்
  மலைப்பாம்புக்கு கிடைக்கும் ஆக்சிஜன்! மலைப்பாம்பு இரையை சாப்பிடும் முறையை அறிந்திருப்பீர்கள். இரையை முழுக்க சுற்றி அதன் எலும்புகளை நொறுக்கி மெல்ல அதனைக் கொன்று உணவாக்கிக்கொள்கிறது. இப்படிக் கொல்லும்போது, இரையின் மீது அழுத்தம் செலுத்துவதோடு, தனது நுரையீரலுக்கும் அழுத்தம் கொடுக்கிறது. மலைப்பாம்பு  நுரையீரல் அழுத்தப்படும் நிலையில் எப்படி சுவாசிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.  மலைப்பாம்பு இரையை விழுங்கும்போது மார்பு, வயிற்றுக்கு இடையில் உள்ள உதரவிதான தசையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக நீளமான மார்பு பகுதியில் உள்ள தசைகளை சுவாசிக்க பயன்படுத்துகிறது. இரையைக் கொல்லும் செயல்பாட்டில் மலைப்பாம்பின் உடலிலுள்ள இத்தசைகள் இயங்க முடியுமா என ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. தற்போது இதுபற்றிய ஆராய்ச்சி அறிக்கையை ப்ரௌன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஜான் கபானோ கண்டறிந்துள்ளார்.  மலைப்பாம்பு இரையை விழுங்கும்போது சுவாசிப்பதற்கான காற்றை மார்புத் தசைகளில் இறுக்கமற்றதை தனியாக அசைத்து காற்றை உள்ளிழுக்கின்றன. இப்படி இழுக்கும் காற்று இரையை சுற்றி வளைக்கும் உடல் பகுதிகளுக்கும் சீராக செல்கின்றன. “பாம்