சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியோபோபிங்
சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியோபோபிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தலைவர்களை விட டெங்கின் வாழ்க்கை நிறையவே மாறுபட்டது. அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் இமாலய உயரத்தையும், பாதாள வீழ்ச்சியையும் கண்டவர். எதிரிகள் பற்றி கவலைப்படாமல் தனது செயல்பாட்டில் கவனம் வைத்து வென்றவர். அரசியல் தொடர்புகள்,தனிப்பட்ட நட்பு, திருமண உறவு ஆகியவற்றின் மூலமே தன் அரசியல் வாழ்க்கையை நீட்டித்துகொண்ட ஆளுமை. சிறுவயதில் வெளிநாடுகளுக்கு அதிக பயணம் செய்து வலம் வந்தவர். சிச்சுவானில் பிறந்தவரான டெங், 1920ஆம் ஆண்டு, பிரான்சுக்கு கம்யூனிஸ்ட் கல்வி கற்கச் சென்றார். அங்குதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு எழுந்தது. பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்று கல்வி கற்றார். 1927ஆம் ஆண்டு சீனாவுக்கு திரும்பியவர், தனது கட்சி சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்தார். 1937ஆம் ஆண்டு ஜப்பான், சீனாவின் மீது போர் தொடுத்தது. இப்போர் காரணமாக எந்நாளைக்குமான ஜென்ம விரோதியாக ஜப்பான் நாடு மாறியது. இன்று, ஒலிம்பிக்கில் நடந்த சில போட்டிகளில் ஜப்பான் நாட்டு அணியிடம் சீன அணி தோற்றுப்போனது. உடனே...