மதவாத கலவரத்திற்காக, முஸ்லீம்களை தேசதுரோகிகளாக்க அகழ்ந்தெடுக்கப்படும் ஒளரங்கசீப்
ஒளரங்கசீப்
ஆட்ரே ட்ரஷ்கெ
கிழக்கு பதிப்பகம்
தமிழில் ஜனனி ரமேஷ்
அமெரிக்க நாட்டில் நியூஜெர்சியில், வரலாற்றுத் துறையில் பணியாற்றி வரும் ஆட்ரே ட்ரஷ்கெ, எழுதியுள்ள நூல். ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். 2022ஆம் ஆண்டு வந்ததை, உடனே உரிமை வாங்கி மொழிபெயர்த்திருக்கிறார்கள். மதக்கலவரத்தை தூண்ட அந்தளவு ஆர்வமா என்று யோசிக்கலாம். இந்த நூல் ஆர்எஸ்எஸூக்கு எதிரான பல்வேறு வரலாற்று ஆய்வுத்தகவல்களை முன்வைக்கிறது. உண்மையில் நிறைய கட்டுக்கதைகளை, புனைசுருட்டுகளை பொய் எனக் கூறுகிறது. சிவாஜி என்பவர் பற்றி வரும் பகுதியைக் கூறலாம். மராட்டியத்தில் இந்துக்களுக்கான நாட்டை உருவாக்கியவர் என்று அவரைக் கூறுவார்கள். இந்த இந்துக்கள் யார் என்றால் ராஜபுத்திரர், மராட்டியர், பார்ப்பனர் ஆகியோர்தான். சூத்திரர்கள் மனிதர்கள் அல்லர், அவர்கள் விலங்குகள் வரிசையில் வருவதால் சேர்க்கப்பட மாட்டார்கள். சிவாஜி போன்ஸ்லேதான் மாவீரன் சிவாஜி என்று அழைக்கப்படுபவர். உண்மையில் ஒளரங்கசீப்போடு மாவீரத்தையெல்லாம் காட்டவில்லை. கெரில்லா முறையில் போர் செய்து முகலாய படைகளுக்கு சேதம் விளைவிக்கிறார். அதேசமயம், ஒளரங்கசீப் ராஜா ஜெய்சிங் என்பவரை அழைத்து சிவாஜியை அடக்க கூறும்போது, சிவாஜி போரில் தோற்றுப்போகிறார். மாவீரன் சிவாஜி மண்டியிட்டு சரணடைகிறார் என்பதே வரலாற்று உண்மை. பிறகு அவர் கைது செய்யப்படுகிறார். இதில் நிறைய புனைகதைகளை அரசியல் காரணங்களுக்காக சிலர் இடைச்செருகலாக இணைத்துவிட்டனர். அதுதான் இன்று மராட்டிய பெருமை என போலியாக நிற்கிறது.
இந்த நூலின் நோக்கமே, ஒளரங்க சீப்பை எப்படி புரிந்துகொள்வது என்பதுதான். நூலாசிரியர் ஒருமுறை ஒளரங்கசீப்பின் மதப்பற்றை, மதவாதம் என்று குறிப்பிடுகிறார். அதுகூட அவசியமில்லை. அனைத்துமன்னர்களுமே குறிப்பிட்ட மதம் வழிபாடு சார்ந்து இருக்கும்போது அதற்கு சலுகையும், அந்த கடவுளை வணங்காதவர்களுக்கு தொல்லைகளை கொடுத்து வந்திருக்கிறார்கள். அந்தவகையில் ஒளரங்கசீப், சீக்கியர்கள், சமணர்களுக்கு ஜிஸ்யா வரி எனும் வரியை விதித்திருக்கிறார். இது குடிமக்களுக்கும் பொருந்தும். முஸ்லீம் அல்லாதவர்களுக்கான வரி. இப்படியான வரியைக் கூட அவர், உல்மா எனும் ஆட்களை தன்வசப்படுத்த முயன்று செய்கிறார். ஆனால், அவர் எதிர்பார்த்த மாதிரி சூழல்கள் உருவாகவில்லை. நினைத்த பயன்களும் கிடைக்கவில்லை. இந்த ஜிஸ்யா வரியும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஏனெனில் முகலாய ஆட்சியாளர்களே நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஜிஸ்யா வரியை விதிக்காமல் கைவிட்டு இருந்தனர்.
ஒளரங்கசீப் கோயில்களை இடித்தார் என்று கூறுவது உண்மை. ஆனால், இடித்தது. அவர் முஸ்லீம், அந்த கோயில்களை கட்டியது இந்துகள் என்பதற்காக அல்ல. அந்த கோயிலை மையமாக வைத்து அரசியல் புரட்சி,கலகத்தை சிலர் திட்டமிட்டு வந்தனர். இன்று கோயில்களை கையில் வைத்துக்கொண்டு சட்டவிரோத செயல்களை பார்ப்பனர்கள் செய்ய முயல்கிறார்கள் அல்லவா? அதேதான். அதை ஒளரங்கசீப் ஏற்கவில்லை. எனவே, அவர்களின் ஆதார தலத்தை முற்றாக அழித்தார். அப்படி அழித்ததும் கூட பனிரெண்டு கோயில்களைத்த்தான். இதெல்லாம் அவரது அரசைக் காப்பற்றத்தான். மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றுவேன் என உறுதி செய்துகொண்டு பதவிக்கு வந்தவர் ஒளரங்கசீப்.
ஒளரங்கசீப் 49 ஆண்டு காலம் ஆட்சி செய்திருக்கிறார்.அவருக்கு முந்தைய ஆட்சியாளரான ஷாஜகான் முப்பது ஆண்டுகளும், அதற்கு முந்தையவரான ஜஹாங்கீர் 22 ஆண்டுகளும் ஆண்டிருக்கின்றனர். நீண்டகால ஆட்சியில் சக்ரவர்த்தி, சிறந்த ராணுவத்தளபதி என்ற பெயரை ஒளரங்கசீப் பெற்றிருக்கிறார். இவர் இறந்து பதிமூன்று ஆண்டுகளில் ஐந்து மன்னர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். யாருமே உருப்படியாக நாட்டை ஆளவில்லை. ஆளும் திறமையும் அவர்களுக்கு இல்லை. முகலாய ஆட்சி, சக்ரவர்த்தி ஒளரங்கசீப் மறைந்ததும் முடிவுக்கு வருகிறது. அப்படியே கருதிக்கொள்ளலாம்.
ஒரு இடத்தில் ஆட்ரே எழுதுகிறார். கொள்கை, அரசியல் என வரும்போது அரிதாகவே கொள்கை வெற்றி பெறுகிறது. இப்படியான முடிவுகளை ஒளரங்கசீப் எடுத்திருக்கிறார் என்பதால் அவரை மோசமானவர் என கருதிவிடவேண்டும். அவருக்கு அரசை விரிவுபடுத்துவதில் பேராசை இருந்தது. அதை தன் காலத்தில் செய்து காட்டினார். ஆனால், எல்லையை விரிவாக்குவது முடிவு பெறவே இல்லை. போர் நிறைய நிதி ஆதாரங்களை இழுத்துக்கொண்டது. நீதி, நிர்வாக, சமூக சிக்கல்கள்தான் முகலாய பேரரசை அழித்தது. மன்னரின் இஸ்லாமிய மதப்பற்று கிடையாது. ஒளரங்கசீப், அரசு நிர்வாகத்தில் மதவெறி தூண்டப்படுவதை எதிர்த்தார். அப்படி யாராவது புகார் கொடுத்தாலும் அதை தொடர்புடையவரிடம் பேசி மனுவை புகாரை தள்ளுபடி செய்திருக்கிறார். கேலி, நையாண்டி செய்வோரையும் கூட கொல்லவில்லை. கும்பலை அனுப்பி வீட்டைத் தாக்கவில்லை. அவர்களின் அம்மா, தங்கைகளை வல்லுறவு செய்துவிடுவோம் என மிரட்டவில்லை. உன்னை கிண்டல் செய்தானா? என்னையுமே செய்திருக்கிறான். காசு கொடுத்தால் செய்யமாட்டான் என்று நினைத்தேன். ஆனாலும் செய்கிறான். இதையெல்லாம் பொறுத்துக்கொள், என்று ஒருமுறை புகார்தார ரிடம் கூறுகிறார். நம்ப முடிகிறதா? அரசுக்கு எதிரான புரட்சி என வரும்போது ஒளரங்கசீப் வேறு ஒரு மனிதராக மாறிவிடுகிறார். அங்கு மரணம்தான் ஒரே பரிசு. சீக்கியத் தலைவர் தேஜ் பகதூரை அப்படித்தான் தோற்கடித்து சிறைபிடித்து தலையை வெட்டி வீசுகிறார். சம்பாஜி கூட அப்படித்தான் கொல்லப்படுகிறார்.
ஒளரங்கசீப்பை எப்படி புரிந்துகொள்வது அவருடைய காலத்திற்கு சென்றுதான் புரிந்துகொள்ள முடியும். வேறு வகையில் எப்படி சாத்தியமாகும்? இன்றைய நவீன இந்தியாவின் விதிகளுக்கு ஏற்ப மனநிலைக்கு ஏற்ப ஒளரங்கசீப்பை பார்ப்பது தவறான பார்வை என்பதை நூலாசிரியர் விளக்குகிறார். அடிக்குறிப்பு இல்லாமல், நூல் தொடர்பான தகவல்களை நூலின் பின்பக்கத்திற்கு நகர்த்தியிருக்கிறார். அவற்றைப் படித்து மேற்கோள் நூல்களை அறியலாம்.
குறிப்பு - கிழக்கு பதிப்பகம் ஆரிய பார்ப்பனர்களை ஆதரிக்கும், திராவிடர்கள் மத்தியில் பார்ப்பனர்களை உயர்த்திப் பிடிக்கும் பணியைச் செய்துவருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் பத்ரி சேஷாத்திரி, இணையத்தில் திராவிடர்களுக்கு எதிரான தமிழ்நாட்டுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை தொடர்ந்து செய்துவருகிறார்.
கோமாளிமேடை குழு
#aurangzeb #religion #muslim #rss #goonda #hindutva #hyper nationalism #bulldozer #demolished #traitor
கருத்துகள்
கருத்துரையிடுக