இடுகைகள்

ஸ்டார்ட்அப் மந்திரம் - கா.சி.வின்சென்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டார்ட்அப் மந்திரம்! - பேக் டு பேக்(6-8) அத்தியாயங்கள்!

படம்
6 ஐடியாவுக்கு துட்டு ! கம்ப்யூட்டர் வேலை செய்ய மின்சாரம் எப்படியோ அப்படித்தான் ஐடியாவுக்கு உயிர்கொடுக்க முதலீடு தேவை . ஸ்டார்ட்அப் ஐடியாவை மூளையில் தேற்றியவுடன் அதை விரிவாக ஆராய்ச்சி செய்து அதை தொழிலாக செயல்படுத்துவது எப்படி பிராக்டிக்கலாக செய்வது என அறிந்து வைத்திருப்பது முக்கியம் . ஏன் ? ஒருவரிடம் தொழிலுக்கு பணம் கேட்டால் அவர் தொழில் வாய்ப்பு வளர்ச்சி பற்றி சொல்ல வேண்டாமா ? தொழில் ஐடியா , தொடங்கும் இடம் , வாய்ப்பு , வளர்ச்சி அத்தனையும் விரல் நுனியில் இருக்கவேண்டும் . முதலீட்டாளர்களுக்கு அர்ஜூனன் விடும் அம்புகளாய் இமெயில்களை அனுப்பாமல் , முடிந்தவரை நேருக்கு நேர் சந்திக்க முயற்சியுங்கள் . ஆப்பிள் பொருட்களை பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி பொருட்களை விளக்குகிறார் என்பதை வீடியோ வழியே பார்த்தால் உங்களுக்கே நம்பிக்கை பிறக்கும் . ஒரு பொருளை பயன்படுத்தவேண்டும் என துடிப்புடன் இன்றும் ஆப்பிள் ஸ்டோர் முன் க்யூவில் மக்கள் நிற்கிறார்கள் என்றால் அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸின அயராத உழைப்பு முக்கியக்காரணம் . பணம் திரட்டும்போது பங்குகளை விற்று அதனை பெறாமல் , கடன