ஸ்டார்ட்அப் மந்திரம்! - பேக் டு பேக்(6-8) அத்தியாயங்கள்!





Image result for startup

6
ஐடியாவுக்கு துட்டு!

Image result for startup

கம்ப்யூட்டர் வேலை செய்ய மின்சாரம் எப்படியோ அப்படித்தான் ஐடியாவுக்கு உயிர்கொடுக்க முதலீடு தேவை. ஸ்டார்ட்அப் ஐடியாவை மூளையில் தேற்றியவுடன் அதை விரிவாக ஆராய்ச்சி செய்து அதை தொழிலாக செயல்படுத்துவது எப்படி பிராக்டிக்கலாக செய்வது என அறிந்து வைத்திருப்பது முக்கியம். ஏன்? ஒருவரிடம் தொழிலுக்கு பணம் கேட்டால் அவர் தொழில் வாய்ப்பு வளர்ச்சி பற்றி சொல்ல வேண்டாமா? தொழில் ஐடியா, தொடங்கும் இடம், வாய்ப்பு, வளர்ச்சி அத்தனையும் விரல் நுனியில் இருக்கவேண்டும்.

முதலீட்டாளர்களுக்கு அர்ஜூனன் விடும் அம்புகளாய் இமெயில்களை அனுப்பாமல், முடிந்தவரை நேருக்கு நேர் சந்திக்க முயற்சியுங்கள். ஆப்பிள் பொருட்களை பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி பொருட்களை விளக்குகிறார் என்பதை வீடியோ வழியே பார்த்தால் உங்களுக்கே நம்பிக்கை பிறக்கும். ஒரு பொருளை பயன்படுத்தவேண்டும் என துடிப்புடன் இன்றும் ஆப்பிள் ஸ்டோர் முன் க்யூவில் மக்கள் நிற்கிறார்கள் என்றால் அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸின அயராத உழைப்பு முக்கியக்காரணம்.

பணம் திரட்டும்போது பங்குகளை விற்று அதனை பெறாமல், கடன்வாங்கி வியாபாரத்தை விரிவாக்கி பின்னர் கிடைக்கும் லாபத்தின் ஒருபகுதியின் கடனைக் கட்டுவது சிறந்தவழி. "ஸ்டார்ட்அப்புக்கு நிதி திரட்டுவது சாதாரண பணியல்ல, தொடர்ந்து முயற்சிக்கவேண்டும்" என்கிறார் ஸ்டார்ட்அப் முதலீட்டாளர் சைரத்.

தற்போது உணவுத்துறை சார்ந்த ஸ்டார்ட்அப்புகள் வெற்றிக்குமேல் வெற்றி பெற்றுள்ளன. அண்மையில் ஸோமாடோ(2018), அலிபாபாவின் ஆன்ட் நிதிநிறுவனத்திடமிருந்து 150 மில்லியன் டாலர்களும், ஸ்விக்கி 100 மில்லியன் டாலர்களும் பெற்றுள்ளன.

"உணவு ஸ்டார்ட்அப்களை தொடங்க இது முக்கியமான நேரம். வாடிக்கையாளர் பரப்பு வளர்ந்து வருவதோடு, மார்க்கெட்டின் வியாபாரமும் முன்னேறிவருகிறது" என்கிறார் ஃபுட்பாண்டா நிறுவன இயக்குநரான பிரனாய் ஜிவ்ராஜ்கா. 2016-17 ஆம் ஆண்டில் இத்துறையின் முதலீடு 70 மில்லியன். இவ்வாண்டின்(2018) முதலீடு 370 மில்லியன் டாலர்கள் என்பது வளர்ச்சிதானே!


சாப்பிட வாங்க!

உணவு டெலிவரி ஸ்டார்ட்அப்புகள் - 990
உணவுத்தொழில்நுட்பம் - 500 மில்லியன்(2015-16), 70 மில்லியன்(2016-17), 370 மில்லியன்(2017-18)
உணவு ஆர்டர்கள்(2017) - பெங்களூரு(95,000), டெல்லி (87,000), மும்பை(62,000)
தினசரி ஆர்டர்கள்(தோராயமாக) - 4,50,000(2017), 2,00,000(2016)


   ஸ்டார்ட்அப் மந்திரம் 7! 

- கா.சி.வின்சென்ட்


உணவு டெலிவரியில் கொட்டும் காசு!

உணவுசேவைத்துறைக்கு வந்த ஸோமாடோ மற்றும் ஸ்விக்கி ஆகியோர் டெலிவரி தொகையை 35% குறைத்துள்ளனர். ஸோமாடோ, தன் கட்டமைப்பு மூலம் உணவகங்களின் பிராண்டையும் பிஸினஸையும் விரிவாக்குகின்றன. இதில் ஸ்விக்கி, க்ளவுட் கிச்சன் என்ற புதிய டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறது."தொழிலைத் தொடங்கிய 18 மாதங்களுக்கு சந்தையில் தாக்குப்பிடிக்க அதிக முதலீடு தேவை. அப்படி நிற்கமுடியாதபோது உங்கள் சந்தையும் வெற்றிபெற்றவர்களுடைய கைக்கு போய்விடும் அபாயம் உள்ளது" என்கிறார் முதலீட்டாளரான கணேஷ்.
பாக்ஸ் 1
கைநிறைய காசு!

குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு - ரூ.350
ஹோட்டல் கமிஷன் - 20%
பட்டுவாடா விலை - 18%
நிர்வாக செலவு - 7%
வருமானம் - 25%
(Redseer நிறுவன தகவல்படி…)

உணவு, மென்பொருள் மட்டுமல்ல விர்ச்சுவல் ரியாலிட்டியிலும் ஸ்டார்ட்அப்கள் தொடங்க நம்பிக்கை தருகிறார் ராகுல் தேஷ்பாண்டே. "எனக்கு சொந்த தொழில் தொடங்கும் பேராசை முதலிலேயே இருந்தது. நான் பாரத்த வேலையை விட்டுவிட்டு என் மனம் சொன்னபடி இதோஸ் டிசைன்ஸ் கம்பெனியை தொடங்கினேன்" என்பவர் பல்வேறு கேள்விகளை தானாகவே கேட்டு தீர்வு கண்டிருக்கிறார்.

மக்களுக்கு கதை கேட்கும ஆர்வத்தை விர்ச்சுவல் ரியாலிட்டி நிறுவனத்தின் ஐடியாவாக்கினார் ராகுல். பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான துறைகள் விஆருக்கு வாய்ப்புகள் உள்ளன. "இளைஞர்களாக கொஞ்சம் கிறுக்குத்தனமும், கிரியேட்டிவிட்டியும் தேவைப்படும் வேலை இது" என சிரிக்கிறார் ராகுல். இங்கு 40% பெண்களே பணிபுரிகின்றனர்.  

பிஸினஸில் கொஞ்சம் சமூக அக்கறையும் கலந்தவகையில்  பெங்களூருவில் புற்றுநோய்க்கான மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கியுள்ளார் சுரேஷ் ராமு.  1999 ஆம் ஆண்டு ஐஐஎம்மில் பட்டதாரியான சுரேஷ், மருத்துவ ஆராய்ச்சி துறையில் 10  ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். "2012 ஆம் ஆண்டு என் நண்பருக்கு புற்றுநோய் அறிகுறிகள் தென்பட, சிகிச்சைக்காக அமெரிக்கா பயணமானார். ஏன் இந்தியாவில் தரமான புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைகள் இல்லை என்று யோசித்து 2014 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மருத்துவமனையை உருவாக்கினோம்" என புன்சிரிப்புடன் தன் தொழில்முயற்சியை பகிர்ந்தார் சுரேஷ். இவரின் மருத்துமனையில் 3 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும்.
                                   
 8

ஸ்டார்ட்அப் மந்திரம் 8- கா.சி.வின்சென்ட்

ஸ்டார்ட்அப் தோல்வி ஏன்?

உலகளவில் அதிகளவு ஸ்டார்ட்அப் முயற்சிகள் உருவாவது இந்தியாவில்தான். ஆனால் 90 சதவிகித ஸ்டார்ட்அப்கள் தோற்றுப்போகின்றன. காரணம்? கிரியேட்டிவிட்டி இல்லை என ஃபோர்ப்ஸ் தளம் தகவல் தருகிறது. 2015-16 ஆம் ஆண்டு இந்தியாவில் 1,422 பேடண்ட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதேகாலத்தில் ஜப்பானில் 44 ஆயிரத்து 235, சீனாவில் 29 ஆயிரத்து 846, தென் கொரியாவில் 14 ஆயிரம் பேடண்ட்டுகள் பதிவாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹேக்கத்தான் மாநாட்டில் இணையம் - 11.5%, ரோபாட் -11.5%, ஏஐ - 9.6%, ஆக்மெண்டட் ரியாலிட்டி - 7.7%, பாட்ஸ் - 5.7% ஆகியவை முன்னிலை பெற்றுள்ளன.

ஸ்டார்ட்அப்பில் ஏன் ஐஐஎம், ஐஐடி படித்தவர்களுக்கே முதலீட்டாளர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள் என மதுரை வாசகர் முத்துவேலன் கேட்டிருந்தார். "ஐஐடி, ஐஐஎம் படிக்க மிக கடினமான தேர்வுகளை சந்தித்து வருவதால், அவர்களின் பிஸினஸ் ஐடியா ஜெயிக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். இதற்கு மனம் தளராதீர்கள். கல்வித்துறையில் பத்தாண்டுகள் அனுபவம் உள்ளதா? அதில் பிரச்னைகளை தீர்க்கும் தீர்வு உங்களிடம் இருந்தால் நம்பிக்கையுடன் ஸ்டார்ட்அப்பை தொடங்கலாம்" என்கிறார் முதலீட்டு ஆலோசகர் இஷான் சிங்.
                                 
ஸ்டார்ட்அப்களில் என்ன பிரச்னை?

புதுமைத்திறன் இல்லாததும், தனித்துவமான பிஸினஸ் மாடலின்மையும், தொழில்நுட்ப திறனின்மையும் 77% ஸ்டார்ட்அப்களை முளையிலேயே அழிக்கிறது என்பது ஐபிஎம்மின் பிஸினஸ் வால்யூ இன்ஸ்டிடியூட் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் ஆகியோரின் அறிக்கை தகவல்.

ஸ்டார்ட்அப் ஐடியா தியரியாக கெட்டி என்றாலும் பிராக்டிக்கலாக பிசினஸாக மாறாதபோது தோல்வியை தள்ளவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. திறமையான பணியாளர்களை பெறாத எந்த நிறுவனமும் சரிவை நிச்சயம் சந்திக்கும். நிறுவனம் எழும் முன்பே அதிக சம்பளத்தில் ஆட்களை அமர்த்துவது நஷ்டத்தில் ஓடும் நிறுவனம் போனஸ் அறிவிப்பது போலத்தான். தொழில்நுட்பம், நம் ஐடியாவை எளிமைப்படுத்தும் கருவி அவ்வளவே. மார்க்கெட்டின் தன்மைக்கேற்ப பிசினஸை மாற்றும் துணிச்சல் இருந்தால் ஸ்டார்ட்அப்பில் வெற்றிவாகை சூடலாம்!
 இவ்வார நூல்: The First 90 Days- Michale Watkins
                              

                            
 நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, என்டர்ப்ரீனர், லிவ்மின்ட் இணையதளங்கள்

பிரபலமான இடுகைகள்