பொருளாதார சிக்கலில் கிரீஸ்!




Image result for greece bailout



கிரீஸ் தப்பிக்குமா?

2007- 2008 காலகட்டத்தில் கிரீஸ் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியது. 2010 ஆம் ஆண்டு பொருளாதார பற்றாக்குறை 14% மாக வீங்க, ஐரோப்பிய ஒன்றியத்திடம் 360 பில்லியன் டாலர்களை அவசரநிலை கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது கிரீஸ். கடன்பெற்ற கிரீஸ் மக்கள் நலதிட்டங்களை வெட்டியும், வரியை உயர்த்தியும், தனியார்மயத்தை ஊக்குவிக்கவும் நிபந்தனைகளை கடன் கொடுத்த உலக நிதியகம்(IMF) அடுக்கியது.

தற்போது அந்த விதிமுறைகளை கடைபிடித்து 1.4% பொருளாதாரம் மீண்டுள்ளது. “விடுதலை நாள் இதுவே” என உலக நிதியகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட இவ்வாண்டை கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் கொண்டாடியுள்ளனர். தற்போது வேலையின்மை அளவு 20%(ஐரோப்பாவில் 8%) உள்ளது. கிடைக்கும் வேலைகளுக்கான ஊதியமும் மிக குறைவு.

இனி கிரீஸ் நாட்டுக்கு கடனை வட்டியுடன் சேர்த்து அடைக்கும் கடினபணி உள்ளது. ஜிடிபியில் உபரியாக 3.5% உற்பத்தியை காட்டியாகவேண்டிய நிர்பந்தம் இருப்பதால் வரியை உயர்த்தும் கட்டாயத்தில் அரசு உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை மீண்டும் நாட்டை பொருளாதார சிதைவில் தள்ளிவிடும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.     

பிரபலமான இடுகைகள்