நம்பிக்கை தரும் ஓவியப்பள்ளி!


ஆப்பிரிக்காவில் ஓவியக்கலை!Image result for uweza art school

ஆப்பிரிக்காவின் கைபெரா நகரிலுள்ள குடிசைப்பகுதியில் இப்படியொரு இடமாக யாருமே ஆச்சரியப்பட்டு போவார்கள். இரண்டே அறைகளைக் கொண்ட உவெஸா(Uweza) கலைப்பள்ளி ஆப்பிரிக்க குழந்தைகளின் கலைத்திறனுக்கு வாசலாக அமைந்துளது.

குடிசைகளிலுள்ள குழந்தைகளின் தினசரி பள்ளிவாழ்வுக்கு பிரச்னை இல்லாதபடி ஓவிய வகுப்பு நடைபெறுவது உவெஸா ஸ்பெஷல். 2008 ஆம் ஆண்டு அமெரிக்கா தொழிலதிபர் ஜெனிஃபர் சபிட்ரோ அனைவரும் பார்க்கும்படியான இடத்திலுள்ள இடத்தில் கலைப்பள்ளியை தொடங்கினார். 7-37 வயதுள்ளவர்களை பள்ளியில் இணைத்து ஓவியப்பயிற்சியை தொடங்கினர். இங்குள்ள சுவர்களிலுள்ள அத்தனை ஓவியங்களின் பிரம்மா, மாணவர்கள்தான். இளமையிலேயே வேலைக்கு சென்று சம்பாதிக்கும் நிர்பந்தம் உள்ள நிலையில் ஓவியம் கற்பது நேரம் விரயம் என்பதே இங்குள்ளவர்களின் எண்ணம்.

ரூ.215- 7,898 விலை ரேஞ்சுகளில் விற்கப்படும் ஓவியங்களில் 60% தொகை கலைஞருக்கும், மீதி பள்ளிக்கும் செலவிடப்படுகிறது. ஆசிரியர் ஓகோத் கூட தந்தையால படிப்பைவிட்டுவிட கேட்டுக்கொள்ளப்பட்டாலும் ஓவியப்பயிற்சியை கைவிடவில்லை. ஓகோத் மட்டுமல்ல இங்குள்ள பிற ஆசிரியர்கள் மாணவர்களின கதைகளும் இதே ரகம்தான்.  

பிரபலமான இடுகைகள்