ஐஎஃப்ஏவில் என்ன புதுசு!




Image result for ifa germany



IFA 2018!

ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற IFA( Internationale Funkausstellung Berlin) நிகழ்வில் கைகளில் அணியும் டெக் பொருட்கள் குவிந்திருந்தன. அவற்றில் சில.

Fitbit Charge 3
ஃபிட்பிட் சார்ஜ் 3 ட்ராக்கர், இதயத்துடிப்பு, நீச்சல் வேகத்தையும் கணக்கிடுகிறது. அட்டகாச நிறங்களில் ரப்பர், சிலிகன், லெதர், நூலிழை ஸ்‌ட்ராப்களில் கிடைக்கிறது. டச் ஸ்கீரின்களைக் கொண்ட சார்ஜ் 3 விலை ரூ. 149 டாலர்கள்.

Garmin Vivosmart 4

தூக்கம், நடை, நீச்சல், ஸ்மார்போன் அறிவிப்பு ஆகியவற்றை செய்ய உதவுகிறது. தன்னுடைய ஆப்களின் மூலம் இயங்கும் விவோஸ்மார்ட், ஜிம்மில் பயன்படும் பாடி பேட்டரி என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. விலை 129 டாலர்கள்.

Casio Pro Trek Smart WSD F30

சிறந்த வாட்ச் தயாரிப்பாளரான கேசியோ, த்ரில் சாகச பயணத்திற்கான கேட்ஜெட் இது. ஜிபிஎஸ் வசதிகொண்ட ட்ராக்கர் கூகுள் ஓஎஸ் மூலம் பல்வேறு ஆப்கள் மூலம் இயங்குகிறது. விலை 546 டாலர்கள்.