பேச்சுரிமைக்கு பூட்டு போடும் க்யூபா!






Image result for cuba act 349

கலைஞர்களை ஒடுக்கும் க்யூபா!

க்யூபாவில் கலைஞர்களை ஒடுக்கும் விதமாக 349 எனும் சட்டம் வரும் டிசம்பர் மாதம் முதல் அமுலாகியுள்ளது. பேச்சு, எழுத்து முக்கியமாக நூல்களின் விற்பனையையும் கட்டுப்படுத்தும்(பறிமுதல், அபராதம்) அச்சுறுத்தலை இச்சட்டம் கொண்டுள்ளது கூறுகின்றனர் சட்ட வல்லுநர்கள். புதிதாக பதவியேற்ற க்யூபா அதிபர் மிகுல் டையஸ் கனல் இச்சட்டத்தை உருவாக்கியுள்ளார். அரசின் அனுமதியின்றி இசை நிகழ்ச்சியகள், ஓவியக்கண்காட்சி என எதையும் கலைஞர்கள் நடத்த முடியாதது இதன் முக்கியக்குறை. 1976 ஆம் ஆண்டு க்யூப சட்டப்படி புரட்சி கலகத்திற்கு ஒருவரின் சிந்தனை துணைபோகாதவரையில் படைப்புகளை அனுமதிக்கலாம் என்றிருந்த சட்டத்தை புதிய சட்டம் உடைத்து போட்டுவிட்டது

பாலுறவு, இனம், மதம், வன்முறை சார்ந்த படங்களும் எழுத்துக்களும் இச்சட்டத்தில் தடைபெற வாய்ப்புண்டு. சட்டத்திற்கான கருத்து கேட்பின்போதே சுதந்திரமாக இயங்கும் கலைஞர்கள் இதனை தீவிரமாக எதிர்த்தனர். மறுசீராய்வு செய்வதற்கான கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். ஜனநாயக வழியில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் கலைஞர்களை க்யூபா அரசு இரக்கமின்றி கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது.