ஊழலுக்கு தண்டனை!




Image result for corruption

ஊழலுக்கு நிவாரணநிதி தண்டனை!

லஞ்சம் வாங்கி ஊழல் செய்த முன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிபதி பன்ச்குலா, கேரளாவுக்கு நிவாரண நிதி அளிக்கும் புதுமையான அபராத தண்டனையை விதித்துள்ளார்.
தனியார் கம்பெனிக்கு சென்ற ரெய்டில் அக்கம்பெனியினர் செய்த வரிமோசடிகளை அனில்குமார், அஜய்சிங், ரவிந்தர் தாகியா ஆகியோர் கண்டுபிடித்தனர். உடனே 30 லட்சம் அபராதம் விதிப்பதாக மிரட்டி, அத்தொகையை குறைக்க பத்தே பத்து லட்சரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் விஷயம் லீக்காகிவிட முதல் தவணையாக கம்பெனியினர் மூன்று லட்சம் தரும்போதே சிபிஐ அதிகாரிகள் மூன்று கருப்பு ஆடுகளையும் வசமாக மடக்கி பிடித்து கேஸ் போட்டுவிட்டனர். இந்த வழக்கில்தான் சிபிஐ வக்கீலே எதிர்பார்க்காதபடி நீதிபதி பன்ச்குலா நிவாரணநிதி தீர்ப்பளித்து அதிர வைத்துள்ளார். அப்போ சிபிஐக்கு என்ன கிடைக்கும் நீதியரசரே?
 
 2

தீவிரவாத குழுக்களில் இளைஞர்கள்!


ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதக்குழுக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் மட்டும் 130 இளைஞர்கள்(88-2016) டெரர் குழுக்களில் அட்மிஷன் போட்டுவிட்டனர்.
காஷ்மீரின் தெற்கு பகுதியிலுள்ள சோபியன் மாவட்டத்தில் மட்டும் 35 இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதக்குழுக்களில் இணைந்துள்ளனர். பெரும்பாலும் இந்த அமைப்புகளின் பாஸ், உலகளாவிய தீவிரவாத அமைப்பான அல்கொய்தா.  ஸாகிர் மூசா தலைமை வகிக்கும் அல்கொய்தா நேச அமைப்பான அன்சார் கவாத் ஹிந்த் எனும் அமைப்பு இளைஞர்களை அதிவேகமாக உள்ளிழுத்து ஜிகாதிகளாக்கி வருகிறது. முன்னாள் கேரம் சாம்பியனும், பொறியியல் பட்டதாரியுமான மூசா, ‘ஷரியத் யா ஷகாதத்’ எனும் கோஷத்தை முன்வைத்து ஹூரியத் தலைவர்களை மிரட்டி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருகிறார். ஷோபியன், புல்வாமா, அனந்த்நாக், குல்காம், அவந்திபோரா ஆகிய மாவட்டங்களிலிருந்து பெருமளவு இளைஞர்கள் டெரர்குழுக்களில் ஐக்கியமாகியுள்ளனர்.

3

40 லட்ச ரூபாய் பாக்கெட் வாட்ச்!

டைட்டானிக் கப்பல் மூழ்கி 106 ஆண்டுகளுக்கு பிறகு அதிலிருந்து கைப்பற்றப்பட்ட பாக்கெட் வாட்ச் நாற்பது லட்சத்துக்கு ஏலமாகி பிரமிக்க வைத்துள்ளது.

மூழ்கவே மூழ்காது என அட்வான்சாக தயாரிக்கப்பட்ட டைட்டானிக் பனிப்பாறையில் மோதி உடைய, ரஷ்யாவைச் சேர்ந்த சினாய் கன்டார், தன் மனைவியை லைஃப்போட்டில் காப்பாற்றிவிட்டு அட்லாண்டில் கடலில் தத்தளித்து உறைந்து உயிரிழந்திருக்கிறார். பின்னர் அவர் உடல் மீட்கப்பட்டு நியூயார்க்கில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் வாட்ச்தான் அண்மையில் டெக்சாஸின் டல்லாஸ் நகரில் ஏலமிடப்பட்டது. 1500 மக்களை பறிகொடுத்த சோக வரலாற்று நிகழ்வை பாக்கெட் வாட்ச் மக்களுக்கு ஏற்படுத்தினாலும் வாட்ச் 40 லட்சத்து 27 ஆயிரத்து 12 ரூபாய்களை கன்டாரின் குடும்பத்திற்கு சம்பாதித்து தந்துள்ளது.

4

ஜாலி திருட்டு!

டெல்லியின் துக்ளகாபாத் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர், கேமரா திருடி மாட்ட, அவரின் திருட்டு வரலாறு போலீசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டெல்லி பல்கலையில் முன்னாள் மாணவர் விஷால். துக்ளாபாத் அருகே போட்டோ எடுத்துக் கொண்டிருந்த மாடல் போட்டோகிராபரை விஷால் தன் நண்பர்கள் சகிதமாக வம்புக்கு இழுத்து தாக்கி கேமராவை அபேஸ் செய்தார். பதட்டமாகி ஓடும்போது விஷால் மட்டும் வசமாக போலீசில் கைகளில் மாட்டினார். விசாரணையில நண்பர்களை உற்சாகப்படுத்த ரெகுலராக நடத்தும் ஜாலி மதுபான பார்ட்டிகளுக்காக மினி திருட்டுகளை விஷால் டீம், வாடிக்கையாக நடத்திவரும் விஷயம் போலீசாருக்கு தெரிந்துள்ளது. போட்டோகிராபரை கும்பலாக தாக்கிய விஷாலின் ஆத்ம நண்பர்களை போலீஸ் அக்கறையாக தேடி வருகிறது.  கிடைத்தால் காப்பா? கமிஷனா?



பிரபலமான இடுகைகள்