"ட்ரம்பை கிண்டல் செய்வதுதான் ஒரே லட்சியம்" - மேட் போனர்







Image result for trump baby balloon

முத்தாரம் நேர்காணல்

“ட்ரம்பை கிண்டல் செய்வதுதான் எங்கள் ஒரே லட்சியம்”

மேட் போனர், கிராஃபிக் டிசைனர்.


கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பறக்கவிடப்பட்ட ட்ரம்ப் பேபி உலகிலுள்ள அனைவரையும் ஈர்த்த ஒன்று. பல்வேறு போராட்டங்களுக்கும் ஏன் பிரிட்டிஷ் மற்றும் லண்டன் அருங்காட்சியகங்களே எங்களுக்கும் ட்ரம்ப் பேபி தயாரித்து கொடுங்களேன் என கேட்குமளவு வைரல் புகழ்பெற்றது ஆரஞ்சு ட்ரம்ப்  மகிமை.
இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் லண்டனில் ட்ரம்ப் பேபியை பறக்கவிட்டு செய்த தங்களின் முயற்சிக்கு வரவேற்பு எப்படி?

பாசிட்டிவ்வான பாராட்டுகள் அதிகம். ட்ரம்ப் பேபியை தொடரவேண்டுமென மக்கள் கேட்டுக்கொண்டனர். எங்களது எட்டுபேர் கொண்ட குழுவினர் வெவ்வேறு துறைகளில் பணிகளிருப்பவர்கள். ட்ரம்ப் பேபியை நிறுவும்போதுதான் பலூனை எப்படி கையாளுவது என்பதை கற்றுக்கொண்டோம். அடுத்து என்ன செய்வது என திட்டமிட்டு வருகிறோம்.

ட்ரம்ப் பேபியை எப்படி உருவாக்கினீர்கள். உங்கள் பின்புலம் பற்றி கூறுங்கள்.

கிராஃபிக் டிசைன் படித்திருக்கிறேன். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு செயல்பாடுகளை செய்துவருகிறேன். லாபநோக்கு நிறுவனங்களுக்கு பணிசெய்வதில்லை என்பது என் லட்சியம். கலையும் அரசியலும் இணையும் புள்ளியை மக்களுக்கு உணர்த்துவதே என் ஆசை. உலகை மனிதர்கள் வாழ்வதற்கான சிறந்த இடமாக மாற்றவே பலூனை முதன்முதலாக வடிவமைத்தோம்.

பலூன் வடிவமைப்பு பணிகள் பற்றி விளக்குங்கள்.

லியோ முரேவும் நானும் முதலில் எப்படியிருக்கவேண்டும் என முடிவு செய்து ஸ்கெட்ச் செய்ய தொடங்கினோம். பலூனாக உருவாக்க முடிவெடுக்கவில்லை. படங்களை நோட்டில் வரைந்து இல்லஸ்டிரேட்டரில் ஸ்கேன் செய்தபின்தான அதனை 3டியில் மாற்றினோம்.

 பலூனாக மாற்றுவது  குறித்தும், அழுவது போன்ற முகத்தோடும் இருப்பது என குழுவினர் கருத்துக்களை சொல்ல, இறுதியில்தான் மலச்சிக்கலால் அவதிப்படுவது போன்ற முகபாவத்திலும் கையில் போனோடும் ட்ரம்ப் உருவானார். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மீ டூ இயக்கம் என அனைத்தும் எதிர்க்கும் ட்ரம்ப் போன்ற அரக்கர்கள் இப்படித்தானே இருக்கமுடியும்.

ட்ரம்ப் பேபி பலூன் பற்றி கலாசார அமைப்புகளின் எதிர்வினை என்ன?

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் I object  என்ற பெயரிலான கண்காட்சி நடத்துவதற்காக ட்ரம்ப் பேபி பலூனை கேட்டார்கள். நாங்கள் இன்னும் எந்த முடிவும் கூறவில்லை. ட்ரம்ப் பலூனுக்கு மியூசியத்தில் வைக்குமளவு வயதாகவில்லை என்பதை என் கருத்து. இந்த பலூனை விற்பனை செய்வது எங்கள் நோக்கமல்ல. ட்ரம்ப் பேபிக்கு உள்ள பெயரை காப்பாற்றினாலே போதும்.

ட்ரம்ப் பேபியை மக்கள் எப்படி புரிந்துகொள்ளவேண்டுமென நினைக்கிறீர்கள்?

டொனால்ட் ட்ரம்பை கிண்டல் செய்வது மட்டுமே எங்கள் லட்சியம். உலகநாடுகளில் தலைவர்கள் அவரை ஆதரிக்காமல் தோற்றுப்போகச்செய்யவேண்டும். ட்ரம்ப் நடந்துகொள்ளும் அநாகரிக முறைக்கு எந்த நியாயமும் அவரால் கற்பிக்க முடியாது. எனவே அவருக்கு எளிதாக புரியும் மொழியில்பேசினோம்.

பலூன் அவரை அவமதிக்கும் குறியீடுதானே?

நிச்சயமாக. பிரிவினையை வளர்க்கும் அவரின் கருத்தியலை எதிர்த்து அவர் இங்கிலாந்துக்கு வரக்கூடாது என ட்ரம்ப் பேபி குழந்தையை உருவாக்கி மக்கள் முன்னிலையில் பறக்கவிட்டோம். மக்களின் கருத்தை தெளிவாக அவர் உணர்ந்திருப்பார் என நம்புகிறோம்.

நன்றி: Zachary Small hyperallergic.com


தமிழில்:ச.அன்பரசு