கல்வி பணமில்லை; ஆயுதம் வாங்குவோம்!




Image result for central african republic

ஆயுத தேசம்!


கல்வி, உணவு அனைத்திற்கும் பற்றாக்குறை நிலவுகிற தேசம், ஆயுதங்களுக்கு பணம் செலவழிக்கிறது என்றால் நம்புவீர்களா? மத்திய ஆப்பிரிக்க குடியரசு செய்வது அதேதான். 65 மில்லியன் டாலர்களை கல்விக்காக மானியம் பெற்ற மத்திய ஆப்பிரிக்க குடியரசு, 53 மில்லியன் பற்றாக்குறை உள்ளது மீண்டும் கைவிரித்துள்ளது. ஆனால் போருக்காக 6 மில்லியன் டாலர்களை செலவழித்தது தற்போது தெரிய வந்துள்ளது.
தினசரி இரண்டு டாலர்களை தனிநபர் வருமானமாக கொண்ட நாடு, மூன்றில் இருபங்கு ஏழைகள் 59 மில்லியன் டாலர்களை(2015) ஆயுதங்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு மேல் நடந்த உள்நாட்டுப்போரினால் தனது தலைநகரமான பாங்குயியை 14 படைகள் மூலம் பாதுகாத்து வருகிறது. அரசு. ஆப்பிரிக்க குடியரசு நாட்டிற்கு தேவையான ஆயுதங்களை ரஷ்யா, ஐ.நா சபையின் அனுமதி பெற்று வழங்கிவருகிறது.    

பிரபலமான இடுகைகள்