மூளையில் புதிய நியூரான்!
மூளையில் புதிய நியூரான்!
மூளை ஆராய்ச்சியில் ரோஸ்ஹிப் நியூரான்
எனும் புதியவகை நியூரானை அமெரிக்காவின் ஆலன் மூளை அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ரோஸ்ஹிப் நியூரான் கண்டறியப்பட்டுள்ள
நியோகார்டெக்ஸ் பகுதி பொருட்களை அடையாளமறிந்து புரிந்துகொள்ளவும், மொழியைப் பேசவும்,
சிந்தனை செய்வதையும் கட்டுப்படுத்துகிறது.
முதலில் எலியிடம் நியூரான் சோதனையை செய்த
ஆலன் ஆராய்ச்சிக்குழு பின்னர் பல்வேறு விலங்குகளிடம் சோதனையை மேற்கொண்டது. “நம்மைப்போன்ற
மூளையமைப்பு கொண்டது எலி என்பதால்தான் அதனை சோதனை செய்ய தேர்ந்தெடுத்தோம். பெரிய மூளை
அமைப்பு கொண்ட டால்பின், குரங்கு ஆகியவற்றை ஆராயும்போதுதான் ரோஸ்ஹிப் நியூரான்களின்
வேறுபாட்டை உணரமுடியும்” என்கிறார் குழுவின் தலைமை ஆய்வாளரான எட் லெய்ன்.
ஆறு அடுக்குகள் கொண்ட மூளை அடுக்கில்
16 பில்லியன் நியூரான்கள் உள்ளன. இதில் ஆய்வாளர்கள் முதல் அடுக்கை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.
காரணம், நேர்மின் தூண்டலைக் கொண்ட இன்கிபிட்டரி நியூரான்கள் இவ்வடுக்கில் அதிகம்.
“தானம் பெற்ற நியூரான்களிலுள்ள திசுக்களில் ஆய்வுகளை செய்து வருகிறோம். இதன் மூலம்
நியூரான்செல்களில் ஏற்படும் நோய்களின் தாக்குதலில் பாதிக்கப்படும் செல்களை அடையாளப்படுத்த
முடியும்” என்கிறார் ஆய்வாளர் ட்ரைவே பேக்கன்.