இடுகைகள்

மருத்துவம்- டிஎன்ஏ டெஸ்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஎன்ஏ சோதனையை மேற்கொள்ளும் ஐரோப்பா நாடு!

டிஎன்ஏ சேகரிக்கும் நாடு ! இங்கிலாந்து தன் நாட்டிற்குள் வரும் மக்கள் குறித்து தகவல்களை டிஎன்ஏ மற்றும் கைரேகை மூலம் சேகரிக்க முடிவு செய்துள்ளது .  ஏறத்தாழ இங்கிலாந்து உள்துறை இதுகுறித்த கொள்கை முடிவை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே சமர்ப்பித்தாலும் தற்போதுதான் அரசு இதுகுறித்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது . பல்வேறு அரசு அமைப்புகள் சேகரித்துள்ள கைரேகை தகவல்களை உள்துறை அமைச்சகம் பெற்று அதனை மத்திய தகவல்தளத்தில் சேமிக்கவிருக்கிறது . இதில் இங்கிலாந்து குடிமகன்கள் குறித்த முகம் , கைரேகை ஆகியவற்றை பாஸ்போர்ட் ஏஜன்சி மூலமும் , கைரேகை தகவல்களை சட்டத்துறை ஏஜன்சிகள் மூலமும் குரல் பதிவுகளை வருவாய்த்துறை மற்றும் சுங்கத்துறை மூலமும் அரசு பெறவுள்ளது . நிறைவாக தேசிய தகவல்தளத்திடமிருந்து  டிஎன்ஏ தகவல்களை பெறவிருக்கிறது . " அரசு சேகரிக்கும் பயோமெட்ரிக் தகவல்கள் மூலம் குடிமக்கள் பற்றிய தகவல்களை எளிதாக வேகமாகவும் அறியமுடியும் " என்கிறார் அரசு வட்டார அதிகாரி ஒருவர் . சிறு குற்றங்களை செய்பவர்களையும் குற்றவாளிகளாக கருதும் அல்காரிதம் , தகவல்களின் திருட்டு ஆகியவையும் எதிர்காலத்தில்

டிஎன்ஏ லீக்!

படம்
டிஎன்ஏ லீக் ! டிஎன்ஏ சேவைகளை செய்து வந்த மைஹெரிடேஜ் , இணையக் கொள்ளையர்களிடம் 92 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பறிகொடுத்திருக்கிறது . பணம் தொடர்பான தகவல்களை திருடினால் பிரயோஜனம் உண்டு எதற்கு டிஎன்ஏ தகவல்கள் தேவை ? " நீங்கள் வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்தால் உங்களின் ஜீன் தகவல்களின் மூலம் உங்களுக்கு வரவிருக்கும் அல்சீமர் போன்ற நோய்களை முன்கூட்டியே கணித்து கடனை வங்கி வழங்காது போகவும் சான்ஸ் உண்டு " என பீதி கிளப்புகிறார் லாஸ்ட்லைன்  பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த கியோவன்னி விக்னா . டிஎன்ஏ தகவல்களை பெறுவதன் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நோய் வரும் வாய்ப்புள்ள மனிதர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தை உருவாக்கி காசு பார்க்க அதிக வாய்ப்புண்டு . மருத்துவசேவை , இன்சூரன்ஸ் மற்றும் காவல்துறை ஆகிய அமைப்புகளுக்கு டிஎன்ஏ தகவல்கள் அதி அவசியம் . எதிர்காலத்தில் காவல்துறை டிஎன்ஏவை வைத்து தொடர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு பின்தொடரும் . ஒருவரின் மரபணு தொடர்பான தகவலை சாதாரண மக்கள் யாரும் புரிந்துகொள்ளமுடியாது . மருத்துவ வல்லுநர்கள் மட்டுமே புரிந