இடுகைகள்

வெறுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் வெறுமை நிலை உருவாவது எப்படி? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி முடிவெடுப்பது? நீங்கள் தேர்வுகளின் அடிப்படையில் வாழ்கிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் எதற்காக ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்ன தேவை, எந்த விசை உங்களை தேர்ந்தெடுக்க உந்துகிறது? நான் ஒருவரை இப்படி உந்தும் விசையை, ஒருவரின் உள்ளே உள்ள வெறுமை நிலை அல்லது தனிமை   என்று கூறுவேன். இந்த முழுமை இல்லாத நிலை ஒருவரை தேர்ந்தெடுக்க தூண்டுகிறது. இப்போது கேள்வி, வெறுமை நிலையை எப்படி நிரப்புவது என்பதல்ல. அதற்கு பதிலாக வெறுமை நிலையை எது உருவாக்குகிறது என்பதுதான். தேர்வுகளின் செயல்பாட்டால் வெறுமை நிலை உருவாகிறது , செயலின் முடிவில் என்ன கிடைக்கிறது என்பதை நோக்கி செல்வதால் வெறுமை உருவாகிறது என்கிறேன். வெறுமை நிலை உண்டாகும்போது, ஒரு கேள்வி உருவாகிறது, எப்படி இந்த வெறுமை நிலையை நிரப்புவது, தனிமை நிலையை, நிறைவுறாத நிலையை அழிப்பது எப்படி?   என்னைப் பொறுத்தவரை வெறுமை நிலையை நிரப்புவது என்பது ஒரு பதில் கிடைக்கும் கேள்வியாகவே தெரியவில்லை. ஏனெனில் வெறுமையை எதனாலும் நிரப்பவே முடியாது.   ஆனால் பெரும்பாலான மக்களை அதை நிரப்பவே முயன்று வருகிறார்கள். இ

மனதிலுள்ள வெறுமையை கடந்து வருவது கடினமாக இருந்தது! - சூஜித் சிர்கார், இந்திப்பட இயக்குநர்

படம்
  சூஜித் சர்க்கார்  சூஜித் சர்க்கார்  இந்தி திரைப்பட இயக்குநர்.  இருபது ஆண்டுகளாக மனதில் நினைத்து வைத்திருந்த படத்தை உருவாக்கி வெளியிட்டு விட்டார். படத்தின் பெயர் சர்தார் உத்தம் சிங். சிலர் பாராட்டியும், சிலர் திட்டியும் விமர்சனங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது சர்க்கார் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவரிடம் பேசி தெரிந்துகொள்வோம்.  படம் நிறைவடைந்த பிறகு உங்கள் மனநிலை எப்படி இருந்தது? இருபது ஆண்டுகளாக இந்த படத்தை உருவாக்க வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அதனை உருவாக்கியபிறகு மனதில் வெறுமையாக இருக்கிறது. படத்தை உருவாக்குவது பட்ஜெட் என்றளவில் அல்லாமல் அதன் கதையே பிரமாண்டமானது. அதனால் இதனை செய்வது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. தயாரிப்பாளர் ரோனியிடம் எப்போதும் என்னுடைய பட ஐடியாக்களை பற்றி பேசிக்கொண்டிருப்பேன். ஆனால் இந்த படம் முடிந்தபிறகு எதையும் பேச முடியவில்லை.  எப்படி வெறுமையைக் கடந்து வந்தீர்கள்? நீங்கள் எப்போதும் உங்களை கவனித்து வளர்த்துக்கொள்வது முக்கியம். இந்த வெறுமை என்பது மிக முக்கியமான இடம். இதில்தான் பல்வேறு மக்களும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.  இந்த நேரத்தில்