மனதிலுள்ள வெறுமையை கடந்து வருவது கடினமாக இருந்தது! - சூஜித் சிர்கார், இந்திப்பட இயக்குநர்


 







சூஜித் சர்க்கார் 









சூஜித் சர்க்கார் 

இந்தி திரைப்பட இயக்குநர். 

இருபது ஆண்டுகளாக மனதில் நினைத்து வைத்திருந்த படத்தை உருவாக்கி வெளியிட்டு விட்டார். படத்தின் பெயர் சர்தார் உத்தம் சிங். சிலர் பாராட்டியும், சிலர் திட்டியும் விமர்சனங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது சர்க்கார் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவரிடம் பேசி தெரிந்துகொள்வோம். 

படம் நிறைவடைந்த பிறகு உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

இருபது ஆண்டுகளாக இந்த படத்தை உருவாக்க வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அதனை உருவாக்கியபிறகு மனதில் வெறுமையாக இருக்கிறது. படத்தை உருவாக்குவது பட்ஜெட் என்றளவில் அல்லாமல் அதன் கதையே பிரமாண்டமானது. அதனால் இதனை செய்வது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. தயாரிப்பாளர் ரோனியிடம் எப்போதும் என்னுடைய பட ஐடியாக்களை பற்றி பேசிக்கொண்டிருப்பேன். ஆனால் இந்த படம் முடிந்தபிறகு எதையும் பேச முடியவில்லை. 



எப்படி வெறுமையைக் கடந்து வந்தீர்கள்?

நீங்கள் எப்போதும் உங்களை கவனித்து வளர்த்துக்கொள்வது முக்கியம். இந்த வெறுமை என்பது மிக முக்கியமான இடம். இதில்தான் பல்வேறு மக்களும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.  இந்த நேரத்தில் வேறு ஏதாவது விஷயங்களை நீங்கள் உடனே தொடங்கவேண்டும். இதற்கான திட்டமிடலை சரியாக செய்து வரவேண்டும். 

கிரியேட்டிவ்வான ஏதாவது பணிகளை செய்து உங்களை எப்போதும் பரபரப்பாக வைத்துக்கொள்வது அவசியம்., அப்படி இல்லாதபோது மனம் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் . இந்த நேரத்தில் நீங்கள் புதிய சினிமாவை உருவாக்கலாம். தோட்டங்களை பராமரிக்கலாம். அல்லது படங்களைப் பார்க்கலாம். 

இதனால்தான் நீங்கள் அடிக்கடி இடைவெளி எடுத்துக்கொண்டு மேற்கு வங்கத்திற்கு சென்று தோட்டங்களை பராமரிக்கிறீர்களா?

சரிதான். இதே காரணத்திற்காகத்தான் நான் அங்கு சென்று வருகிறேன். நான் பிறந்தது மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிதான். கோவாவுக்கு சென்று நூல்களை படிப்பேன். அமைதியாக இருக்க அங்கு செல்வேன். நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. என்னுடைய படத்திற்கான ஆராய்ச்சியை அதற்கான நபர்களுடன் தொடங்கும் பணி உள்ளது. 

சர்தார் உத்தம் சிங், குலாபோ சிதாபோ என்ற  இரு படங்களும் பாராட்டுக்களைப் பெற்றது போலவே விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இதனை எப்படி கடந்து வந்தீர்கள்?

இங்கு பாருங்கள். படங்களை எடுப்பவர்கள் அனைவரும் விமர்சனங்களை கடந்துதான் வரவேண்டும். நாம் செய்யும் வேலையில் விமர்சனங்களை எதிர்கொள்ளுவதும் முக்கியமான பணி.. நீங்கள் இதனை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இயக்குநராக படத்தை உருவாக்குபவராக இருப்பவர், மக்கள் சொல்லும் அனைத்து விஷயங்களையும் படத்தில் கொண்டு வர முடியாது. ஆனால் அதனைக் கேட்டுக்கொள்ள முடியும். 

சர்தார் உத்தம் சிங்கின் தயாரிப்பாளர் ரோனி, படத்தில் எங்கும் நாம் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்று கூறினார். நாங்கள் படத்தில் சில தவறுகளை செய்திருக்கலாம். அதனை குறித்து வைத்துக்கொண்டு அடுத்த படத்தில் அதனை சரிசெய்யவேண்டும். சில சமயங்களில் விமர்சனங்களிலிருந்து ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்படியில்லாதபோது அதனை அப்படியே கடந்துபோக விட்டுவிட வேண்டும். மற்றபடி அதனை சார்ந்தே இருக்கவேண்டியதில்லை. விமர்சனங்களிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் படத்தை உருவாக்க சேகரித்த விஷயங்களை வைத்து வெப் சீரிஸ் செய்வதாக கேள்விப்பட்டோம். உண்மையா?

உண்மையில், நானும், ஆராய்ச்சியாளர்களும் சேகரித்து வைத்த தகவல்களை வைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது ராம் மத்வானி ஜாலியன் வாலாபாக் பற்றி படம் எடுக்கவிருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் என்னிடம் கேட்டால் நான் சேகரித்து வைத்த விஷயங்களை அவருக்கு கொடுத்து விட நினைத்தேன். நான் படத்திற்காக ஏராளமான நூல்களை படித்து ஏராளமான விஷயங்களை குறித்து வைத்திருந்தேன். 

படத்தில் நிறைய சோதனை முயற்சிகளை செய்திருக்கிறீர்களே? குறிப்பாக ஃபிளாஷ்பேக் காட்சிகளில். .. இதுபோன்ற காரணங்களால் உங்கள் படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதை உணர்கிறீர்களா?

எதிர்பார்ப்புகள் என்றால் எனக்கு பெரிய பயம். எனவே, என்மீது அதிக எதிர்பார்ப்புகளை வைக்காதீர்கள். நான் அடுத்து செய்யும் படம் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்காது. நான் செய்யும் படங்கள் முடிந்தளவு என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் தன்மையில் அமைந்திருக்கின்றன. சினிமாவைத் தாண்டியும் பல்வேறு விஷயங்களை விவாதித்து வருகிறேன். எனவே என் மேல் அதிக எதிர்பார்ப்புகளை என்மீது வைக்காதீர்கள். 


டைம்ஸ் ஆப் இந்தியா

ரச்சனா துபே


கருத்துகள்