ஒருவர் இந்து என்பதை வன்முறைக்கும்பல்கள் முடிவு செய்கின்றன! - ஷோபா டே, எழுத்தாளர்

 

 

 

 

Has Narendra Modi's Hindutva ideology destroyed India's ...

 

 

 

நான் எப்படிப்பட்ட இந்து என்பதை யார் முடிவு செய்வது?

ஷோபா டே(TOI)


இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் நான் என்னை மோசமான நபராக உணர்கிறேன். அடையாளம் கண்டுள்ளேன். இந்து என்ற அடையாளம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்து பெற்றோருக்கு பிறந்தேன். இந்து வழியில் வாழ்கிறேன். இதில் வெற்றி, தோல்வி, தேர்ச்சி, தேர்ச்சி பெறவில்லை என்றெல்லாம் சொல்ல ஏதுமில்லை. கூடுதலான எந்த பலன்களையும் நாம் இந்து என்பதற்காக பெற்றதில்லை.


எனக்கு இருக்கும் தகுதிகளின்படி பார்த்தால் இன்றைய இந்தியாவில் நான் மோசமான இந்துவாக தோன்றுகிறது. இன்னும் கூடுதலான திறமைகளை வளர்த்துக்கொண்டால்தான் இந்துவாக இந்தியாவில் வாழமுடியும் போல தோன்றுகிறது. நான் இந்து என்பதைக் காட்ட தனி அடையாளமாக பேட்ஜ் ஏதாவது அணிய வேண்டுமா என்ன? இப்படி செய்தால் அது பொது இடத்தில் உள்ளாடைகளை எடுத்து வெளியே காட்டுவது போலத்தானே இருக்கும். இந்து என்பதை வெளிக்காட்டி பிறரை விட அதிக சலுகைகளை பெறுவது தவறானதாக கருதுகிறேன். இதைக்கூட பலரும் விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பேசுவார்கள். இதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை.


அண்மையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் எழுதிய நூல் ஒன்றுக்காக இந்து மதவாதக்கூட்டம் அவரது வீட்டில் நெருப்பை பற்றவைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளது. நான் சல்மானின் நூலை பரிந்துரைக்கவோ, அவர் இந்து பற்றி கூறிய கருத்துகளை ஆதரிக்கவோ இல்லை. ஒருவர் சொன்ன கருத்திற்காக அவரின் வீடு புகுந்து தாக்குவது, பொருட்களை சேதப்படுத்துவதை இந்துக்களுக்காக என்று எப்படி நியாயப்படுத்துவத என்று எனக்கு புரியவில்லை. இந்த தாக்குதல் தவறு என ஆட்சியில் உள்ள அரசின் தலைவர்கள் ஒருவர் கூட அதனைக் கண்டிக்கவேயில்லை. இதுதான் எதிர்வரும் ஆபத்துகளை உணர்த்துவது போல இருக்கிறது

 

Hindutva ideology is real threat to Indian Constitution ...

இன்று முஸ்லீம்களை வசைபாடும் வார்த்தைகள் அதிகரித்து வருகின்றன. மணமகனாக அவர்கள் பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்தாலும் கூட மத அடையாளமாக முஸ்லீம் என்பதற்காக புற்க்கணிக்கும் போக்கு உருவாகும் என்று தெரிகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் தங்களது மதத்திற்காக பத்மஶ்ரீ கங்கணாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமா என்ன? முஸ்லீம் மக்களும் நடிகையர் போல போலி ரத்தம் இல்லாமல் தோட்டாக்களை எதிர்கொண்டு ரத்தம் சிந்தி சுதந்திரத்திற்காக போராடியுள்ளன்ர. வரலாற்று நிகழ்ச்சிகளை ஸ்டூடியோவில் டூப்புகளை வைத்து எளிதாக செய்துவிடமுடியுமா என்ன? அவர்கள் சினிமாவைப் போல போலி ரத்தம் சிந்தவில்லை. உண்மையில் அரும்பாடுபட்டு உயிரை தியாகம் செய்து இந்தியாவை அந்நியர்களிடமிருந்து மீட்டுள்ளனர்.


அடுத்து உத்தரப்பிரதேசம் மற்றும் பொது தேர்தல் வரவிருக்கிறது. எனவே அதற்கான தயாரிப்பில் ஆளும் கட்சி இருக்கிறது. அயோத்தியாவில் ராமர் கோவிலை அலங்கரித்து கட்டுவதால் இந்தியாவில் உள்ள பிரச்னைகளை தீர்த்துவிடமுடியாது. முஸ்லீம்களை பாதுகாத்தார் என்ற காரணத்தாலேயே மத்திய அரசு அவரைப் பற்றிய பாடங்களை மாணவர்களின் பாடநூல்களிலிருந்து நீக்கி வருகிறது. இதற்கான விலையை இந்தியாவினால் கொடுக்க முடியுமா?


இன்று இந்து என்பதை அரசியல்மயப்படுத்தப்பட்டதாக திணிக்கப்பட்டதாக மாற்றிவிட்டார்கள். தொன்மையான மதத்தை பிறர் பார்த்து பயப்படும்படியான தன்மையில் மாற்றியமைத்துள்ளது மதவாத கும்பல் கூட்டம். பொதுதேர்தல், மாநில தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் இந்தியாவில் இந்து மதம் பிழைத்திருக்கும். அதிலுள்ள அரசியல் அதனை அழித்துவிட முடியாது என்பதே உண்மை. இப்படி பேசுவதற்காக என்னை சிக்குலர் என்று கூட சிலர் அழைக்கலாம். நான் எனது மனதில் கொண்டுள்ள நம்பிக்கையை, உண்மையை இவை ஏதுமே மாற்றாது. நான் என்னை இந்துவாகவே நினைக்கிறேன். அப்படியேதான் வாழ்கிறேன். இதை எடுத்து்க்கொள்ளலாம். அல்லது அப்படியே விட்டுவிடுங்கள்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்