வலைத்தள மார்க்கெட்டிங் மூலம் வளரும் கைத்தறி துணி வணிகம்!
அரியலூர் அம்சவள்ளி - TNIE |
கைத்தொழிலைக் காப்பாற்றும் அரசின் வலைத்தளம்!
அரியலூரிலுள்ள எலையூரைச் சேர்ந்தவர், அம்சவள்ளி. இவரது வருமான ஆதாரமே கைத்தறிதான். அவரது வீட்டில் இடைவெளி இன்றி கைத்தறி இயக்கப்படும் சத்தம் வந்துகொண்டே இருக்கிறது. தொழிலுக்காக ஆதார பொருட்கள் இல்லாத காரணத்தால் தொழிலில் வருமானம் குறைந்துவிட்டது. நாங்கள் மொத்தமாக சேலைகளை ஆந்திரா, கேரளத்திற்கு விற்று வருகிறோம். விலை 750 முதல் 1,500 வரை உள்ளது. பட்டுப்புடவையின் விலை 3 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வரும். பொதுமுடக்கம் காரணமாக சேலைகளுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளூரிலேயே விற்று வருகிறோம் என்றார்.
வருமானம் குறைந்துவிட்டதால், தனியார் பள்ளிக்கு அனுப்பிவைத்த இரு பிள்ளைகளில் ஒருவரை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார். தினசரி உணவுப்பொருட்களுக்கு ரேஷன் கடைகளையே நம்பியுள்ளார் அம்சவள்ளி. இப்போது அரசு நலிந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இணையத்தளத்தை தொடங்கி அதில் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பு உருவாக்கியுள்ளது. இதனால் அம்சவள்ளி தனது தொழில் குறித்த நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இப்போதுவரை வலைத்தளத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கான விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் ஆச்சரியகரமாக தமிழச்சி தங்கபாண்டியன் இரு புடவைகளை வாங்கியுள்ளார். இதன்மூலம் சுய உதவிக்குழுவில் உள்ள 7 ஆயிரம் பெண்களும் இந்தியா முழுக்க புடவைகளை சரியானவிலைக்கு விற்க முடிகிறது.
தினசரி இரண்டு சேலைகளை நெய்து அதனை சேர்த்து வைத்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாத்ததிற்கு ஒருமுறை மொத்தமாக சேர்த்து வைத்து விற்கிறார்கள். இதற்கான பணம் விற்பனைக்குப் பிறகு ஒருவாரத்தில் கிடைத்துவிடுகிறது. “நெசவாளர்கள் விற்பதற்கான இணையத்தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதன்மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் அவர்களே தங்கள் பொருட்களை விற்கலாம். அதற்கான உரிய தொகையைப் பெறலாம்” என்றார் மாவட்ட விற்பனை மேலாளரான கவிதா. மாநில அரசு தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்தால் நெசவாளர்களின் வாழ்க்கை மேம்பட வாய்ப்புள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
திருச்செல்வன்
கருத்துகள்
கருத்துரையிடுக