நமது உடலில் தெரியும் நரம்புகள் நீலநிறமானவையா? - பதில் சொல்லுங்க ப்ரோ?
பதில் சொல்லுங்க ப்ரோ?
மனிதர்களின் உடல் வெப்பநிலை வெப்பமயமாதலை கூட்டுமா?
மனிதர்களின் உடல் வெப்பநிலை என்பது நூறு வாட் அளவுதான் இருக்கும். இதனை வழக்கொழிந்து போன குண்டு பல்பின் திறனோடு ஒப்பிடலாம். மக்கள்தொகை கூடினாலும் கூட வெப்பநிலை பெரிய பிரச்னையாக இருக்காது. பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புதான் சூரியனின் வெப்பம் பூமியில் அதிகம் படுவதற்கு காரணம். கரிம எரிபொருட்கள், பசுமை இல்ல வாயுக்களின் அளவுதான் வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம்.
நமது நரம்புகள் நீலநிறமாக இருப்பது உண்மையா?
ரத்தம் சிவப்பாக இருக்க காரணம், ரத்த சிவப்பணுக்கள்தான். இதில் ஆக்சிஜன் இருந்தால் பளிச்சென சிவப்பாகவும், இல்லையென்றால் அடர் சிவப்பாகவும் மாறும். ரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது. கையில் பார்க்கும்போது நரம்புகள் சிலருக்கு புடைப்பாக நீலநிறமாக, அல்லது பச்சை நிறமாக தெரியும். இது ஒளியின் சிதறல்களால் ஏற்படுகிறது.
சிவப்பு நிறம், நீளமான அலைநீளம் கொண்டது. எனவே அது உடலில் எளிதாக பயணிக்க முடியும். இதனால் ரத்த த்தில் உள்ள ஹீமோகுளோபினால் இந்த நிறம் கிரகிக்கப்படுகிறது. நீலநிறம் என்பது குறைந்த அலைநீளம் கொண்டது. எனவே உடலால் எளிதாக எதிரொலிக்கப்படுகிறது. எனவே நரம்புகள் நீலநிறமாக தெரிகிறது. சிவப்பு நிறம் உடலால் உள்வாங்கப்டுவதால் அது தெரிவதில்லை. போதைப்பொருட்கள் பயன்பாட்டைக் குறைக்க நைட் கிளப்புகளில் நீலநிற ஒளியை கழிவறையில் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஒருவர் உடலிலுள்ள நரம்புகளை சரியாக பார்க்க முடியாது. எனவே போதை ஊசியை செலுத்துவது கடினம்.
bbc sf
கருத்துகள்
கருத்துரையிடுக