பசுமை விருதுகளைப் பெற்ற இயற்கை செயல்பாட்டாளர்கள்!
சுந்தர்லால் பகுகுணா |
சுந்தர்லால் பகுகுணா
சிப்கோ இயக்கத்தை தொடங்கிய தலைவர். இமாலயத்திலுள்ள மரங்களை காக்கும் இயக்கம், காந்திய அணுகுமுறை போராட்டத்திற்காக புகழ்பெற்றது. 1980-2004 வரையிலான ஆன்டி டெரி டாம் எனும் இயக்கத்தை நடத்தி தலைமை தாங்கினார். சிப்போ இயக்கம் இவரது மனைவியினுடையது. உத்தரகாண்டில் மரங்களை ஒப்பந்ததாரர் வெட்ட வந்தனர்.அப்போது போராட்டக்காரர்கள் மரத்தை வெட்டுவதை தடுக்க மரத்தைக் கட்டிப்பிடித்து தடுத்தனர். 1981-83 வரையிலான காலத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மரங்களை வெட்டக்கூடாது என பிரசாரம் செய்தார்.
இந்திராகாந்தியை சந்தித்து மரங்களை வெட்டுவதற்கான தடையைப் பெற்றார். இதனால் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒருவர் மரங்களை வெட்ட முடியும்.
சாலுமாரதா திம்மக்கா |
சாலுமாரதா திம்மக்கா
கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 385 ஆலமரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஹூலிகல் குதூர் நெடுஞ்சாலையோரம் இப்பணியை செய்துள்ளார். குவாரியில் வேலை செய்த திம்மக்காவுக்கு முறையான கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்சொன்ன மரங்கள் இல்லாமல் எட்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வாங்கினார். திம்மக்காவும் அவரது கணவரும் தங்களது சேமிப்பை பயன்படுத்தி மரக்கன்றுகளை ஊன்றினர். இதன் மதிப்பு இன்றைய மதிப்பில் பல லட்சம் பெறும். திம்மக்கா நட்ட மரங்களை இப்போது கர்நாடக மாநில அரசு தனது பொறுப்பில் எடுத்து பராமரித்து வருகிறது.
ஹிம்மத் ராம் பாம்பு |
ஹிம்மத் ராம் பாம்பு
ராஜஸ்தானைச் சேர்ந்த இயற்கை செயல்பாட்டாளர். தனது கிராமத்தின் அருகில் பதினோராயிரம் மரக்கன்றுகளை நட்டு காடு ஒன்றை உருவாக்கியதற்காக பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை செய்துள்ளார். பல்வேறு விலங்குகளை பணத்திற்காக கடத்துவதையும் தடுக்கும் செயல்பாடுகளை முன்னெடுத்து செய்து வருகிறார்.
துளசி கௌடா |
துளசி கௌடா
கர்நாடகத்தின் ஹோனல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி கௌடா. மரங்களை பாதுகாத்து பராமரித்த பணிக்காக பத்ம பூஷன் விருது பெற்றவர். துளசி, 30 ஆயிரம் மரக்கன்றுகளை விதைத்துள்ளார். முறையாக பள்ளி சென்று படிக்காதபோதும், அரசின் வனத்துறையுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நடும் பணியை செய்தார். தாவரங்கள் பற்றி அறிவு அபாரமாக கொண்டவர் என்பதால் மரத்தின் தேவதை என்று அழைக்கிறார்கள். ஹாலக்கி ஒக்கலிகா எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.
1999ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசின் ராஜ்யோத்சவா விருதைப் பெற்றுள்ளார்.
சண்டி பிரசாத் பட் |
சண்டி பிரசாத் பட்
1964 ஆம் ஆண்டு கோபேஸ்வரர் தசோலி கிராம் ஸ்வராஜ்யா சங்த்தை தொடங்கினார். இதுதான் சிப்கோ இயக்கத்தின் தாய் நிறுவனமான மாறியது. 1982ஆம் ஆண்டு ரமோன் மகசசே விருதும், 2005ஆம் ஆண்டு பத்ம பூசனும் வழங்கப்பட்டது. சமூக சூழலியலை முதன்முதலில் செயல்படுத்திய மனிதர். 2013ஆண்டு காந்தி அமைதி பரிசைப் பெற்றுள்ளார்.
பினான்சியல் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக