பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்! - பேராசிரியர் மைக்கல் அப்பன்ஹெய்மர்

 




michael-oppenheimer-climate-refugees-website - The Years Project
மைக்கேல் அப்பன்ஹெய்மர்


பருவநிலை மாற்றம்

உலகில் பருவநிலை மாற்றத்திற்கு அதிக விலை கொடுக்கவேண்டியிருப்பவர்கள், குழந்தைகள்தான். இப்போது அவர்களே பிறருக்கும் சேர்த்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். யுனிசெப்பின் கணக்கீடுப்படி, ஒரு பில்லியன் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுமே பஞ்சம், வெப்ப அலைகள், வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 

1960ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, எதிர்வரும் ஆண்டுகளில்  குழந்தையின் பிறப்பு கூட மேற்சொன்ன சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காற்று மாசுபாட்டால் குழந்தைகள் 90  சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் ஏழைக்குழந்தைகள் அதிக விலையைக் கொடுக்கவேண்டும். 2030ஆம் ஆண்டில் 132 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 82.4 மில்லியன் மக்கள் வேறுவழியின்றி பிற இடங்களுக்கு இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். உணவு, நீர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளின் வீடுகள் இல்லாமல் போகும். கூடவே இயற்கை பேரிடர்களாக பஞ்சம், வறட்சி, வெப்ப அலைகளின் தாக்கமும் இருக்கும்.

2

Michael Oppenheimer | Center for Policy Research on Energy and the  Environment (C-PREE)
மைக்கேல் அப்பன்ஹெய்மர்

மைக்கேல் அப்பன்ஹெய்மர்

பேராசிரியர், புவி அறிவியல், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்

பருவநிலை மாற்ற பிரச்னைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என நினைக்கிறீர்களா?

நேரடியான, மறைமுகமான பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. வெப்பம் அதிகரித்து வெப்ப அலைகளின் தாக்குதல் ஏற்படுவது முக்கியமான பாதிப்பு. இது நேரடியாகவே மக்களை பாதிக்கிறது. இதில் வறுமையான நிலையில் உள்ளவர்களும், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வெள்ள பாதிப்புகள் ஏற்படும்போது, அதிலிருந்து குழந்தைகள் எளிதாக காப்பாற்ற முடியாது. இது வயது வந்தவர்களுக்கே மிக கடினமான செயல். வல்லரசு நாடுகளிலும் வறுமை நிலையில் உள்ள இனக்குழுக்களுக்கு பருவநிலை மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். 

காற்று மாசுபாடு காரணமாக மக்கள் நோய்களுக்கு உள்ளாகுவது ஏற்கெனவே தொடங்கிவிட்டது. நாம் கரிம எரிபொருட்களை பயன்படுத்தும் வரையில் காற்று மாசுபாட்டை குறைக்கவே முடியாது. காடுகளின் அழிவு, வேளாண்மைக்கான நிலம் உருவாக்குதல் என அனைத்துமே சூழலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துபவை. குறிப்பாக, குழந்தைகளுக்கும் இவை சிக்கலை கொண்டு வரும். 

மாசுபாடு காரணமாக உணவு விளைச்சல் மெல்ல குறையத் தொடங்கும். இதன் விளைவாக மக்கள் சாப்பிடும் உணவின் அளவு குறையத்தொடங்கும். நாளடைவில் உலக நாடுகளில் பஞ்சம் ஏற்படலாம். பருவமழை தவறுவது, மேக உடைப்பு என பல்வேறு விதமான சூழ்நிலைகளால் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும். 

கலாசாரம் சார்ந்த இழப்பு பற்றி எழுதியிருந்தீர்கள். அதுபற்றி விளக்கமாக சொல்லுங்கள்?

உலகம் முழுக்க நாடுகளின் தொன்மை கலாசாரங்கள் அழிவை சந்தித்து வருகின்றன. வெனிசிலுள்ள கதீட்ரல்  செயின்ட் மார்க்ஸ் சிலைகள் அதிகரிக்கும் கடல் மட்ட உயர்வினால் ஆபத்தைச் சந்தித்துள்ளது. இதுபோல வரலாற்று சின்னங்கள் அழிந்துபோனால், குழந்தைகள் வரலாறு பற்றி என்ன விதமான புரிதலைக் கொண்டு வளருவார்கள்? பிறர் கூட இதுபோன்ற மாற்றங்களை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் குழந்தைகளுக்கு இது கடினமாக இருக்கும். 

குழந்தைகளுக்கு எப்படி சூழல் பற்றி கற்பிப்பது?

தற்போதுள்ள சூழல் நிலைமைகள் பற்றி அவர்களுக்கு கூறவேண்டும். இதில் கூடுதலாக, சூழல் பற்றிய நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். உலகநாடுகள் சூழலை பாதுகாக்கும் திட்டங்களை வேகமாக செயல்படுத்தவேண்டும். இந்த சமூகத்தை உருவாக்குவதில்  குழந்தைகளையும் பங்கேற்க வைக்கவேண்டும். நான் மாணவர்களுக்கு சூழல் பற்றி கற்பித்து வருகிறேன். அவர்களுக்கு நாளை பற்றிய நம்பிக்கையையும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறேன். இதன்மூலம் அவர்கள் வளர்ந்துவரும்போது மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

Oppenheimer testifies in Congress on the history of climate science
மைக்கேல் அப்பன்ஹெய்மர்

குழந்தைகளை சூழல் ஆபத்துகளிலிருந்து எப்படி காப்பாற்றுவது?

வெப்ப அலைகள், காற்று மாசுபாடு ஆகியவை பற்றிய கவனத்தை ஒருவர் முதலில் கொண்டிருக்கவேண்டும். அமெரிக்காவில் வெப்ப அலைகளிடமிருந்து பாதுகாக்க குளிர்சாதன வசதி கொண்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரை பாதுகாக்க முடியும். இதுபற்றிய விவரங்களை அனைத்து மக்களுக்கும் விளம்பரம் செய்யவேண்டும். இதுபோல மக்களுக்கான மையங்கள் தொடங்குவது இப்போதைக்கு அவசியம். நீண்டகால நோக்கில் பார்த்தால் கரிம எரிபொருட்களை விட்டு புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களை நோக்கி நகர வேண்டும். இந்த வகையில் இந்தியா பற்றி முன்னமே சூரிய ஆற்றல் கருவிகள், சாதனங்கள் பற்றி பேசியிருக்கிறேன். இந்தியாவில் இதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அரசை மக்கள் ஆதரித்தால் புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்கள் வளரும் வாய்ப்புள்ளது. 

கொள்கை வகுப்பாளர்கள் குழந்தைகளையும் பொருட்படுத்தி கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்கவேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். இதைப்பற்றி சற்று விளக்குங்கள். 

பருவநிலை மாற்றம் என்பது தொழில்நுட்பம் அல்லது பொருளாதாரம் சார்ந்தது அல்ல. அரசியல் பிரச்னை. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுத்து வந்தாலும் சூழல் பாதிப்புகளைப் பற்றி குறைந்தளவு ஆர்வமே காட்டி வருகிறார்கள். இன்று உலக நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை இன்னுமே அவர்கள் உணரவே இல்லை. அனைத்து நாடுகளிலும் உள்ள தலைவர்கள் தங்கள் மேல் நம்பிக்கை வைத்து சூழல் பாதிப்புகள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இப்பிரச்னையை நாம் உருவாக்கவில்லையென்றாலும் இதனை சரிசெய்வதற்கான யோசனைகளை தேடுவது அவசியம். 

டைம்ஸ் எவோக்

ஸ்ரீஜனா மித்ராதாஸ் 




கருத்துகள்