அரசியல்வாதிகள் எழுதிய நூல்கள்! - காந்தி முதல் சல்மான் குர்ஷித் வரை....

 



சீதாராம் யெச்சூரி





தி ஸ்டோரி ஆப் மை எக்ஸ்பரிமென்ட்ஸ் வித் ட்ரூத் 1927

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

ஓம் புக்ஸ்

295

சத்திய சோதனை என்றாலே எழுதியது யார் என தொடக்கப்பள்ளி மாணவர் கூட சொல்ல முடியும். தென் ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராக பணியாற்றியது முதல் இந்தியாவுக்கு வந்து சுதந்திரப்போராட்டத்தில் இணைவது வரையிலான பயணம்தான் நூலின் பேசுபொருள். தனது வாழ்க்கையை பகிரங்கமாக வெளிப்படையாக பேசிய அரசியல்வாதி, போராளி காந்தி மட்டும்தான். இதனால் இன்றுவரையும் இவரை வலதுசாரி மதவாத கும்பல்கள் என்ன முயன்றும் புறக்கணிக்கவே முடியவில்லை. 




மை ட்ரூத் 1980

இந்திரா காந்தி

விஷன் புக்ஸ்

195

சிறுவயதிலிருந்து இந்திராகாந்தியின் வாழ்க்கையைப் பேசுகிற நூல் இது. கூடவே அரசியலில் உயர்வு, இறக்கம் என சொந்த வாழ்க்கையைப் பேசுவதோடு இந்தியாவின் வரலாற்றையும் உள்ளடக்கிய முக்கியமான நுல். 


ட்வென்டி ஒன் போயம்ஸ் 2001

வாஜ்பாய்

பெங்குவின் 

299

எண்பத்து எட்டு பக்கங்களை கொண்ட நூல்தான். வன்முறை, அதிகாரம், பாகுபாடு ஆகியவற்றைப் பற்றி பேசுகிற கவிதைகளைக் கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை பற்றிய பேச்சுகளையும் கொண்டுள்ள நூல் இது. 



கபிதா பிதான் 2020

மம்தா பானர்ஜி

டேஸ் பதிப்பகம்

1200

தாகூரின் கீதாபிதான் என்ற நூலால் ஊக்கப் பெற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா எழுதியுள்ள நூல் இது. 951 பக்கங்களைக் கொண்ட நூல் 1200க்கு விற்கிறார்கள். 946 கவிதைகளை நூல் கொண்டுள்ளது. மம்தா தீதி அனைத்து விஷயங்களையும் கவிதைக்குள் கொண்டு வந்து அழகாக்கியிருக்கிறார். 



தரூசாரஸ்  2020

ச சி தரூர்

பெங்குவின்

399

காங்கிரஸ் கட்சியின் முக்கியமான சிந்தனையாளர், எழுத்தாளர். ஆண்டுக்கு இரண்டு நூல்களேனும் எழுதிவிடுவார். அவை சமகாலத்தன்மை கொண்டிருக்கும் என்பதை தனியாக கூறவேண்டியதில்லை. இதிலும் வேடிக்கையான வார்த்தைகளை உருவாக்கி வாசகர்களுக்கு வாசிப்பு சுவாரசியத்தை தருகிறார். நூலின் அட்டைத்தலைப்பே கூட அப்படியானதுதான். 


லெப்ட் ஹேண்ட் ட்ரைவ்

சீதாராம் யெச்சூரி

பிரஜாசக்தி ஹவுஸ்

325

கம்யூனிஸ்ட்கள் பற்றி கலாசார அரசியல் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. இதனை படிக்கும்போது கம்யூனிஸ்ட்களின் கருத்தியல் என்ன என்பதை எளிதாக அறியலாம். 



விசிபிள் முஸ்லீம்ஸ், இன்விசிபிள்

சிட்டிசன் - அன்டர்ஸ்டேண்டிங் இஸ்லாம் இன் இந்தியன் டெமோகிரசி 2018

சல்மான் குர்ஷித்

595

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் வாழ்க்கை பற்றிய வலிமையான சித்திரத்தை சல்மான்  தனது எழுத்தின் வழியே கட்டி எழுப்புகிறார். மதம், அதனை பின்பற்றும் முறை ஆகியவற்றை சிறப்பாக வாசகர்களுக்கு எடுத்துக்காட்டுகிறார். 


இந்தியா டுடே 



கருத்துகள்