பழமையான கட்டிடங்களை நவீனமான விழாக்களுக்கு இடமாக மாற்றுகின்றனர்! - லஸ் இல்லம், செட்டியார் வீடு

 The Luz House | Rental Hall for Weddings, Parties & Events
லஸ் இல்லம், சென்னைஆங்கிலேயர் கால வீடுகள், பழமையான வீடுகளை இப்போது நவீன தலைமுறையினர் கஃபே, இசை, தனிக்குரல் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களாக மாற்றி வருகின்றனர். 

அதில் முக்கியமான இடத்தை சொந்தமாக கொண்டிருக்கிறார் ஏஜிஎஸ் சினிமா இயக்குநரான அர்ச்சனா கல்பாத்தி. பிரைம்ரோஸ் என்ற இல்லம் இவருடைய கணவரின் தாத்தா வழியில் கிடைத்த சொத்து. இது எங்களுடைய குடும்பத்தில் பல்வேறு நினைவுகள் கொண்ட வீடு. இதன்மூலம் மக்களும் தங்களுடைய புதிய நினைவுகளை உருவாக்கிக்கொள்ளலாம். என்கிறார். இப்போது இந்த வீட்டைப் புதுப்பித்து பல்வேறு விழாக்களுக்கு இடம் கொடுக்கும்படி மாற்றியிருக்கிறார் அர்ச்சனா. 

வீட்டில் நிறைய இடம் இருக்கிறது. அதற்கு பின்னால் உள்ள மாமரம் வீட்டைப் போலவே பழமையானது. அதில்தான் எங்கள் குடும்பத்தினரின் பல்வேறு மகிழ்ச்சியான நினைவுகள் நடந்தன என்று நினைவுகூறுகிறார் அர்ச்சனா. பிரைம்ரோஸ் 131 எனும் இந்த வீடு லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ளது. இதைப்போலவே செட்டியார் வீடு எனும் ஏவிஎம்மிற்கு சொந்தமான இடமும் கூட மக்களுக்காக 2018ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதில் ஏறத்தாழ எண்பதிற்கும் மேற்பட்ட விழாக்கள் நடைபெற்றுள்ளன. திரைப்படம், டிவி என அனைத்திற்கும் பொருத்தமான இடமாக வீடு உள்ளது. அண்மையில் வெளியான தலைவி படம், குயின் என்ற வெப்சீரிஸ் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

ஏவி மெய்யப்ப செட்டியார் 1965ஆம் ஆண்டு கட்டியதுதான் செட்டியார் வீடு. இதில் அப்போதே நீரூற்று, சிறு பாலங்கள், ஜப்பான் ரக காட்டேஜ் என அந்தகாலகட்டத்தில் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டிருந்தது. நடிகர்கள் அமிதாப் பச்சன், ராஜ்கபூர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு செட்டியார் விருந்துகளை அளித்துள்ளார். 

லஸ் ஹவுஸ் எனப்படும் இடம், பாரி அண்ட் கோ என்ற நிறுவனத்தில் வேலைபார்த்த துபாஷி  மொடவெரப்பு தேரா வெங்கடஸ்வாமி நாயுடு என்பவருக்கு சொந்தமானது. அவர் அப்போதே லஸ்சில் இருபது ஏக்கர் நிலத்தை வாங்கிப்போட்டிருக்கிறார். இப்போது ஏழாவது தலைமுறை வந்துவிட்டது. இந்த இடத்திலும் மாதம் பத்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலேயர் காலகட்ட கட்டுமானத்தை அப்படியே பராமரித்து வருகிறார்கள். 

கட்டிடம் என்பது வெறும் சுண்ணாம்பும், கற்களும், சிமெண்டுமல்ல. அது அங்கே வாழ்ந்த மனிதர்களின் கூடவே வாழ்கிறது. காலத்திற்கும் ஏராளமான நினைவுகளை தேக்கி வைத்துக்கொண்டே இருக்கிறது. இதனால்தான் பழமையான கட்டிடங்களை பாதுகாப்பது என்பது பலருக்கும் முக்கியமானதாக தோன்றுகிறது. ஒருவகையில் அது தொடர்புடையவர்களின் வரலாறும் கூடத்தான். 

டைம்ஸ் ஆப் இந்தியா

காமினி மாத்தாய்கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?